விலை குறைக்கப்பட்ட 'நோக்கியா 6.1', இப்போது 6,999 ரூபாய்!

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 8 ஜூலை 2019 10:43 IST
ஹைலைட்ஸ்
  • GB RAM + 32GB சேமிப்பு அளவு ஸ்மார்ட்போனின் விலை 6,999 ரூபாய்
  • 4GB RAM + 64GB சேமிப்பு அளவு கொண்ட ஸ்மார்ட்போனின் விலை 9,999 ரூபாய்
  • இந்த ஸ்மார்ட்போன் சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகமானது

இந்த விலை குறைக்கப்பட்ட நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் நோக்கியா தளத்தில் வெளியாகியுள்ளது

இந்தியாவில் 'நோக்கியா 6.1' ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலை குறைப்பின்படி நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் 6,999 ரூபாயிற்கு விற்பனையாகவுள்ளது. தற்போது, இந்த ஸ்மார்ட்போன், குறைக்கப்பட்ட விலை நோக்கியா இணையதளத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 3GB RAM + 32GB சேமிப்பு மற்றும் 4GB RAM + 64GB சேமிப்பு என இரண்டு வகைகளில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமானது. ஸ்னேப்ட்ராகன்  630 எஸ் ஓ சி ப்ராசஸர், 3,000mAh பேட்டரி போன்ற சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

'நோக்கியா 6.1' ஸ்மார்ட்போன்: விலை!

நோக்கியா தளத்தில் மட்டுமே, இந்த குறைக்கப்பட்ட விலையில் விற்பனையிலுள்ள இந்த ஸ்மார்ட்போன், 3GB RAM + 32GB சேமிப்பு அளவு ஸ்மார்ட்போன் 6,999 ரூபாய் என்ற விலையிலும், 4GB RAM + 64GB சேமிப்பு அளவு கொண்ட ஸ்மார்ட்போன் 9,999 ரூபாய் என்ற விலையிலும் விற்பனையில் உள்ளது.

இந்த விலை குறைப்பு அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களின் தளத்தில் எதிரொலிக்கவில்லை.

இந்த ஸ்மார்ட்போன் சென்ற ஆண்டு 16,999 ரூபாய் என்ற துவக்க விலையுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விலை குறைப்பிற்கு முன்னதாக, நோக்கியா தளத்தில், 3GB RAM + 32GB சேமிப்பு அளவு நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் 8,999 ரூபாய் என்ற விலையிலும், 4GB RAM + 64GB சேமிப்பு அளவு கொண்ட நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் 10,999 ரூபாய் என்ற விலையிலும் விற்பனையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

'நோக்கியா 6.1' ஸ்மார்ட்போன்: சிறப்பம்சங்கள்!

அண்ட்ராய்ட் பை அமைப்பு கொண்டு செயல்படும் இந்த நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன், 5.5-இன்ச் FHD+ திரை, 16:9 திரை விகிதம் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர் ஸ்னேப்ட்ராகன்  630 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. 

இந்த ஸ்மார்ட்போன் 16 மெகாபிக்சல் அளவிலான பின்புற கேமராவையும், 8 மெகாபிக்சல் அளவிலான முன்புற செல்பி கேமராவையும் கொண்டுள்ளது.  

Advertisement

3,000mAh அளவிலான பேட்டரியையும் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். 4G மற்றும் வை-பை வசதி, ப்ளூடூத் v5.0,  USB டைப்-C சார்ஜிங் போர்ட், 3.5mm ஹெட்போன் ஜாக் ஆகியவற்றையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Great performance
  • Stellar build quality
  • Android One and no software bloat
  • Good battery life
  • Bad
  • Poor low-light camera performance
  • Iffy fingerprint sensor
 
KEY SPECS
Display 5.50-inch
Processor Qualcomm Snapdragon 630
Front Camera 8-megapixel
Rear Camera 16-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 3000mAh
OS Android 8.0
Resolution 1080x1920 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: , HMD Global, Nokia

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Instagram DM-களில் End-to-End Encryption நீக்கம்: இது என்ன என உங்களுக்கு தெரியுமா?
  2. AirPods Max 2 இந்தியாவில் அறிமுகம் – H2 சிப், Adaptive Audio, 20 மணி நேர பேட்டரி உள்ளிட்ட அம்சங்கள்
  3. Realme P4 Lite 5G இந்திய அறிமுக தேதி அறிவிப்பு; வடிவமைப்பு மற்றும் பேட்டரி விவரங்கள் வெளியீடு
  4. iQOO Z11x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: 7,200mAh பேட்டரி, 50MP கேமரா
  5. MacBook Neo-க்கு டச் ஸ்கிரீன் அப்கிரேடு வர வாய்ப்பு குறைவு; Mark Gurman தகவல்
  6. Microsoft-ன் Gaming Copilot AI உதவியாளர் 2026-ல் Xbox Series X, Xbox Series S கன்சோல்களில் வரும்: வெளியான தகவல்
  7. Huawei Enjoy 90 Pro Max, Huawei Enjoy 90 Plus அறிமுக தேதி அறிவிப்பு: Kirin சிப்செட்டுடன் வரும்
  8. Hubble Space Telescope மற்றும் Euclid Space Telescope இணைந்து எடுத்த Cat’s Eye Nebula-வின் புதிய அதிசயப் படம்
  9. Apple மடிக்கக்கூடிய iPhone ‘iPhone Ultra’ என அறிமுகமாகலாம்: விலை, மெமரி விவரங்கள் கசிந்தது
  10. Nothing Phone 4a, Nothing Phone 4a Pro இந்தியாவில் விற்பனைக்கு: விலை, சலுகைகள், அம்சங்கள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.