Mi Charge Turbo: செப்டம்பர் 9ல் அறிமுகமாகிறது சியோமியின் 'வயர்லெஸ் சார்ஜிங்' டெக்!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 7 செப்டம்பர் 2019 13:33 IST
ஹைலைட்ஸ்
  • சியோமி வய்ர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தலாம்
  • 100W சூப்பர் சார்ஜ் டர்போ தொழில்நுட்பத்தில் சியோமி நிறுவனம் கவணம்
  • இந்த சார்ஜ் தொழில்நுட்பம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை

Xiaomi புதிய அறிவிப்புகளை அடுத்த வாரம் வெளியிடவுள்ளது.

Photo Credit: Weibo

செப்டம்பர் 9 ஆம் தேதி Mi Charge Turbo-வை அறிமுகப்படுத்தப் போவதாக சியோமி உறுதிப்படுத்தியுள்ளது. மேம்படுத்தப்பட்ட வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. இது குறித்த மேலும் விவரங்கள் தற்போது குறைவாகவே வெளியாகியுள்ளது. தற்போது, ​​சியோமி பிப்ரவரி 2019ல் அறிமுகப்படுத்தப்பட்ட Mi 9-ல் 27W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை வழங்குகிறது. சமீபத்தில் வெளியான டீசர் போஸ்டர், Mi Charge Turbo 5G சகாப்தத்திற்கானது என்று குறிப்பிடுகிறது, ஆனால் இந்த தொழில்நுட்பத்தைப் பற்றி எதுவும் விவரிக்கவில்லை. முன்னதாக, சியோமி நிறுவனம் இந்த ஆண்டு மார்ச் மாதம் தனது 100W சூப்பர் சார்ஜ் டர்போ தொழில்நுட்பத்தையும் அறிமுகப்படுத்தியது.

Mi சார்ஜ் டர்போ செப்டம்பர் 9 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்பதை இந்த சீன தொழில்நுட்ப நிறுவனமான வெய்போவிந் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிறுவனம் மேம்பட்ட வயர்லெஸ் சார்ஜிங்கை வேகமான சார்ஜிங் வசதியுடன் அறிமுகப்படுத்தும் என்று அந்த போஸ்டர் தெரிவிக்கிறது. டீசர் பதிவு, “செப்டம்பர் 9, உங்கள் வயர்லெஸ் எதிர்காலத்துடன் பேசுங்கள்” இது மேம்பட்ட வயர்லெஸ் சார்ஜிங்கைத் தொடங்கக்கூடும் என்று குறிப்பிடுகிறது. முன்னதாக, Mi Mix 4 ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் என்று தகவல் வெளியானது, மேலும் இந்த புதிய மி சார்ஜ் தொழில்நுட்பம் அறிமுகத்தின்போது ஸ்மார்ட்போனுடன் ஒருங்கினைக்கப்பட்டே அறிமுகமாகும்.

டீசர் போஸ்டர் 5G சகாப்தத்தை மனதில் வைத்து Mi Charge Turbo உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கிறது. இந்த வேகமான சார்ஜிங் தொழில்நுட்பத்தைப் பற்றிய தற்போது வெளியான விவரங்கள் குறைவு, இருப்பினும் செப்டம்பர் 9ஆம் தேதி முழு தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம்.

100W சூப்பர் சார்ஜ் டர்போ தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை, இது மார்ச் மாதத்தில் சோதனை செய்யப்பட்டது மற்றும் ஒரு மாதத்திற்குப் பிறகு நிறுவனத்தின் தலைவர் லின் பின், சியோமி அதை வெகுஜன உற்பத்திக்கு கொண்டு வருவதற்கு செயல்படுவதாகக் கூறினார். 100W சூப்பர் சார்ஜ் டர்போ தொழில்நுட்பம் வெறும் 17 நிமிடங்களில் 4,000mAh ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்துவிடும். இந்த தொழில்நுட்பம் எப்போது சந்தையில் அறிமுகமாகும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை, ஆனால் ஒரு ரெட்மி ஸ்மார்ட்போனுடன் ஒருங்கிணைத்து இந்த சார்ஜ் தொழில்நுட்பம் அறிமுகமாகும் என்பதை சியோமி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Mi Charge Turbo, Xiaomi
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. HMD Pulse 2, Pulse 2 Plus, Pulse 2 Pro மாடல்களில் 5,000mAh பேட்டரி, Unisoc சிப்செட் இடம்பெற வாய்ப்பு
  2. விவோ X500 ப்ரோ கசிவு: 144Hz LTPO டிஸ்ப்ளே, மீடியாடெக் டைமென்சிட்டி 9600 ப்ரோ சிப்
  3. 9 JBL ப்ரோ ஸ்பீக்கர்கள்,10,200mAh பேட்டரியுடன் மோட்டோ பேட் 70 க்ரூவ் இந்தியாவில் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி F70 புரோ 5G விலை, வெளியீட்டு தேதி மற்றும் அம்சங்கள் அறிவிப்பு
  5. சோனி WF-1000XM6 உடன் சோனி 1000X தி கலெக்‌ஷன் DSEE அல்டிமேட் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
  6. ஒன்பிளஸ் N6x இந்தியாவில் 7,000mAh பேட்டரி, 13-மெகாபிக்சல் பின்புற கேமராவுடன் அறிமுகம்: விலை, விவரக்குறிப்புகள்
  7. இந்தியாவில் eSIM மற்றும் பிசிக்கல் சிம்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
  8. இந்தியாவில் PS5 ஸ்டாண்டர்ட் எடிஷன் விலையை சோனி ரூ. 15,000 உயர்த்தியுள்ளது
  9. ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவில் நத்திங் ஃபோன் (4a) விலை ரூ. 3,000 உயரும் என தகவல்
  10. ஆசஸ் பேட் இந்திய விலை, ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வகைகள் அறிவிப்பு; ஆகஸ்ட் 6 முதல் விற்பனை தொடங்குகிறது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.