டிரிபிள் ரியர் கேமராவைக் கொண்ட Huawei P Smart (2020)!

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 19 அக்டோபர் 2019 11:34 IST
ஹைலைட்ஸ்
  • Huawei P Smart (2020) 48-megapixel முதன்மை கேமராவை பேக் செய்கிறது
  • 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் வரை வருகிறது
  • வரவிருக்கும் போனில் 6.3-inch full-HD+ டிஸ்பிளேவை TENAA பட்டியலிடுகிறது

Huawei P Smart (2020), 2.2GHz கடிகாரத்தில் உள்ள octa-core processor மூலம் இயக்கப்படும். 

Huawei ஒரு புதிய mid-range தொலைபேசி பேக்கிங்கில் மூன்று பின்புற கேமராக்கள் மற்றும் in-display fingerprint சென்சார் ஆகியவற்றை அறிமுகப்படுத்த உள்ளது. அதன் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக, வரவிருக்கும் Huawei தொலைபேசி TENAA-வில் காணப்பட்டது. 

அதன் முக்கிய விவரக்குறிப்புகளான 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 16 மெகாபிக்சல் முன் கேமரா மற்றும் octa-core processor ஆகியவற்றைக் குறிக்கிறது. Huawei P Smart (2020) என அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த போனைப் பற்றி இன்னும் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இல்லை. கடந்த ஆண்டு டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட Huawei P Smart (2019) வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரவிருக்கும் Huawei தொலைபேசி, அதன் TENAA பட்டியலை முதன்முதலில் NashvilleChatter கண்டுபிடித்தது. TENAA தரவுத்தளத்தில் AQM-AL00 மற்றும் AQM-TL00 ஆகிய இரண்டு வெவ்வேறு மாதிரியான பெயர்களில் பட்டியலிடப்பட்டுள்ளது - ஒரே மாதிரியான விவரக்குறிப்புகள், ஆனால் தயாரிப்பு படங்கள் இல்லை. 

சீன ஒழுங்குமுறை ஆணையத்தின் தரவுத்தளத்தின்படி, வரவிருக்கும் Huawei போனில் 6.3-inch full-HD+ (1080x2400 pixels) OLED டிஸ்பிளே இடம்பெறும். மேலும் இது 2.2GHz கடிகாரத்தில் உள்ள octa-core processor மூலம் இயக்கப்படும். 


கேமராக்களைப் பொறுத்தவரை, இன்னும் தொடங்கப்படாத Huawei போனில் 8 மெகாபிக்சல் secondary மற்றும் 2 மெகாபிக்சல் tertiary snappers உதவியுடன், 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா பொருத்தப்பட்டு வெளிவரும். அதேபோல முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் கேமரா உள்ளது .

இந்த தொலைபேசி 4 ஜிபி, 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் மாறுபாட்டிலும் மற்றும் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல்களுடன் பல வகைகளில் வரும். Huawei P Smart (2020) Android 9 Pie-யுடன் இயங்குவதோடு 256 ஜிபி வரை சேமிப்பு விரிவாக்கத்தை வழங்கும். TENAA-வின் Huawei AQM-AL00 மற்றும் AQM-TL00 ஆகிய இரண்டும் ஒரே தொலைபேசியில் தோன்றும். இதில் 3,900mAh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் என்றும் கருப்பு மற்றும் பச்சை நிறங்களில் கிடைக்கும் என்றும் குறிப்பிடுகிறது. 

Huawei P Smart (2020)-யின் பரிமாணங்கள் 157.4 x 73.2 x 7.75mm மற்றும் 163 கிராம் எடை என்று பட்டியலிடப்பட்டுள்ளன. ஆன்போர்டு சென்சார்களில் ஒரு accelerometer, ambient light sensor, proximity sensor மற்றும் அங்கீகாரத்திற்கு in-display fingerprint சென்சார் ஆகியவை அடங்கும்.
 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.