இந்தியாவில் Mi Note 10 Lite ஸ்மார்ட்போன் Mi 10i என்ற பெயரில் அறிமுகம்

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 11 ஆகஸ்ட் 2020 11:47 IST
ஹைலைட்ஸ்
  • Mi Note 10 Lite rebranding has been suggested by a tipster
  • The phone debuted in Europe with a starting price of EUR 349
  • Xiaomi hasn’t made any revelations around Mi Note 10 Lite India launch

எம்ஐ 10i ஸ்மார்ட்போனில் குவால்காம் 730G SoC பிராசசர், அமோலேட் டிஸ்பிளே, 30W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சங்கள் உள்ளன. 

இந்தியாவில் எம்ஐ நோட் 10 லைட் ஸ்மார்ட்போன், எம்ஐ 10i என்ற பெயரில் அறிமுகமாக உள்ளது. 

ஷாவ்மியின் புத்தம் புதிய எம்ஐ நோட் 10 ஸ்மார்ட்போன் அண்மையில் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 3டி வளைவு அமோலேட் டிஸ்பிளே, குவால்காம் ஸ்நாப்டிராகன் 730G SoC பிராசசர் ஆகியவை உள்ளன. 

இந்த நிலையில், இந்தியாவில் எம்ஐ நோட் 10 விரைவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது ஐரோப்பாவில் எம்ஐ நோட் 10 ஸ்மார்ட்போனின் பெயர் மாற்றம் செய்யப்பட்டு இந்தியாவுக்கு வருகிறது. இந்தியாவில் இதன் பெயர் எம்ஐ 10i ஆகும். 

எம்ஐ 10 சீரிஸில் இது மூன்றாவது ஸ்மார்ட்போனாகும். இதற்கு முன்பாக எம்ஐ நோட் 10, எம்ஐ நோட் 10 ப்ரோ ஆகியவை ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 

ஏற்கனவே கூறியபடி வரவுள்ள எம்ஐ 10i ஸ்மார்ட்போனில் குவால்காம் 730G SoC பிராசசர், அமோலேட் டிஸ்பிளே, 30W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சங்கள் உள்ளன. 

எம்ஐ நோட் 10 லைட் விலை

இந்தியாவில் எம்ஐ நோட் 10 ஸ்மார்ட்போனின் விலை குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும் ஐரோப்பாவில் இதன் விலை 349 யூரோ (இந்திய மதிப்பில் சுமார் 30,800 ரூபாய்) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 6ஜிபி ரேம், 64ஜிபி மெமரி வேரியன்ட் ஆகும்.  இதே போல், 6ஜிபி ரேம் 128ஜிபி மெமரி கொண்ட வேரியன்டின் விலை 399 யூரோ (இந்திய மதிப்பில் 35,200 ரூபாய்) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மிட்நைட் பிளாக், நெபுலா பர்பிள், கிளாசியர் வைட் ஆகிய நிறங்களில் உள்ளன. 

இந்தியாவில் கடந்த மே மாதம் எம்ஐ 10 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் விலை 49,999 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. 

எம்ஐ நோட் 10 லைட் சிறப்பம்சங்கள்


இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
திரை அளவு: 6.47 இன்ச்
டிஸ்பிளே: அமோலேட்
நாட்ச்: வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச்
பிராசசர்: குவால்காம் ஸ்நாப்டிராகன் 730G SoC
கேமரா: பின்புறத்தில் நான்கு கேமராக்கள் உள்ளன. 
முன்புறத்தில் 16 மெகா பிக்சலுடன் செல்ஃபி கேமரா உள்ளன
பேட்டரி சக்தி: 5,260mAh
சார்ஜர்: 30W ஃபாஸ்ட் சார்ஜ் - டைப் சி


Is Redmi Note 9 Pro Max the best affordable camera phone in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 
KEY SPECS
Display 6.47-inch
Processor Qualcomm Snapdragon 730G
Front Camera 16-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 5-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 5260mAh
OS Android 10
Resolution 1080x2340 pixels
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. OnePlus 15 மற்றும் OnePlus 13s-க்கு OxygenOS 16 அப்டேட்: மார்ச் 2026 பாதுகாப்பு புதுப்பிப்பு
  2. Poco X8 Pro Series இந்திய விலை லீக்; அறிமுகத்திற்கு முன் விவரங்கள் வெளியீடு
  3. iQOO Z11 Geekbench-ல் வந்தது; MediaTek Dimensity 8500 செயலியுடன் சீனாவில் விரைவில் அறிமுகம்
  4. Instagram DM-களில் End-to-End Encryption நீக்கம்: இது என்ன என உங்களுக்கு தெரியுமா?
  5. AirPods Max 2 இந்தியாவில் அறிமுகம் – H2 சிப், Adaptive Audio, 20 மணி நேர பேட்டரி உள்ளிட்ட அம்சங்கள்
  6. OnePlus Nord 6 Series இந்திய அறிமுகம் டீஸ்; OnePlus Nord CE 6 BIS தரவுத்தளத்தில் கிடைக்கும்
  7. Realme P4 Lite 5G இந்திய அறிமுக தேதி அறிவிப்பு; வடிவமைப்பு மற்றும் பேட்டரி விவரங்கள் வெளியீடு
  8. iQOO Z11x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: 7,200mAh பேட்டரி, 50MP கேமரா
  9. MacBook Neo-க்கு டச் ஸ்கிரீன் அப்கிரேடு வர வாய்ப்பு குறைவு; Mark Gurman தகவல்
  10. Microsoft-ன் Gaming Copilot AI உதவியாளர் 2026-ல் Xbox Series X, Xbox Series S கன்சோல்களில் வரும்: வெளியான தகவல்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.