இன்ஃபினிக்ஸ் நோட் 7 சீரிஸின் விவரங்கள் வெளியாகின! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 8 ஏப்ரல் 2020 13:35 IST
ஹைலைட்ஸ்
  • இன்ஃபினிக்ஸ் நோட் 7, 6.95 இன்ச் எச்டி + டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது
  • இன்ஃபினிக்ஸ் நோட் 7 லைட், 6.6 இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது
  • 2 புதிய இன்பினிக்ஸ் போன்களும் தற்போது நிறுவனத்தின் தளத்தில் உள்ளன

இன்ஃபினிக்ஸ் நோட் 7, வட்ட வடிவ குவாட் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது

இன்ஃபினிக்ஸ் நோட் 7 மற்றும்  இன்ஃபினிக்ஸ் நோட் 7 லைட் ஆகியவை வெளியீட்டுக்கு முன்பே இன்ஃபினிக்ஸ் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. இரண்டு புதிய போன்களும் ஹோல்-பஞ்ச் டிஸ்பிளே டிசைனுடன் வருகிறது. இந்த போன்கள் குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளன. ஸ்மார்ட்போன்கள் பல கலர் ஆப்ஷன்களில் வருகிறது. 


இன்ஃபினிக்ஸ் நோட் 7 சீரிஸீன் விலை:

Infinix Note 7 மற்றும் Infinix Note 7 Lite விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. 


இன்ஃபினிக்ஸ் நோட் 7 விவரங்கள்

இன்ஃபினிக்ஸ் நோட் 7, டூயல்-சிம் (நானோ) ஸ்லாட்டைக் கொண்டுள்ளது. இது, எக்ஸ்ஓஎஸ் 6.0 உடன் Android 10-ல் இயக்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.95 இன்ச் எச்டி + (720x1,640 பிக்சல்கள்) ஐபிஎஸ் டிஸ்பிளே உள்ளது. இந்த போன், 6 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டு, ஆக்டா கோர் MediaTek Helio G70 SoC-யால் இயக்கப்படுகிறது. 

ஸ்மார்ட்போனில் வட்ட வடிவ குவாட் ரியர் கேமரா அமைப்பும் உள்ளது. இதில் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் சென்சார், 2 மெகாபிக்சல் மூன்றாம் சென்சார் ஆகியவை அடங்கும். செல்ஃபிக்களுக்காக, முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது.

இன்ஃபினிக்ஸ் நோட் 7-ல் 128 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜ் உள்ளது. இதனை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (2 டிபி வரை) விரிவாக்கம் செய்யலாம். மற்ற போன்களை போலவே அதே இணைப்புவிருப்பங்கள், சென்சார்களைக் கொண்டுள்ளது. இன்பினிக்ஸ் நோட் 7-ல் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. 


இன்ஃபினிக்ஸ் நோட் 7 லைட் விவரங்கள்:

இன்ஃபினிக்ஸ் நோட் 7 லைட்டில் டூயல்-சிம் (நானோ) ஸ்லாட் உள்ளது. இது, எக்ஸ்ஓஎஸ் 6.0 உடன் ஆண்ட்ராய்டு 10-ல் இயக்குகிறது. இந்த போன் 6.6 இன்ச் எச்டி + (720x1,600 பிக்சல்கள்) ஐபிஎஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போன், 4 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டு MediaTek Helio P22 SoC-யால் இயக்கப்படுகிறது. 

இன்பினிக்ஸ் நோட் 7 லைட் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்ட குவாட் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது. 

போனின் குவாட் ரியர் கேமரா அமைப்பில், 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார், 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை சென்சார் மற்றும் ஒரு QVGA குவாட்டர்னரி சென்சார் ஆகியவை உள்ளன. போனின் முன்புறத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமராவும் உள்ளது.

Advertisement

இன்ஃபினிக்ஸ் நோட் 7 லைட்டில் 128 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜ் உள்ளது. இதனை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (256 ஜிபி வரை) விரிவாக்கம் செய்யலாம். மற்ற போன்களை போலவே அதே இணைப்புவிருப்பங்கள், சென்சார்களைக் கொண்டுள்ளது. இன்ஃபினிக்ஸ் நோட் 7 லைட், 10W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த போன் ஒரே சார்ஜில் 35 நாட்கள் நீடிக்கும்.


OnePlus 8 leaks look exciting but when will the phones launch in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 
KEY SPECS
Display 6.60-inch
Processor MediaTek Helio P22
Front Camera 8-megapixel
Rear Camera 48-megapixel + 2-megapixel + 2-megapixel + 0.3-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 5000mAh
OS Android 10
Resolution 720x1600 pixels
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. அவசரம்! Realme GT 7, GT 7T போன்கள் ₹28,999-ல இருந்து ஆரம்பம் – இந்த பெஸ்ட் டீலை மிஸ் பண்ணாதீங்க!
  2. அறிமுகமானது Motorola Edge 60: 50MP கேமரா, 5500mAh பேட்டரி, MIL STD-810H - முழு விபரம் இதோ!
  3. Oppo K13x 5G: ₹15,999-க்குள்ளே லான்ச்! பிளாட் டிஸ்ப்ளே, 6000mAh பேட்டரி - கசிந்த முழு விபரம்!
  4. அறிமுகமாகிறது Vivo X Fold 5: -20°C குளிர்லையும் அசால்ட்டா இயங்கும்! அசத்தலான டிசைன் வெளியானது!
  5. அறிமுகமானது Huawei Band 10: 100 வொர்க்அவுட் மோட்ஸ், ஸ்போ2 கண்காணிப்பு - முழு விபரம் இதோ!
  6. அறிமுகமாகிறது Tecno Pova 7 Neo 4G: MediaTek Helio G100, 120Hz டிஸ்ப்ளே - முழு விபரம் இதோ!
  7. அறிமுகமானது OnePlus Pad 3: விலை, அம்சங்கள், பவர்ஃபுல் ப்ராசஸர் – முழு விபரம் இதோ!
  8. அறிமுகமானது OnePlus 13s: கலர் ஆப்ஷன்கள், அம்சங்கள், விலை - முழு விபரம் இதோ!
  9. Vi, Vivo அசத்தல் கூட்டணி: Vivo V50e உடன் 5G, OTT சலுகைகள்! முழு விபரம் இதோ!
  10. 6300mAh பேட்டரி, Snapdragon 7 Gen 4 உடன் Realme 15 5G: பக்கா பட்ஜெட் 5G போன்!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.