ஏப்ரல் மாதம் வெளியாகிறது Huawei Nova 7! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 29 பிப்ரவரி 2020 10:38 IST
ஹைலைட்ஸ்
  • ஏப்ரல் 2-க்குப் பிறகு Huawei Nova 7 அறிவிக்கப்படலாம்
  • ஹவாய் பி-சீரிஸ் வெளியீடிற்கு பிறகு, இந்த அறிவிப்பு நிகழ வாய்ப்புள்ளது
  • Huawei P40 Lite சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது

Huawei 7i இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது

சீன மைக்ரோ பிளாக்கிங் வலைத்தளமான வெய்போவின் அறிக்கையின்படி, Huawei Nova 7 ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பதிவில் குறிப்பிட்டுள்ளபடி, மார்ச் 26 அன்று பாரிஸில் நிறுவனத்தின் Huawei P40 சீரிஸ் வெளியான பின்னர் இந்த வெளியீடு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, ​​சீன தொலைத் தொடர்பு நிறுவனத்திடமிருந்து போனைப் பற்றி அதிகம் தெரியவில்லை, ஆனால் ஒரு அறிக்கை Kirin 990 SoC உடன் Huawei Nova 7 வர உள்ளது என்று எதிர்பார்க்கிறது. இது 5 ஜி பிராசசர் ஆகும். 

பதிவரின் பதிவின்படி, ஏப்ரல் 2-ஆம் தேதி Huawei உள்நாட்டில் ஒரு மாநாட்டை நடத்தி, விரைவில் நோவா 7-ஐ அறிவிக்கும். கடந்த ஆண்டு டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட நோவா 6-ன் புரோ வேரியண்ட்டை நிறுவனம் அறிமுகப்படுத்தாது என்று பதிவர் கூறுகிறார், அதற்கு பதிலாக, இது Huawei Nova 7-ஐ கொண்டு வருகிறது.

இதற்கிடையில், Huawei P40 சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஹவாய் வியாழக்கிழமை ஸ்பெயினில் Huawei P40 Lite-ஐ வெளியிட்டது. இந்த போன் Huawei Nova 6 SE-ன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாகத் தோன்றுகிறது மற்றும் குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. Huawei P40 Lite, HiSilicon Kirin 810 SoC-யால் இயக்கப்படுகிறது.

இதேபோல், சீன தொலைத் தொடர்பு நிறுவனம் Huawei Nova 7i-ஐ இந்த மாத தொடக்கத்தில் வெளியிட்டது, மேலும் இது 6.40 அங்குல தொடுதிரை டிஸ்பிளேவுடன் வருகிறது. இந்த போன் ஆக்டா கோர் ஹைசிலிகான் கிரின் 810 SoC-யால் இயக்கப்படுகிறது, இதில் 2.27GHz வேகத்தில் இரண்டு கோர்களும், 1.88GHz வேகத்தில் ஆறு கோர்களும் உள்ளன. இதன் 6 ஜிபி + 128 ஜிபி வேரியண்டின் விலை MYR 1,099 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.18,900) என்று கூறப்படுகிறது.

டிசம்பர் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில், Huawei Nova 6 மேலும் இரண்டு வேரியண்டுகளுடன் வந்தது - Nova 6 SE மற்றும் Nova 6 5G. Nova 6 மற்றும் Nova 6 5G ஸ்மார்ட்போன்கள் இரண்டும் ஒரே மாதிரியான விவரக்குறிப்புகளுடன் வந்தன. Nova 6-ன் விலை CNY 3,199 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.32,400), 5ஜி வேரியண்ட் CNY 3,799 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.38,400) என அறிவிக்கப்பட்டது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Huawei, Huawei P40 series, Huawei Nova 7, Huawei Nova 7i
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஜான் டெர்னஸ் தலைமையில் ஆப்பிளின் ஃபோல்டபிள் ஐபேட், AI சாதனங்கள் மற்றும் டச்ஸ்கிரீன் மேக்புக் அறிமுகத் திட்டம்
  2. விவோ X500 ப்ரோ மேக்ஸ்: 200MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ மற்றும் 50MP LOFIC கேமராவுடன் அறிமுகமாக வாய்ப்பு
  3. அறிமுகத்திற்கு முன் கீக்பெஞ்சில் ஷாவோமி 17T: டைமென்சிட்டி 8500 சிப் மற்றும் 12GB RAM விவரங்கள் கசிந்தன
  4. விவோ X போல்ட் 6-ல் 200MP கேமரா மற்றும் பெரிய பேட்டரி; ஷாவோமி மிக்ஸ் போல்ட் 6 வெளியீட்டுத் தகவல் கசிந்தது
  5. போக்கோ C81x 4G vs லாவா போல்ட் N2 ப்ரோ vs ஐடெல் ஜீனோ 100: இந்தியாவில் விலை மற்றும் சிறப்பம்சங்கள் ஒப்பீடு
  6. உங்கள் ஆண்ட்ராய்டு போனில் அட்வான்ஸ்டு ப்ரொடெக்ஷனை எவ்வாறு இயக்குவது: ஒரு படிப்படியான வழிகாட்டி
  7. ரெட்மி A7 ப்ரோ 4G vs விவோ Y05 4G vs ரியல்மி P4 லைட் 4G: இந்தியாவில் விலை மற்றும் சிறப்பம்சங்கள் முழு ஒப்பீடு
  8. உங்கள் சாம்சங் போன் சீராக இயங்க அதனைத் தானாகவே மறுதொடக்கம் (Restart) செய்வது எப்படி?
  9. ஆண்ட்ராய்டின் நோட்டிஃபிகேஷன் பபிள்ஸ் அம்சத்திற்கான ஆதரவை வழங்கும் பணியில் வாட்ஸ்அப் ஈடுபட்டுள்ளது
  10. ஜியோ யூத் அண்ட் கேமிங் பிளான்: ஸ்னாப்சாட்+, ஃபேன்-கோடு மற்றும் ஜெமினி ப்ரோ அறிமுகம்: விலை, நன்மைகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.