கூகுள் பிக்சல் 4ஏ விவரங்கள் வெளியாகின!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 10 ஏப்ரல் 2020 15:14 IST
ஹைலைட்ஸ்
  • கூகுள் பிக்சல் 4ஏ விவரங்கள் வெளியாகின
  • பிக்சல் 4ஏ-க்கான சில்லறை பெட்டியின் படமும் கசிந்தது
  • கூகுள் பிக்சல் 4ஏ ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 730 SoC-யால் இயக்கப்படலாம்

கூகிள் பிக்சல் 4ஏ-வின் கருப்பு வேரியண்ட், கசிந்த புகைப்படத்தில் வெள்ளை பவர் பொத்தானுடன் காணப்படுகிறது

Photo Credit: Twitter/ TechDroider

கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனின் விவரங்கள் வெளியாகின. இந்த போன் 5.81 இன்ச் முழு எச்டி + ஸ்கிரீன் மூலம் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போனின் சில்லறை பெட்டியின் படமும் கசிந்துள்ளது. இது சதுர கேமரா தொகுதி மற்றும் கருப்பு கலர் ஆப்ஷனை காட்டுகிறது.

9to5Google-ன் அறிக்கையின்படி, வரவிருக்கும் Google Pixel 4a, 1,080x2,340 பிக்சல்கள் தெளிவுதிறனுடன் 5.8 இன்ச் டிஸ்பிளேவாக இருக்கும். பிக்சல் 4ஏ அட்ரினோ 618 ஜி.பீ.யுடன் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 730 SoC-யால் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூகுள் பிக்சல் 4a 3,080mAh பேட்டரியைக் கொண்டிருக்கும். இந்த போன் 64 ஜிபி + 6 ஜிபி மற்றும் 128 ஜிபி + 6 ஜிபி என இரு வேரியண்டுகளில் வரும். போனில், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் வழியாக 18w ஃபாஸ்ட் சார்ஜிங் இடம்பெறலாம். 

மேலும், பின்புறத்தில் உள்ள கேமராவில் Google பிக்சல் 4 போன்ற வீடியோ பதிவு திறன் கொண்ட 12.2 மெகாபிக்சல் சென்சார் இருக்கும். புதிய கசிவு, 8 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் மற்றும் 3.5 மிமீ headphone jack இருக்கும் என்று தெரிவிக்கிறது. 

அடுத்ததாக, சில்லறை பெட்டியின் கசிந்த படம், எல்.ஈ.டி ஃபிளாஷ் மற்றும் ஒற்றை பின்புற கேமரா கொண்ட சதுர கேமரா தொகுதியை காட்டுகிறது. போனின் கருப்பு வேரியண்ட், கூகுளின் வெள்ளை பவர் பொத்தானைக் கொண்டிருக்கும். இந்த பெட்டி, அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் அறிமுகத்தை குறிக்கக்கூடும்.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Reliable camera performance
  • Lean software with guaranteed updates
  • Stereo speakers
  • Vivid OLED display
  • Light, built well
  • Bad
  • Relatively low battery capacity
  • No ultra-wide camera
 
KEY SPECS
Display 5.81-inch
Processor Qualcomm Snapdragon 730G
Front Camera 8-megapixel
Rear Camera 12.2-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 3140mAh
OS Android 10
Resolution 1080x2340 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Google, Google Pixel 4a, Google Pixel 3a, Google Pixel 4a Specifications
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. iPhone 17e வருது! பட்ஜெட் ஐபோன்ல இப்போ மேக்சேஃப் சப்போர்ட்.. சிங்கிள் கேமராவோட தரமான சம்பவம் பண்ணப்போற ஆப்பிள்
  2. சாம்சங், ஐபோனுக்கே டஃப் கொடுக்க ஷாவ்மி ரெடி! Xiaomi 17 Ultra-வோட குளோபல் ரெண்டர்ஸ் லீக்.. அந்த 200MP ஜூம் வேற லெவல்
  3. பிக்சல் 10ஏ-ல இவ்வளவு சூப்பர் கலர்ஸா? லீக்கான 4 மாஸ் கலர்கள் இதோ! பிப்ரவரி 18-க்காக வெயிட்டிங்
  4. கனவு விலையில் Vivo V50 5G! Flipkart-ல் மெகா டிஸ்கவுண்ட்.. 6000mAh பேட்டரி, Zeiss கேமரா இப்போ இவ்வளவு கம்மி விலையிலா?
  5. இனி பிளாக்ஷிப் போன் பட்ஜெட் விலையில்! Samsung Galaxy S24 FE இப்போ Amazon-ல் செம சீப்.. மிஸ் பண்ணிடாதீங்க
  6. ஸ்மார்ட்போன் ஹிஸ்டரிலயே இப்படி ஒரு பேட்டரியா? 7,400mAh உடன் மிரட்டும் iQOO 15 Ultra! கேமர்களுக்கு இதுதான் இனி ஒரே சாய்ஸ்
  7. பிக்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்! Google Pixel 10a எப்போ வருது தெரியுமா? டிசைன் மற்றும் கலர் டீசர் ரிலீஸ்
  8. விவோவோட அடுத்த தரமான போன் ரெடி! Geekbench-ல் மிரட்டும் Vivo V70 Elite.. பட்ஜெட்ல ஒரு பிளாக்ஷிப் போனா?
  9. விலை குறைந்தது OnePlus 13! பிளிப்கார்ட்டில் ரூ.12,000 வரை சேமிக்க ஒரு சூப்பர் வாய்ப்பு. ஆஃபரை எப்படி பெறுவது?
  10. S26 Ultra-வோட புது கலர்ஸ் பார்த்தீங்களா? சாம்சங் ரசிகர்களுக்குப் பிடிச்ச அந்த ஒரு கலர் திரும்ப வருது! டிசைன்லயும் பெரிய மாற்றம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.