டிரிபிள் ரியர் கேமராக்களுடன் மோட்டோ ஜி புரோ அறிமுகம்!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 27 மே 2020 14:44 IST
ஹைலைட்ஸ்
  • மோட்டோ ஜி ப்ரோ 4,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது
  • இந்த ஸ்மார்ட்போன் மோட்டோ ஜி ஸ்டைலஸின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாகும்
  • இந்த போனில் டைம்-ஆஃப்-ஃப்ளைட் கேமரா சென்சார் பொருத்தப்பட்டுள்ளது

மோட்டோ ஜி புரோ மிஸ்டிக் இண்டிகோ வண்ணத்தில் வழங்கப்படுகிறது

Moto G Pro ஜெர்மனியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுவாரஸ்யமாக, மோட்டோ ஜி புரோ இந்த ஆண்டு பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட Moto G Stylus-ன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாகத் தெரிகிறது. தற்போது, ​​இந்த போன் வாங்குவதற்கு கிடைக்கவில்லை. இருப்பினும் வாடிக்கையாளர்கள் மோட்டோரோலா ஜெர்மனி தளம் மூலம் அதன் வரவிருக்கும் விற்பனை குறித்த தகவல்களை பதிவு செய்யலாம். 

போனின் விலை:

மோட்டோ ஜி புரோ 4 ஜிபி மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை யூரோ 329 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.27,400). இந்த போன் மிஸ்டிக் இண்டிகோ வண்ணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 

போனின் விவரங்கள்:

டூயல்-சிம் (நானோ) மோட்டோ ஜி ப்ரோ ஆண்ட்ராய்டு 10-ல் இயங்கும். இது 6.4 அங்குல முழு எச்டி + (1080x2300 பிக்சல்கள்) மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. போனின் உள்ளே குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட், 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது.

மோட்டோ ஜி ப்ரோவில் மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இதில் 48 மெகாபிக்சல் பிரதான கேமரா, 16 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் ஆகியவை அடங்கும். இந்த கேமரா அமைப்பில் டைம்-ஆஃப்-ஃப்ளைட் (டோஃப்) சென்சார் உள்ளது. செல்பி எடுக்க 16 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.

இணைப்பிற்காக, இந்த போனில் 4 ஜி எல்டிஇ, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், ஏஜிபிஎஸ், எல்டிஇபிபி, எஸ்யூபிஎல், க்ளோனாஸ் மற்றும் கலிலியோ ஆகியவை உள்ளது. போனின் உள்ளே 15W டர்போபவர் சார்ஜிங் ஆதரவுடன் 4,000 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்படுகிறது. மோட்டோ ஜி புரோவின் எடை 192 கிராம் ஆகும்.

 
KEY SPECS
Display 6.40-inch
Processor Qualcomm Snapdragon 665
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 16-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 10
Resolution 1080x2300 pixels
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Moto G Pro, Moto G Pro specifications, Moto G Pro price, Motorola, Moto G Stylus
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. வோடஃபோன் ஐடியா (Vi) ரூ. 230 முதல் புதிய ப்ரீபெய்ட் பிளான்களுடன் ஸ்பாட்டிஃபை ப்ரீமியத்தை வழங்குகிறது
  2. இன்டெல் N50, கூகுள் AI அம்சங்களுடன் அசுஸ் குரோம்புக் CX15 இந்தியாவில் அறிமுகம்: விலை, அம்சங்கள்
  3. iQOO Z11 இந்தியாவில் ஆகஸ்ட் 20 அன்று அறிமுகம்: எதிர்பார்க்கப்படும் விவரக்குறிப்புகள், அம்சங்கள்
  4. 10,000mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் 4 Gen 5 சிப்செட்டுடன் ஒப்போ F35 புரோ இந்த மாதம் இந்தியாவில் அறிமுகமாகிறது!
  5. அமேசான் மாபெரும் சுதந்திர தின விற்பனை: வங்கி மற்றும் கூப்பன் சலுகைகளுடன் iQOO 15 தள்ளுபடி விலையில் கிடைக்கும்
  6. ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 சிப்செட், 6,000mAh பேட்டரியுடன் சாம்சங் கேலக்ஸி F70 புரோ 5G இந்தியாவில் அறிமுகம்!
  7. ஸ்கல்கேண்டி ஏவியேட்டர் 900 ஏஎன்சி இந்தியாவில் 60 மணிநேர பேட்டரி ஆயுளுடன் அறிமுகப்படுத்தப்பட்டது
  8. OnePlus 16 விலை மற்றும் ரேம் விவரங்கள் லீக்; 8GB RAM வேரியண்ட் மீண்டும் வர வாய்ப்பு!
  9. போல்ட் ஸ்மார்ட்போன் இந்தியா வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது; Flipkart Microsite நேரலையில் வருகிறது
  10. Redmi 17 5G குளோபல் மாடலின் விலை, டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள் அறிமுகத்திற்கு முன்பே கசிந்தன!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.