5 ரியர் கேமராக்களுடன் அறிமுகமானது ஹவாய் பி40 சீரிஸ்! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 27 மார்ச் 2020 13:12 IST
ஹைலைட்ஸ்
  • ஹவாய் பி 40 புரோ 5ஜி, 6.58 இன்ச் டிஸ்பிளேவுடன் வருகிறது
  • ஹவாய் பி 40 ப்ரோ + 5ஜி பின்புறத்தில் ஐந்து கேமராக்களைக் கொண்டுள்ளன
  • ஹவாய் பி 40 புரோ 5ஜி, ஹவாய் பி 40 5ஜி ஐந்து கலர் ஆப்ஷன்களில் கிடைக்கின்றன

ஹூவாய் பி 40 ப்ரோ 5ஜி, குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது

ஆன்லைன் நிகழ்வில் Huawei பி 40 சீரிஸ் வியாழக்கிழமையன்று அறிமுகமானது. இந்தத் சீரிஸில் ஹூவாய் பி 40 5 ஜி, ஹவாய் பி 40 ப்ரோ 5 ஜி, மற்றும் ஹவாய் பி 40 புரோ + 5 ஜி ஆகிய மூன்று போன்கள் உள்ளன. மூன்று போன்களைப் பற்றிய பிற தகவல்கள் உள்ளே.


ஹூவாய் பி40 சீரிஸின் விலை:

Huawei P40 5G 8 ஜிபி ரேம் / 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலில் வருகிறது, இதன் விலை யூரோ 799 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.66,300) ஆகும்ஜ். ஹவாய் பி 40 5ஜி, கருப்பு, ஆழ்கடல் நீலம் மற்றும் ஐஸ் ஒயிட் ஆகிய மூன்று பளபளப்பான கலர் வேரியண்ட்டுகள், அத்துடன் ப்ளஷ் கோல்ட் மற்றும் சில்வர் ஃப்ரோஸ்ட் ஆகிய இரண்டு மேட் வகைகளில் வருகிறது. இது ஏப்ரல் 7 முதல் விற்பனைக்கு வரும்.

Huawei P40 Pro 5G ஒற்றை 8 ஜிபி + 256 ஜிபி மாடலிலும் கிடைக்கிறது, இதன் விலை யூரோ 999 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.82,900) ஆகும். இது ஹவாய் பி 40 5ஜி போன்ற வண்ணங்களில் கிடைக்கிறது, மேலும் ஏப்ரல் 7 முதல் விற்பனைக்கு வரும்.

Huawei P40 Pro+ 5G ஒற்றை 8 ஜிபி ரேம் + 512 ஜிபி மாடலில் வருகிறது, இதன் விலை யூரோ 1,399 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,16,000) ஆகும். புதிய ஹவாய் முதன்மை போன் பிளாக் பீங்கான் மற்றும் வெள்ளை பீங்கான் ஆகிய இரண்டு வண்ணங்களில் வருகிறது, இது ஜூன் முதல் விற்பனைக்கு வரும்.


ஹூவாய் பி40 5ஜி விவரக்குறிப்புகள்:

டூயல்-சிம் (நானோ) ஹவாய் பி 40 5ஜி, EMUI 10.1 உடன் ஆண்ட்ராய்டு 10-ல் இயக்குகிறது. இது 6.1 இன்ச் (1,080x2,340 பிக்சல்கள்) OLED பேனலைக் கொண்டுள்ளது, இது 60Hz புதுப்பிப்பு வீதத்துடன் உள்ளது. இந்த போன் ஆக்டா கோர் கிரின் 990 5 ஜி SoC, மாலி-ஜி 76 எம்சி 16 ஜி.பீ-யில் இயங்குகிறது.

ஹவாய் பி 40 5 ஜி பின்புறத்தில் மூன்று கேமராக்கள் உள்ளன. முதன்மையானது எஃப் / 1.9 aperture கொண்ட 50 மெகாபிக்சல் கேமரா, எஃப் / 2.2 aperture கொண்ட 16 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் ஷூட்டர் மற்றும் எஃப் / 2.4 லென்ஸ் 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில், எஃப் / 2.0 aperture உடன் 32 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டர் உள்ளது. கேமராக்கள் மாத்திரை வடிவ ஹோல்-பஞ்ச் வடிவமைப்பில் வைக்கப்பட்டுள்ளன.

ஹவாய் பி 40 5 ஜி மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது

Advertisement

ஹவாய் பி 40 5ஜி, 128 ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது, இது ஹவாய் நிறுவனத்தின் நானோ மெமரி 2 அட்டை வழியாக விரிவாக்கக்கூடியது. இணைப்பு விருப்பங்களில் Wi-Fi 6, 5G, Bluetooth v5.1, GPS, USB Type-C, NFC ஆகியவை அடங்கும். ஹவாய் பி 40 5ஜி 3,800 எம்ஏஎச் பேட்டரி மற்றும் சூப்பர்சார்ஜ் 22.5W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இந்த போன் 148.9x71.06x8.5 மிமீ அளவு மற்றும் 175 கிராம் எடை கொண்டது.


ஹவாய் பி 40ப்ரோ 5ஜி விவரக்குறிப்புகள்:

டூயல்-சிம் (நானோ) ஹவாய் பி 40 ப்ரோ 5ஜி, EMUI 10.1 உடன் ஆண்ட்ராய்டு 10-ல் இயக்குகிறது. இது 90Hz டிஸ்ப்ளே புதுப்பிப்பு வீதத்துடன் 6.58 இன்ச் (1,200x2,640 பிக்சல்கள்) OLED பேனலைக் கொண்டுள்ளது. இந்த போனும் அதே ஆக்டா கோர் கிரின் 990 5ஜி SoC, மாலி-ஜி 76 எம்சி 16 ஜி.பீ.யூ மூலம் இயக்கப்படுகிறது, மேலும் இது 8 ஜிபி ரேம் உடன் வருகிறது.

Advertisement

​​ஹவாய் பி 40 ப்ரோ 5ஜி பின்புறத்தில் நான்கு கேமராக்களைக் கொண்டுள்ளது, இதில் முதன்மையானது எஃப் / 1.9 aperture கொண்ட 50 மெகாபிக்சல் கேமரா மற்றும் ஓஐஎஸ், எஃப் / 1.8 aperture 40 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் ஷூட்டர், ஒரு சூப்பர்சென்சிங்குடன் 12 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 3டி depth sensing கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், நீங்கள் 32 மெகாபிக்சல் எஃப் / 2.2 லென்ஸ் மற்றும் depth சென்சாரைப் பெறுவீர்கள்.

ஹவாய் பி 40 ப்ரோ 5ஜி, 256 ஜிபி ஸ்டோரேஜுடன் வருகிறது, நானோ மெமரி 2 கார்டு வழியாக விரிவாக்கக்கூடியது. இது அதே இணைப்பு விருப்பங்களைப் பகிர்ந்து கொள்கிறது. ஹவாய் பி 40 ப்ரோ, பெரிய 4,200 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது, இது சூப்பர்சார்ஜ் 40W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சூப்பர்சார்ஜ் 27W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இந்த போன் 158.2x72.6x8.95 மிமீ அளவு மற்றும் 209 கிராம் எடையுள்ளதாக இருக்கிறது, இது ஹவாய் பி 40 5 ஜியை விட சற்று கனமானது.


ஹவாய் பி40 புரோ + 5ஜி விவரக்குறிப்புகள்:

ஹவாய் பி40 புரோ + 5ஜி அதிக இன்பில்ட் ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது - 512 ஜிபி - இது விரிவாக்க முடியாதது. இது பென்டா கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது - எஃப் / 1.9 aperture கொண்ட 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் ஓஐஎஸ், எஃப் / 1.8 aperture கொண்ட 40 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் ஷூட்டர், 8 மெகாபிக்சல் சூப்பர்ஜூம் பெரிஸ்கோப் லென்ஸ் (125 மிமீ) கேமரா 10 எக்ஸ் ஆப்டிகல் ஜூம் மற்றும் ஒரு எஃப் / 4.4 aperture, 3 எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட மற்றொரு 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் (80 மிமீ) கேமரா மற்றும் 3டி depth sensing கேமரா ஆகியவை அடங்கும்.

Advertisement

ஹவாய் பி 40 புரோ + 5 ஜி பென்டா பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது

இந்த போன்158.2x72.6x9 மிமீ அளவு மற்றும் 226 கிராம் எடையைக் கொண்டுள்ளது. இதன் 4,200 எம்ஏஎச் பேட்டரி சூப்பர்சார்ஜ் 40 டபிள்யூ ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சூப்பர்சார்ஜ் 40 டபிள்யூ சார்ஜிங் ஆகியவற்றைக் கொண்டுள்ளது - இது உலகின் மிக வேகமாக வணிகமயமாக்கப்பட்ட 40W வயர்லெஸ் சார்ஜிங் என்று கூறப்படுகிறது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.