பிஎஸ்என்எல்-ன் புதிய ரூ.2,399 ப்ரீபெய்ட் ப்ளான் அறிமுகம்!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 26 மே 2020 11:08 IST
ஹைலைட்ஸ்
  • ரூ.2,399 ப்ரீபெய்ட் ப்ளானை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது
  • இந்த ப்ளான் 600 நாட்கள் செல்லுபடியாகும்
  • ஒவ்வொரு நாளும் 250 நிமிட பேச்சு நேரம் உள்ளது

பிஎஸ்என்எல் ரூ.2,399 ப்ளானில் டேட்டா பலன்கள் இல்லை

பிஎஸ்என்எல் புதிய ப்ரீபெய்ட் ப்ளானை ரூ.2,399-க்கு அறிமுகப்படுத்துகிறது. இந்த ப்ளானின் வேலிடிட்டி 600 நாட்கள் ஆகும். புதிய ப்ளான் நிறுவனத்தின் சத்தீஸ்கர் வட்டம் ட்விட்டர் கணக்கிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ப்ளான் ஒரு நாளைக்கு 250 நிமிட குரல் அழைப்புகளை அனுமதிக்கிறது. டேட்டா பலன்கள் வசதி இந்த ப்ளானில் இல்லை. நாடு முழுவதும் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் இந்த ப்ளானைப் பெறலாம். இலவச பிஎஸ்என்எல் ட்யூன்களை முதல் 60 நாட்களுக்குப் பயன்படுத்தலாம்.

நிறுவனத்தின் சத்தீஸ்கர் வட்டம் ட்விட்டர் கணக்கின் படி, பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் ரூ.2,399-க்கு ரீசார்ஜ் செய்தால் 600 நாட்கள் வேலிடிட்டியைப் பெறுவார்கள். ஒவ்வொரு நாளும் முழு நாட்டிலும் உள்ள எந்த எண்ணுக்கும் 250 நிமிட குரல் அழைப்புகள் செய்யலாம். ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் பயன்படுத்தலாம். இந்த ப்ளானுடன் எந்த டேட்டாவையும் பயன்படுத்த முடியாது.

இந்தத் ப்ளானிற்கு ஒரு எம்பி டேட்டா பயன்பாட்டிற்கு 25 பைசா செலவாகும். தினசரி குரல் அழைப்புகளின் உள்ளூர் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 1 ரூபாயும், தேசிய அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 1.3 ரூபாயும் செலவாகும். முதல் 60 நாட்கள் இலவச பிஎஸ்என்எல் ட்யூன்களைப் பயன்படுத்தலாம். இதற்கான செலவு மாதத்திற்கு 42 ரூபாய் ஆகும்.



Is Redmi Note 9 Pro Max the best affordable camera phone in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: BSNL, BSNL Rs 2399 pre paid plan
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ரூ. 80,000-க்குள் கிடைக்கும் சிறந்த கேமிங் லேப்டாப்கள்: ஆசஸ் டஃப் A15, லெனோவா LOQ மற்றும் பல சிறந்த தேர்வுகள்
  2. மோட்டோ ஜி77 பவர் ஜூலை 8 வெளியீட்டிற்கு முன் இணையதளத்தில் முக்கிய விவரக்குறிப்புகளுடன் பட்டியலிடப்பட்டது
  3. நத்திங் போன் 4b இந்தியா அறிமுகம்: வெளியீட்டு தேதி, எதிர்பார்க்கப்படும் விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள்
  4. அமேசான் பிரைம் டே 2026: ஃபயர் டிவி ஸ்டிக் மற்றும் ஸ்ட்ரீமிங் சாதனங்களுக்கான சிறந்த சலுகைகள்
  5. அமேசான் பிரைம் டே 2026 லேப்டாப் டீல்கள்: HP, Asus, Lenovo, Dell, Acer மாடல்களுக்கு சிறந்த தள்ளுபடிகள்
  6. Vivo Y500 4G அறிமுகம்:8,100mAh பேட்டரி மற்றும் 50 மெகாபிக்சல் கேமராவுடன் வெளியீடு -விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  7. அமேசான் பிரைம் டே 2026: சாம்சங், சோனி, லுமியோ உள்ளிட்ட நிறுவனங்களின் 55-அங்குல ஸ்மார்ட் டிவி சலுகைகள்
  8. இந்தியாவில் ₹30,000-க்குள் சிறந்த கேமரா போன்கள்: Motorola Edge 70 Fusion, Galaxy F56 மற்றும் பல
  9. இந்தியாவில் ரூ. 30,000-க்கு கீழ் சிறந்த மொபைல்கள்: மோட்டோரோலா எட்ஜ் 70 ஃபியூஷன், ரியல்மி P4 பவர் மற்றும் பல
  10. இன்டெல் கோர் 5 சீரிஸ் 3 சிபியுஉடன் இந்தியாவில் அறிமுகமான ஆசஸ் விவோபுக் 15 (2026): விலை மற்றும் சிறப்பம்சங்கள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.