ஷாவ்மி எம்ஐ 30W வயர்லெஸ் சார்ஜர் அறிமுகம்!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 9 மே 2020 09:15 IST
ஹைலைட்ஸ்
  • எம்ஐ 30W வயர்லெஸ் சார்ஜர் வழக்கமான விலை ரூ.2,299 ஆகும்
  • இந்த சார்ஜர் நாட்டில் Mi.com மூலம் கிடைக்கும்
  • எம்ஐ 30W வயர்லெஸ் சார்ஜர் 30W வரை வயர்லெஸ் சார்ஜிங் வழங்குகிறது

Mi 30W வயர்லெஸ் சார்ஜர் செங்குத்து காற்று குழாய் வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

ஷாவ்மி இந்தியாவில் எம்ஐ 30W வயர்லெஸ் சார்ஜரை அறிமுகப்படுத்தியுள்ளது. சீன நிறுவனத்திடமிருந்து புதிய வயர்லெஸ் சார்ஜருக்கு 30W வயர்லெஸ் சார்ஜிங் வேகம் கிடைக்கும். இது Qi சார்ஜிங் தரத்தை அடிப்படையாகக் கொண்டது.

இது வெப்பத்தை குறைக்க ஒரு உள்ளமைக்கப்பட்ட குளிரூட்டும் விசிறியைக் (cooling fan) கொண்டுள்ளது. சந்தையில் எம்ஐ 30W வயர்லெஸ் சார்ஜர், கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் வார்ப் சார்ஜ் 30 வயர்லெஸ் சார்ஜருடன் கடுமையாக போட்டியிடும். 

 
வயர்லெஸ் சார்ஜர் விலை:

இந்தியாவில் எம்ஐ 30W வயர்லெஸ் சார்ஜரின் விலை ரூ.2,299 ஆகும். இருப்பினும், இந்த சார்ஜர் ரூ.1,999-க்கு சிறப்பு முன்கூட்டிய ஆர்டர் விலையில் கிடைக்கிறது. இதன் விற்பனை மே 18 ஆம் தேதி Mi.com இணையதளத்தில் தொடங்கும்.


வயர்லெஸ் சார்ஜர் விவரங்கள்:


எம்ஐ 30W வயர்லெஸ் சார்ஜரில் ஒரு உள்ளமைக்கப்பட்ட குளிரூட்டும் விசிறி உள்ளது. இது சாதனம் அதிக வெப்பமடைவதைத் தடுக்கிறது. இது செங்குத்து காற்று குழாய் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது இணைக்கப்பட்ட போனில் நேரடியாக காற்றை அனுப்புகிறது மற்றும் வெப்பத்தை கட்டுபடுத்துகிறது.

Mi 30W வயர்லெஸ் சார்ஜர் Qi தரத்தை அடிப்படையாகக் கொண்டது. இதன் பொருள், Mi 10 5G-ஐ சார்ஜ் செய்வதைத் தவிர, இந்த வயர்லெஸ் சார்ஜரை Apple மற்றும் Samsung போன்ற நிறுவனங்களின் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு சாதனங்களுக்கு பயன்படுத்தலாம். சார்ஜர் 30W வரை வயர்லெஸ் சார்ஜிங்கை வழங்குகிறது. ஆனால் ஷாவ்மி அல்லாத போன்களுக்கு 10W வரை வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது.


Will OnePlus 8 series be able to take on iPhone SE (2020), Samsung Galaxy S20 in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. iOS 26.5 பீட்டா 1 வெளியீடு: ஆப்பிள் மேப்ஸ்-ல் விளம்பரங்கள் மற்றும் RCS மெசேஜ் என்க்ரிப்ஷன் வசதி அறிமுகம்
  2. லாவா போல்ட் N2 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்: 5,000mAh பேட்டரி மற்றும் 50MP கேமராவுடன் பட்ஜெட் விலையில் வெளியீடு
  3. கூகுள் பிக்சல் 11 கசிவு: சிறிய வடிவமைப்பு மாற்றங்களுடன் வெளியாகிறது - சிஏடி (CAD) ரெண்டர்கள் மூலம் தகவல்
  4. ஐபோன் 18 ப்ரோ: சிறிய அளவிலான 'டைனமிக் ஐலேண்ட்' வசதியுடன் வெளியாகலாம் - தகவல்
  5. விவோ பேட் 6 ப்ரோ அறிமுகம்: 13.2-இன்ச் 4K டிஸ்ப்ளே மற்றும் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்!
  6. விவோ X300 அல்ட்ரா மற்றும் X300s அறிமுகம்: 200MP கேமரா, ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் மற்றும் பல சிறப்பம்சங்கள்!
  7. Oppo Find X9 Ultra உலகளாவிய அறிமுக தேதி உறுதி; Find X9s Pro கேமரா விவரங்கள் வெளியீடு
  8. Vi 5G விரிவாக்கம்: அடுத்த இரண்டு மாதங்களில் 90 நகரங்களுக்கு 5G சேவை வழங்கப்படும் என நிறுவனம் அறிவிப்பு
  9. ஆப்பிளின் ஏர் டிராப் (AirDrop) போன்ற புதிய வசதி: ஆண்ட்ராய்டு 17 மற்றும் One UI 9-ல் 'Tap to Share' அம்சம்களுடன்
  10. ஒன்பிளஸ் Ace 6 அல்ட்ரா ஏப்ரலில் அறிமுகமாக வாய்ப்பு: ரெட்மி K90 அல்ட்ராவுக்குப் போட்டியாக அமையுமா?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.