பாப்-அப் செல்பி கேமராவுடன் அறிமுகமானது ஹானர் 9 எக்ஸ் புரோ! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 14 மே 2020 08:00 IST
ஹைலைட்ஸ்
  • ஹானர் 9 எக்ஸ் புரோ இந்த மாதத்தில் விற்பனைக்கு வரும்
  • இந்த போனில் கூகுள் பிளே ஸ்டோர் இல்லை
  • நிறுவனம் அதன் சொந்த ஹவாய் மொபைல் சர்வீசஸ் (HMS) கொண்டுள்ளது

ஹானர் 9 எக்ஸ் புரோ பிப்ரவரியில் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டது

ஹானர் இந்தியாவுக்கு புதிய போனைக் கொண்டுவருகிறது. ஹானர் 9 எக்ஸ் புரோ செவ்வாய்க்கிழமையன்று அறிமுகப்படுத்தப்பட்டது. கூகுளின் மொபைல் சேவைக்கு பதிலாக, இந்த போனில் நிறுவனத்தின் சொந்த ஹவாய் மொபைல் சர்வீசஸ் (எச்எம்எஸ்) உள்ளது. புதிய போன் ஆண்ட்ராய்டு ஓஎஸ்-ல் இயக்கும். ஹானர் 9 எக்ஸ் ப்ரோவில் பாப்-அப் செல்பி கேமரா உள்ளது. போனின் பின்புறத்தில் மூன்று கேமராக்கள் உள்ளன.


போனின் விலை:

6 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட் Honor 9X Pro-வின் விலை ரூ.17,999 ஆகும். வெளியீட்டு சலுகையில் ரூ.3,000 தள்ளுபடி மற்றும் நிறுவனத்திடமிருந்து விலை இல்லாத ஈ.எம்.ஐ கிடைக்கும்.


போனின் விவரங்கள்:

ஹானர் 9 எக்ஸ் புரோ நிறுவனத்தின் EMUI 9.1 உடன் Android 9 Pie-ல் இயக்கும். இந்த போனில் Google Play Store இல்லை. இந்த போனில் 6.59 இன்ச் எஃப்.எச்.டி + டிஸ்ப்ளே உள்ளது. இது HiSilicon Kirin 810 சிப்செட், 6 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜுடன் வருகிறது. 

ஹானர் 9 எக்ஸ் ப்ரோவின் பின்புறத்தில் மூன்று கேமராக்கள் உள்ளன. இந்த கேமரா 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சாரைக் கொண்டுள்ளது. இந்த போன் 16 மெகாபிக்சல் பாப்-அப் செல்பி கேமராவுடன் வருகிறது.

இணைப்பிற்காக, இந்த போனில் 4 ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 4.2, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளது. போனில் கைரேகை சென்சார் உள்ளது. 4,000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட இந்த போனின் எடை 202 கிராம் ஆகும்.

Advertisement


Is Mi 10 an expensive OnePlus 8 or a budget budget S20 Ultra? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.