65W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறதா Huawei Mate Xs...?!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 30 டிசம்பர் 2019 13:23 IST
ஹைலைட்ஸ்
  • Huawei Mate Xs மாதிரி எண் TAH-AN00mஐ கொண்டு செல்லும் என்று நம்பப்படுகிறது
  • வரவிருக்கும் போன் 65W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை வழங்க முனைகிறது
  • Huawei Mate Xs-ல் மேம்பட்ட கீல் வடிவமைப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது

Huawei Mate Xs, இந்த ஆண்டு தொடக்கத்தில் TENAA-விலும் காணப்பட்டதாக கூறப்படுகிறது

2020 முதல் காலாண்டில் Huawei Mate Xs என அழைக்கப்படும் Mate X மடிக்கக்கூடிய போனின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை அறிமுகப்படுத்துவதாக ஹவாய் சமீபத்தில் உறுதிப்படுத்தியது. இப்போது, ​​Huawei Mate Xs சீனாவில் கட்டாய 3C சான்றிதழைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. Mate Xs ஒரு விரைவான பிராசசர், சுத்திகரிக்கப்பட்ட கீல் பொறிமுறை மற்றும் ஒட்டுமொத்தமாக நீடித்த மற்றும் நெகிழக்கூடிய கட்டமைப்பை வழங்குவதன் மூலம் Huawei Mate X மேம்படும் என்று கூறப்படுகிறது. ஆனால், வடிவமைப்பு அதன் முன்னோடிக்கு இணையாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும்.

மாடல் எண் TAH-AN00m-ஐக் கொண்ட ஒரு ஹவாய் போன், Huawei Mate Xs எனக் குறிக்கப்படுகிறது. இது சீனாவில் 3C-யால் சான்றிதழ் பெற்றதாக ITHome தெரிவித்துள்ளது. போனின் சான்றிதழ் பட்டியலில், இது 65W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்று குறிப்பிடுகிறது. இது Oppo Reno 3C-யில் சமீபத்தில் பார்த்த Oppo's 65W சார்ஜிங் தொழில்நுட்பத்தின் அதே லீக்கில் வைக்கிறது. மேலும், அடுத்த ஆண்டு Xiaomi போன்களிலும் இதுபோன்ற ஒன்றைக் காண்போம்.

Huawei Mate Xs, Kirin 990 SoC-ஐ பேக் செய்வது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இரட்டை-பயன்முறை 5G (SA + NSA) இணைப்பு ஆதரவோடு ஒருங்கிணைந்த 5G மோடமுடன் வரும்.  மறுபுறம், Huawei Mate X, 5G இணைப்பை அனுமதிக்க Kirin 990 SoC உடன் Balong 5000 மோடம் பொருத்தப்பட்டிருந்தது.

வேகமான பிராசசரைத் தவிர, Huawei Mate Xs அதன் முன்னோடியுடன் ஒப்பிடும்போது சில வடிவமைப்பு மாற்றங்களைக் கொண்டுவருவதாகவும் கூறப்படுகிறது. அதாவது மிகவும் திறமையான கீல் பொறிமுறை. மேலும், இது Huawei Mate X உடன் ஒப்பிடும்போது மிகவும் நீடித்த டிஸ்பிளே தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கும். மேற்பரப்பில், வடிவமைப்பு மாற்றங்கள் பெரியதாக இருக்காது. ஆனால், Huawei Mate Xs உள்ளே மிக வேகமான போனாக இருக்கும். மேலும், இது போனில் நிறுவப்பட்ட கூகுளின் செயலிகள் தொகுப்பு இல்லாமல் HMS கோரைப் பயன்படுத்தும்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Huawei, Huawei Mate Xs
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Poco X8 Pro Series – வெளியீட்டு தேதி, இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் அம்சங்கள்
  2. ChatGPT-இல் Chats-ஐ Delete மற்றும் Archive செய்வது எப்படி? – படிப்படியாக நீக்கும் முறைகள் இங்கே
  3. Realme 16T 5G, P4R 5G இந்தியாவில் விரைவில் அறிமுகம் – நிறங்கள், ஸ்டோரேஜ் தகவல் வெளியீடு
  4. இந்த வாரத்தின் சிறந்த OTT வெளியீடுகள் (மார்ச் 9 - மார்ச் 15): என்னென்ன படங்கள்ன்னு பாருங்கள்
  5. Samsung Galaxy M17e 5G இந்திய விலை லீக் – மார்ச் 17 அறிமுகத்திற்கு முன் தகவல்
  6. Motorola அறிமுகப்படுத்திய Motorola Edge 70 Fusion+ – Triple Camera, 5,200mAh பேட்டரி
  7. iPhone Fold-ல் iPad போன்ற UI, Split-Screen Apps ஆதரவு வரலாம்
  8. James Webb Space Telescope-ன் புதிய கண்டுபிடிப்பு: Jupiter ஆரோராவில் Io, Ganymede தடயங்கள்
  9. Meta Platforms மோசடி தடுப்பு கருவிகளை விரிவுபடுத்துகிறது – WhatsApp-ல் புதிய Device Link எச்சரிக்கை
  10. Xiaomi 17 Ultra இந்தியாவில் அறிமுகம் – 200 மெகாபிக்சல் Leica கேமரா, தொடர்ச்சியான Optical Zoom: விலை மற்றும் அம்சங்கள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.