இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ளது மோட்டோரோலா எட்ஜ்+!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 28 ஏப்ரல் 2020 13:36 IST
ஹைலைட்ஸ்
  • மோட்டோரோலா எட்ஜ் + கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்டது
  • இது ஸ்னாப்டிராகன் 865 SoC உடன் வருகிறது
  • மோட்டோரோலா எட்ஜ் + 5,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது

மோட்டோரோலா எட்ஜ் + அமெரிக்கா, ஐரோப்பாவில் கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்தது

Motorola எட்ஜ் +, கடந்த வாரம் புதன்கிழமை வளைந்த டிஸ்ப்ளே மற்றும் 108 மெகாபிக்சல் கேமராவுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. சுமார் ரூ.75,000 மதிப்புள்ள இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையை எட்டும் என்று மோட்டோரோலா இந்தியாவின் தலைவர் பிரசாந்த் மணி கூறுகிறார். 

மோட்டோரோலா இந்தியாவின் தலைவர் பிரசாந்த் மணி, சனிக்கிழமையன்று மோட்டோரோலா எட்ஜ் + இன் அம்சங்கள் குறித்து ட்வீட் செய்ததோடு, இந்த போன் விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் என்றும் கூறினார். ட்வீட்டில், போனை உருவாக்கும் செயல்முறை மற்றும் மோட்டோரோலாவின் இந்த போனின் அம்சங்கள் ஆகியவற்றைக் காட்டும் வீடியோவையும் மணி பகிர்ந்துள்ளார். 

இருப்பினும், மோட்டோரோலா எட்ஜின் வெளியீடு அல்லது விலை பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை. இந்தியாவில் இந்த இரண்டு போன்களும் மிகவும் மலிவாக இருக்கும்.


மோட்டோரோலா எட்ஜ் + விவரங்கள்:

Motorola Edge+ என்பது ஒற்றை சிம் போனாகும். இது ஆண்ட்ராய்டு 10-ல் இயங்குகிறது. இந்த போன், வளைந்த 6.7 இன்ச் முழு எச்டி + ஓஎல்இடி டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காமின் முதன்மை ஸ்னாப்டிராகன் 865 சிப்செட்டில் இயங்குகிறது மற்றும் 12 ஜிபி எல்பிடிடிஆர் 5 ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. சுவாரஸ்யமாக, மோட்டோரோலா எட்ஜ் + 3.5 மிமீ headphone jack உடன் வருகிறது.

இந்த போன் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முதன்மை கேமராவில் மிகப்பெரிய 108 மெகாபிக்சல் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முதன்மை சென்சார் 6 கே வீடியோவை 30fps-ல் பதிவுசெய்யும் திறன் கொண்டது. மேலும், 16 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா, 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் உள்ளது. மோட்டோரோலா, Time of Flight (ToF) சென்சாரையும் வழங்கியுள்ளது. முன்பக்கத்தில் 25 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது.

போனில் 256 ஜிபி யுஎஃப்எஸ் 3.0 ஸ்டோரேஜ் உள்ளது. மோட்டோரோலா எட்ஜ் + 5,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 5W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவற்றை ஆதரிக்கிறது. இந்த போன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.


Will OnePlus 8 series be able to take on iPhone SE (2020), Samsung Galaxy S20 in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Motorola Edge Plus, Motorola Edge Plus Specifications
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஜியோ AI கால் ஏஜென்ட் விளக்கம்: இது என்ன, எப்படி வேலை செய்கிறது, இதன் அம்சங்கள் மற்றும் பல
  2. டால்பி அட்மாஸ், 50W ஸ்பீக்கர்களுடன் ஹேயர் HQLED P7 புரோ ஸ்மார்ட் டிவிகள் இந்தியாவில் அறிமுகம்
  3. சாம்சங் கேலக்ஸி M47 5G இந்திய அறிமுகம் டீஸ் செய்யப்பட்டது, அமேசானில் உள்ள மைக்ரோசைட் வடிவமைப்பை உணர்த்துகிறது
  4. 50MP கேமராவுடன் ரெட்மி டர்போ 5 இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை சலுகைகள்
  5. ஒப்போ ரெனோ 16 உடன் ரெனோ 16c மாடலும் இந்தியாவில் அறிமுகமாக வாய்ப்பு: விவரக்குறிப்புகள் கசிந்தன
  6. 6,500mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 SoC உடன் விவோ Y6e 5G அறிமுகம்: விலை, விவரக்குறிப்புகள்
  7. சாம்சங் கேலக்ஸி S27 மாடலில் பெரிய டிஸ்ப்ளே மற்றும் கேமரா அப்கிரேடுகள் இருக்காது: அறிக்கை
  8. இந்தியாவில் ஹைசென்ஸ் E8S மினி-LED டிவி சீரிஸ் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இன்ஸ்டாகிராமில் ஸ்பேம் மற்றும் பாட் ஃபாலோயர்களை எவ்வாறு நீக்குவது: ஒரு முழுமையான வழிகாட்டி
  10. ஒப்போ ரெனோ 15A 5G 7,000mAh பேட்டரி, 50-மெகாபிக்சல் மெயின் கேமராவுடன் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.