மார்ச் 5ல் அறிமுகமாகும் முன் Nothing Phone 4a சீரிஸ் விலை வெளியானது

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 5 மார்ச் 2026 19:22 IST
ஹைலைட்ஸ்
  • Nothing Phone 4a சீரிஸ் விலை வெளியானது
  • Phone 4a உடன் Phone 4a Pro மாடலும் வெளியாகும்
  • Nothing Phone 4a இந்தியாவில் 8GB RAM + 128GB விலை ரூ.31,999

Nothing Phone 4a series will be launched in India and select global markets on March 5

Photo Credit: Nothing

Nothing நிறுவனத்தின் புதிய Nothing Phone 4a சீரிஸ் இந்த வாரம் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாக உள்ளது. அந்தண் வடிவமைப்பு மற்றும் சில அம்சங்களை முன்கூட்டியே நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில், இந்தியாவில் விலை விவரங்கள் தற்போது கசிந்துள்ளன. Phone 4a உடன் Phone 4a Pro மாடலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீரிஸ் Flipkart மூலம் விற்பனைக்கு வரும். இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் இதன் விலை குறித்து இங்கே விரிவாக காணலாம். டிப்ஸ்டர் Debayan Roy (@Gadgetsdata) வெளியிட்ட தகவலின்படி, Nothing Phone 4a இந்தியாவில் 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் மாடலுக்கு ரூ. 31,999 முதல் விலையில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. மேலும் 8GB+256GB மற்றும் 12GB+256GB மாடல்களும் வெளியாகலாம். ஆனால் அவற்றின் விலை விவரங்கள் வெளியாகவில்லை.

Phone 4a-வில் UFS 3.1 ஸ்டோரேஜ் மற்றும் 50MP டெலிபோட்டோ கேமரா (3.5x ஒப்டிக்கல் சூம்) இடம்பெறும் என தகவல். Nothing Phone 4a Pro சுமார் ரூ. 40,000 முதல் விலையில் வரலாம் என்றும், தனித்துவமான வடிவமைப்புடன் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அறிமுகமான Nothing Phone 3a ரூ. 22,999 முதல் விலையில் வெளியானது. அதேபோல் Phone 3a Pro ரூ. 27,999 முதல் விலையில் அறிமுகமானது.

அம்சங்கள்:

Nothing Phone 4a சீரிஸ் மார்ச் 5 அன்று இந்தியா மற்றும் சில உலக சந்தைகளில் அறிமுகமாக உள்ளது. Pink மற்றும் White நிறங்களில், பின்புறம் டிரிபிள் கேமரா அமைப்பு மற்றும் Transparent வடிவமைப்புடன் வெளியாகும்.

இந்த சீரிஸ் Qualcomm Snapdragon சிப்செட்டில் இயங்கும் என நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. Phone 4a-வில் Snapdragon 7s Gen 4 SoC இடம்பெறலாம். மேலும் 6.7 இன்ச் AMOLED திரை (1.5K ரெசல்யூஷன்), 5,400mAh பேட்டரி மற்றும் 50W வேக சார்ஜிங் வசதி கிடைக்கலாம்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Nothing Phone 4a, UK brand, New Model Mobile, India Launch
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. விவோ X300 FE Snapdragon 8 Gen 5, 50MP Telephoto Camera உடன் அறிமுகம்
  2. மார்ச் 5ல் அறிமுகமாகும் முன் Nothing Phone 4a சீரிஸ் விலை வெளியானது
  3. டெக்னோ பாப் எக்ஸ் இந்தியாவில் அறிமுகமாகும் தேதி; 'டெக்னோ ஸ்பார்க் கோ 3'-ன் மறு பதிப்பா இது?
  4. 13-இஞ்ச் Liquid Retina திரை, Apple A18 Pro சிப் MacBook Neo இந்தியாவில்
  5. டிசைனிங் கத்துக்கணுமா? அடோப் டூல்ஸ் இப்போ ஃப்ரீ! இந்திய மாணவர்களுக்கு 'அடோப்' தந்த செம்ம கிப்ட்
  6. WhatsApp குரூப்ல இப்போதான் சேர்ந்தீங்களா? கவலைப்படாதீங்க! பழைய 100 மெசேஜ்களை இனி நீங்க படிக்கலாம்
  7. ஜியோ ஹாட்ஸ்டார் சாட்ஜிபிடி வேற லெவல் என்டர்டைன்மென்ட்! இனி நம்ம ஊர் மொழியிலேயே பேசி படங்களைத் தேடலாம்
  8. சாட்ஜிபிடி இப்போ நம்ம காலேஜுக்குள்ளயே வந்துடுச்சு! 1 லட்சம் மாணவர்களுக்கு ஸ்பெஷல் கோர்ஸ்.. ஓபன் ஏஐ-யின் அதிரடி பிளான்
  9. டெல்லியில் 1,100-க்கும் மேற்பட்ட போலி நதிங், CMF பொருட்கள் பறிமுதல்! கூகுள் போல நதிங் நிறுவனமும் எச்சரிக்கை - முழு விவரம்
  10. இனி இன்டர்நெட் வேகம் வேற லெவல்ல இருக்கும்! கடலுக்கு அடியில் கூகுள் போடும் புதிய கேபிள் ரூட்கள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.