வெளியானது சியோமி 'ப்ளாக் ஷார்க் 2': விலை, சிறப்பம்சங்கள் உள்ளே!

விளம்பரம்
Edited by Murali S, மேம்படுத்தப்பட்டது: 27 மே 2019 19:20 IST
ஹைலைட்ஸ்
  • சியோமி ப்ளாக் ஷார்க் 2 இந்தியாவில் அறிமுகமானது
  • இதன் ஆரம்ப விலை ரூபாய் 39,999
  • இந்த ஸ்மார்ட்போன் ஃப்ளிப்கார்ட்டில் ஜூன் 4-ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ளது

'ப்ளாக் ஷார்க் 2' ஃப்ளிப்கார்ட் தள ஆரம்ப விலை ரூபாய் 39,999.

இன்று இந்தியாவில் அறிமுகமானது, சியோமி 'ப்ளாக் ஷார்க் 2'. இதன் அறிமுக நிகழ்வு மே 27-ஆம் தேதியான இன்று புதுடெல்லியில் மதியம் 1 மணிக்கு நடைபெற்றது. ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டு செயல்படும் இந்த ஸ்மார்ட்போனில் லிக்விட் கூல் (Liquid Cool) தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. கேமிங்கிற்காகவே பிரத்யேகமாகவே தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்பொனின் ஃப்ளிப்கார்ட் ஆரம்ப விலை ரூபாய் 39,999.

சியோமி 'ப்ளாக் ஷார்க் 2': விலை

இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் இரண்டு வகைகளில் அறிமுகமாகியுள்ளது.  அதில் ஒரு வகையான 6GB RAM + 128GB சேமிப்பு அளவு கொண்ட 'ப்ளாக் ஷார்க் 2' 39,999 ரூபாய் என்ற விலையில் அறிமுகமாகவுள்ளது. இதன் மற்ற வகைகளான 12GB RAM + 256GB சேமிப்பு அளவு கொண்ட 'ப்ளாக் ஷார்க் 2' விலை 49,999 ரூபாய். இந்த சியோமி 'ப்ளாக் ஷார்க் 2' ஃப்ளிப்கார்ட் தளத்தில் ஜூன் 4-ஆம் தேதியன்று விற்பனைக்கு வரவுள்ளது.

சியோமி 'ப்ளாக் ஷார்க் 2': சிறப்பம்சங்கள்

இரண்டு நானோ-சிம் வசதிகளை கொண்ட இந்த 'ப்ளாக் ஷார்க் 2' 6.39-இன்ச் FHD+ திரை (1080x2340 பிக்சல்கள்), 19.5:9 திரை விகிதம் மற்றும் 403ppi பிக்சல் டென்சிடியையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னேப்ட்ராகன் 855 ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் லிக்விட் கூல் (Liquid Cool) தொழில்நுட்பத்தில் செயல்படுகிறது. இதனால், மற்ற ஸ்மார்ட்போன்களை விட, இதில் வெப்பத்தை வெளிக்கடத்தும் திறன் 20 மடங்கு வரை அதிகமாக இருக்கும்.

கேமரா பற்றி பேசுகையில், இரண்டு பின்புற கேமராக்களை கொண்டுள்ளது இந்த 'ப்ளாக் ஷார்க் 2'. 48 மெகாபிக்சல் மற்றும் 12 மெகாபிக்சல் என்ற அளவுகளை கொண்டுள்ளது இந்த கேமராக்கள். அதில் 12 மெகாப்க்சல் கேமரா, 2x ஆப்டிகல் ஜூம் வசதி கொண்டுள்ளது. மேலும், 20 மெகாபிக்சல் அளவிலான முன்புற செல்பி கேமராவை கொண்டுள்ளது. 

Advertisement

4,000mAh அளவிலான பேட்டரியை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் டை-C சார்ஜர் போர்ட் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், 4G வசதி மற்றும் ப்ளூடூத் v5, வை-பை வசதிகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.


Is ROG Phone the best gaming smartphone in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Solid build quality
  • Excellent performance
  • Good pressure-sensitive display
  • Bad
  • No dust or water resistance
  • Large and bulky
  • Underwhelming cameras
 
KEY SPECS
Display 6.39-inch
Processor Qualcomm Snapdragon 855
Front Camera 20-megapixel
Rear Camera 48-megapixel + 12-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 9.0 Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

The resident bot. If you email me, a human will respond. ...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Vi, Vivo அசத்தல் கூட்டணி: Vivo V50e உடன் 5G, OTT சலுகைகள்! முழு விபரம் இதோ!
  2. 6300mAh பேட்டரி, Snapdragon 7 Gen 4 உடன் Realme 15 5G: பக்கா பட்ஜெட் 5G போன்!
  3. S25 Ultra: கேமரா, பேட்டரி, AI அம்சங்களுடன் மலிவான விலையில்! மிஸ் பண்ணிடாதீங்க!
  4. Dimensity 7060 சிப்செட்டுடன் Lava Storm Play 5G: கேமர்கள், பட்ஜெட் 5G-க்கு ரெடியா?
  5. கலக்கும் Realme C71: 50MP கேமரா, நீண்ட நேரம் தாங்கும் பேட்டரி - வேற லெவல் போன்
  6. Nothing-ன் புது அவதாரம்! Phone 3, Headphone 1: மாஸ் லான்ச்சுக்கு ரெடியாகுங்க
  7. பார்த்துட்டீங்களா! Vivo T4 Ultra-வோட பெரிய ஜூம் லென்ஸ் கேமரா அட்ராசிட்டி! இதோட அம்சங்கள் வேற லெவல்!
  8. iQOO Neo 10: விலை குறைவு, ஆனால் அசத்தலான அம்சங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!
  9. Realme GT 7, GT 7T: பவர்ஃபுல் சிப், 120W சார்ஜிங்குடன் இந்திய மார்க்கெட்ல - மிஸ் பண்ணாதீங்க!
  10. ஏர்டெல் புது பிளான்ஸ்: ஓடிடி பிரியர்களுக்கு ஜாக்பாட்! விலை, டேட்டா, முழு விவரம் இதோ!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.