Motorola Razr (2019)-ன் முதல் விற்பனை மீண்டும் ஒத்திவைப்பு! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 15 ஏப்ரல் 2020 15:11 IST
ஹைலைட்ஸ்
  • மோட்டோரோலா, Razr (2019) விற்பனை தேதியை மே 6-க்கு ஒத்திவைக்கிறது
  • ஊரடங்கை நீட்டிக்க அரசு எடுத்த முடிவுக்குப் பிறகு, விற்பனையாகவுள்ளது
  • Motorola Razr (2019), 2,800mAh பேட்டரியைக் கொண்டுள்ளது

Motorola Razr (2019) விற்பனை, மே 6-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக, மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், Motorola Razr (2019) ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை மே 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Motorola Razr (2019) இந்தியாவில் மார்ச் 16 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. போனின் ஒரே 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.1,24,999 ஆகும். 


Motorola Razr (2019) விவரங்கள்: 

Motorola Razr (2019) 6.2 இன்ச் ஃப்ளெக்சிபில் OLED HD + டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. போனின் மேல் கவரில், இரண்டாம் நிலை 2.7 இன்ச் குயிக் வியூ பேனலும் உள்ளது. இது போனை திறக்காமல் செல்பி எடுக்க, notifications-ஐக் காண மற்றும் music playback கட்டுப்படுத்த அனுமதிக்கிறது. இந்த போன், ஆண்ட்ராய்டு 9 பை-ல் இயங்கும். இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 SoC-யால் இயக்கப்படுகிறது. 

போனில், 16 மெகாபிக்சல் முதன்மை கேமரா சென்சார் உள்ளது. போன் மடிந்த நிலையில் இருக்கும்போது செல்பி எடுக்க முதன்மை கேமரா அமைப்பைப் பயன்படுத்தலாம். போனில் தனி செல்பி கேமராவும் உள்ளது. இது பிரதான டிஸ்பிளேவுக்கு மேலே உள்ளது மற்றும் 5 மெகாபிக்சல் பட சென்சாரைக் கொண்டுள்ளது.

Motorola Razr (2019), 128 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. இதனை, மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக விரிவாக்க முடியாது. chin-ல் ஆப்டிகல் கைரேகை சென்சார் உள்ளது. இந்த போன் 2,800mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Motorola, lockdown, coronavirus
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. சைபர் தாக்குதலுக்கான மென்பொருளை உருவாக்க ChatGPT-யைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஜப்பானிய சிறுவன் கைது
  2. இந்தியாவில் மின்சாரப் பயணிகள் வாகன விற்பனை இரு மடங்காக உயர்வு; டாடா மோட்டார்ஸ் முதலிடம்
  3. இந்தியாவில் ரூ. 3,000 விலைக்குள் அழைப்புகள் மற்றும் இசைக்கான சிறந்த டி.டபிள்யூ.எஸ் (TWS) இயர்பட்ஸ்
  4. டெக்னோ கேமோன் 50 அல்ட்ரா 5ஜி இந்தியாவில் ஜூலை 17-ல் அமேசான் மூலம் அறிமுகமாகிறது, வண்ணங்கள் உறுதி செய்யப்பட்டன
  5. இந்தியாவில் விண்டோஸ் 11 லேப்டாப்பில் பேட்டரி ஆயுளை நீட்டிப்பது எப்படி
  6. ஆசஸ் விவோபுக் 14, விவோபுக் 15 இன்டெல் கோர் சீரிஸ் 3 செயலிகளுடன் புதுப்பிக்கப்பட்டன: விலை, கிடைக்கும் தன்மை
  7. ஜெமினி ஆம்னி மூலம் இயக்கப்படும் வீடியோ ரிமிக்ஸ் அம்சத்துடன் கூகுள் போட்டோஸ் புதுப்பிக்கப்பட்டுள்ளது
  8. ரியல்-டைம் உரையாடல்களுடன் ChatGPT வாய்ஸ் ஜிபிடி லைவ் மேம்படுத்தலைப் பெறுகிறது
  9. சேமிக்கப்பட்ட தொடர்புகளுக்கான பிறந்தநாள் அறிவிப்பு அம்சத்தில் வாட்ஸ்அப் பணிபுரியக்கூடும்
  10. நெட்ஃபிளிக்ஸ் இலவசமா? சில பயனர்களுக்கு 30 நாள் சோதனைக் சந்தா சலுகை கிடைக்கிறது: சரிபார்ப்பது எப்படி
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.