மூன்று நோவா 7 சீரிஸ் போன்களை அறிமுகப்படுத்தியது ஹவாய்! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 24 ஏப்ரல் 2020 12:35 IST
ஹைலைட்ஸ்
  • ஹவாய் நோவா 7 புரோ 5 ஜி முன்பக்கத்தில் இரட்டை செல்பி கேமராக்கள் உள்ளன
  • ஹவாய் நோவா 7 எஸ்இ 5 ஜி, கைரேகை சென்சாரை பக்கவாட்டில் கொண்டுள்ளது
  • மூன்று போன்களும் 40W சூப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கின்றன

ஹவாய் நோவா 7 புரோ 5 ஜி 5x ஆப்டிகல் ஜூம் வரை ஆதரிக்கிறது

ஹவாய் நிறுவனத்தின் மூன்று நோவா 7 சீரிஸ் போன்கள் சீனாவில் அறிமுகமாகியுள்ளது. - Huawei Nova 7 Pro 5GHuawei Nova 7 5G மற்றும் Huawei Nova 7 SE 5G. மூன்று புதிய போன்களும் பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்புகளுடன் வந்துள்ளன. ஹவாய் நோவா 7-சீரிஸ் போன்கள் ஏப்ரல் 28 ஆம் தேதி சீனாவில் விற்பனைக்கு வரும்.


ஹவாய் நோவா 7 ப்ரோ 5 ஜி விலை:

போனின் 8 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை சிஎன்ஒய் 3,699 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.39,600), 
8 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை சிஎன்ஒய் 4,099 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.43,900) ஆகும். 
இந்த போன் மிட்நைட் பிளாக், சில்வர், ஃபாரஸ்ட் கிரீன், மிட்சம்மர் பர்பில் மற்றும் ஹனி ரெட் கலர் ஆப்ஷன்களில் வருகிறது.


ஹவாய் நோவா 7 5 ஜி விலை: 

போனின் 8 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை சிஎன்ஒய் 2,999 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.32,100), 
8 ஜிபி + 256 ஜிபி ஆப்ஷனின் விலை சிஎன்ஒய் 3,399 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.36,400) ஆகும். 
இந்த போனும் மிட்நைட் பிளாக், சில்வர், ஃபாரஸ்ட் கிரீன், மிட்சம்மர் பர்பில் மற்றும் ஹனி ரெட் கலர் ஆப்ஷன்களில் வருகிறது.


ஹவாய் நோவா 7 எஸ்இ 5 ஜி விலை:

போனின் 8 ஜிபி + 128 ஜிபி ஆப்ஷனின் விலை சிஎன்ஒய் 2,399 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.25,700), 
8 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை சிஎன்ஒய் 2,799 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.30,000) ஆகும். 
இந்த போன் மிட்நைட் பிளாக், சில்வர், ஃபாரஸ்ட் கிரீன் மற்றும் மிட்சம்மர் பர்பில் வண்ணங்களில் மட்டுமே வருகிறது.


ஹவாய் நோவா 7 ப்ரோ 5 ஜி விவரங்கள்:

இந்த போன் டூயல்-சிம் (நானோ) ஸ்லாட்டைக் கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 10 அடிப்படையாகக் கொண்ட EMUI 10.1-ல் இயங்குகிறது. இந்த போன் 6.57 அங்குல முழு எச்டி + (1,080x2,340 பிக்சல்கள்) OLED வளைந்த டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது 8 ஜிபி ரேம் உடன் ஹைசிலிகான் கிரின் 985 5 ஜி சோசி மூலம் இயக்கப்படுகிறது.

போனில், 64 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா, 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா உள்ளது. டெலிஃபோட்டோ ஷூட்டர் 5 எக்ஸ் ஆப்டிகல் ஜூம், 10 எக்ஸ் ஹைப்ரிட் ஜூம் மற்றும் 50 எக்ஸ் டிஜிட்டல் ஜூம் ஆகியவற்றை வழங்குகிறது. மேலும், 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமராவும் உள்ளது. முன்பக்கத்தில், 32 மெகாபிக்சல் செல்பி கேமராவும், 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஷூட்டரும் உள்ளன.

போனில் 256 ஜிபி வரை ஆன்போர்டு ஸ்டோரேஜ் உள்ளது. இது 40W சூப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இணைப்பு விருப்பங்களில் 5 ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.1, என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும் பல உள்ளன. போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது. இது 160.36x73.74x7.98 மிமீ அளவு மற்றும் 176 கிராம் எடையுள்ளதாக இருக்கும்.

ஹவாய் நோவா 7 5 ஜி 160.64x74.33x7.96 மிமீ அளவு மற்றும் 180 கிராம் எடையைக் கொண்டுள்ளது

ஹவாய் நோவா 7 5 ஜி விவரங்கள்:

இந்த போன் சிறிய 6.53 அங்குல முழு எச்டி + (1,080x2,340 பிக்சல்கள்) OLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது ஹைசிலிகான் கிரின் 985 5 ஜி சோசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த போன் 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா 3x ஆப்டிகல் ஜூம், 5 எக்ஸ் ஹைப்ரிட் ஜூம் மற்றும் 20 எக்ஸ் டிஜிட்டல் ஜூம் ஆகியவற்றை ஆதரிக்கிறது. முன்பக்கத்தில், ஒற்றை 32 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது. 

Advertisement

ஹவாய் நோவா 7 5 ஜி 160.64x74.33x7.96 மிமீ அளவு மற்றும் 180 கிராம் எடையும் கொண்டது. மற்ற விவரக்குறிப்புகள் அனைத்தும் ஹவாய் நோவா 7 5 ஜி புரோ மாடலுடன் இணையானவை.

ஹவாய் நோவா 7 எஸ்இ 5 ஜி 6.5 இன்ச் முழு எச்டி + டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது

ஹவாய் நோவா 7 எஸ்இ 5 ஜி விவரங்கள்:

இந்த போன், 6.5 அங்குல முழு எச்டி + (1,080x2,400 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது ஹைசிலிகான் கிரின் 820 5 ஜி SoC-யால் இயக்கப்படுகிறது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை ஸ்டோரேஜ் ஆப்ஷன்களைக் கொண்டுள்ளது.

Advertisement

கேமரா அமைப்பில், 64 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் கேமரா ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில், 16 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது.

இந்த போனும் 4,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இதில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது. இந்த மாடலில் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளது. இந்த போன் 162.31x75.0x8.5 மிமீ அளவு மற்றும் 189 கிராம் எடையைக் கொண்டுள்ளது. 

 
KEY SPECS
Display 6.57-inch
Processor HiSilicon Kirin 985
Front Camera 32-megapixel + 8-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 10
Resolution 1080x2340 pixels
 
NEWS
KEY SPECS
Display 6.53-inch
Processor HiSilicon Kirin 985
Front Camera 32-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
 
NEWS
KEY SPECS
Display 6.50-inch
Processor HiSilicon Kirin 820
Front Camera 16-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. அவசரம்! Realme GT 7, GT 7T போன்கள் ₹28,999-ல இருந்து ஆரம்பம் – இந்த பெஸ்ட் டீலை மிஸ் பண்ணாதீங்க!
  2. அறிமுகமானது Motorola Edge 60: 50MP கேமரா, 5500mAh பேட்டரி, MIL STD-810H - முழு விபரம் இதோ!
  3. Oppo K13x 5G: ₹15,999-க்குள்ளே லான்ச்! பிளாட் டிஸ்ப்ளே, 6000mAh பேட்டரி - கசிந்த முழு விபரம்!
  4. அறிமுகமாகிறது Vivo X Fold 5: -20°C குளிர்லையும் அசால்ட்டா இயங்கும்! அசத்தலான டிசைன் வெளியானது!
  5. அறிமுகமானது Huawei Band 10: 100 வொர்க்அவுட் மோட்ஸ், ஸ்போ2 கண்காணிப்பு - முழு விபரம் இதோ!
  6. அறிமுகமாகிறது Tecno Pova 7 Neo 4G: MediaTek Helio G100, 120Hz டிஸ்ப்ளே - முழு விபரம் இதோ!
  7. அறிமுகமானது OnePlus Pad 3: விலை, அம்சங்கள், பவர்ஃபுல் ப்ராசஸர் – முழு விபரம் இதோ!
  8. அறிமுகமானது OnePlus 13s: கலர் ஆப்ஷன்கள், அம்சங்கள், விலை - முழு விபரம் இதோ!
  9. Vi, Vivo அசத்தல் கூட்டணி: Vivo V50e உடன் 5G, OTT சலுகைகள்! முழு விபரம் இதோ!
  10. 6300mAh பேட்டரி, Snapdragon 7 Gen 4 உடன் Realme 15 5G: பக்கா பட்ஜெட் 5G போன்!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.