பவர்புல் பிராசசருடன் Asus ROG Phone 3 அறிமுகம்! வேற லெவல் ஸ்மார்ட்போன்!!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 23 ஜூலை 2020 12:18 IST
ஹைலைட்ஸ்
  • இதில் 256 ஜிபி மெமரி உள்ளது
  • இந்தியாவில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது
  • ஸ்மார்ட்போன் சூடாவதைக் கட்டுப்படுத்தும் அமைப்பு உள்ளது

8GB + 128GB மெமரி கொண்ட அசுஸ் ரோக் போன் 3 ஸ்மார்ட்போனின் விலை 49,999 ரூபாய்

அசுஸ் நிறுவனம் கடந்தாண்டு ரோக் போன் 2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த நிலையில், இந்தாண்டு தற்போது ரோக் போன் 3 மாடல் அறிமுகமாகியுள்ளது. இது முழுக்க முழுக்க கேமிங்கிற்காகவே உருவாக்கப்பட்ட ஸ்மார்ட்போன் ஆகும். ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனிலேயே பவர்புல் பிராசசரான குவால்காம் ஸ்நாப்டிராகன் 865+ SoC இதில் கொடுக்கப்பட்டுள்ளது. கேமிங் பிரியர்களுக்காகவே கேம்கூல் 3 என்ற வெப்பத்தை தணிக்கும் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 

இதில் உள்ள பில்ட்-இன் ஃபேன் ஸ்மார்ட்போனின் வெப்பத்தை 4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைக்கிறது. எனவே, கேமிங் பிரியர்கள் பப்ஜி போன்ற அதிக மெமரி கொண்ட கேமை எந்தவித  தொந்தரவும் இல்லாமல் விளையாடலாம். மொபைல் சூடாவது கட்டுப்படுத்தப்படுகிறது. 8GB + 128GB மெமரி கொண்ட அசுஸ் ரோக் போன் 3 ஸ்மார்ட்போனின் விலை 49,999 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அசுஸ் ரோக் போன் 3 இல் உள்ள சிறப்பம்சங்கள்:
சிம்: டூயல் நானோ சிம்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10  ரோக் யுஐ
திரை அளவு: 6.59 இன்ச்
திரைத்தன்மை: அமோலேட் டிஸ்பிள, 144Hz ரெவ்ரெஷ்ரேட்
தொடுதிரை ஆதரவு: HDR10+ 
பாதுகாப்பு அம்சம்: கார்னிங் கொரிலா கிளாஸ் 6 ப்ரொட்டெக்ஷன்
பிராசசர்: ஆக்டாகோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் 865+ SoC பிராசசர்
பேட்டரி: 6,000 mAh
சார்ஜர்: 30W

கேமரா சிறப்பம்சம்: 

அசுஸ் ரோக் போன் 3 ஸ்மார்ட்போனில் பின்பக்கத்தில் ட்ரிப்பிள் கேமரா, அதாவது மூன்று கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் 64MP பிரைமரி கேமராவில், சோனி IMX686 சென்சார், f/1.8 லென்ஸ உள்ளது. இந்தக் கேமராவுக்கு ஆதரவாக 125 டிகிரி வைட் ஆங்கிள் லென்சுடன் 13MP செகன்டரி கேமராவும், 5MP மக்ரோ லென்ஸ் கேமராவும் உள்ளது.

அசுஸ் ரோக் 3 ஸ்மார்ட்போனில் ட்ரிப்பிள் கேமரா வழங்கப்பட்டுள்ளது

Advertisement

இதே போல் முன்பக்கத்தில் 24 மெகா பிக்சலுடன் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. முன்புறம், பின்புறம் இரண்டு கேமராக்கள் மூலமாக 4K வீடியோக்களை எடுக்க முடியும். கூடுதல் சிறப்பம்சங்களாக இது 5ஜி ஸ்மார்ட்போனாகும். வைஃபை, ஜிபிஎஸ், நேவிக், கைரோஸ்கோப்,  இன் டிஸ்பிளே விரல் ரேகை சென்சார் உள்ளிட்ட அம்சங்களும் உள்ளன. அசுஸ் ரோக் போன் 3 ஸ்மார்ட்போனின் எடை 240 கிராம் அளவுக்கு, கைகளுக்கு ஓரளவு அடக்கமாக உள்ளது., 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent performance in games
  • AirTriggers, side-mounted USB port, large accessory ecosystem
  • Good cameras
  • Bright, vibrant display
  • Bad
  • Gets warm when stressed
  • Bulky and heavy
  • No IP rating or wireless charging
 
KEY SPECS
Display 6.59-inch
Processor Qualcomm Snapdragon 865+
Front Camera 24-megapixel
Rear Camera 64-megapixel + 13-megapixel + 5-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 6000mAh
OS Android 10
Resolution 1080x2340 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. iPhone 17e வருது! பட்ஜெட் ஐபோன்ல இப்போ மேக்சேஃப் சப்போர்ட்.. சிங்கிள் கேமராவோட தரமான சம்பவம் பண்ணப்போற ஆப்பிள்
  2. சாம்சங், ஐபோனுக்கே டஃப் கொடுக்க ஷாவ்மி ரெடி! Xiaomi 17 Ultra-வோட குளோபல் ரெண்டர்ஸ் லீக்.. அந்த 200MP ஜூம் வேற லெவல்
  3. பிக்சல் 10ஏ-ல இவ்வளவு சூப்பர் கலர்ஸா? லீக்கான 4 மாஸ் கலர்கள் இதோ! பிப்ரவரி 18-க்காக வெயிட்டிங்
  4. கனவு விலையில் Vivo V50 5G! Flipkart-ல் மெகா டிஸ்கவுண்ட்.. 6000mAh பேட்டரி, Zeiss கேமரா இப்போ இவ்வளவு கம்மி விலையிலா?
  5. இனி பிளாக்ஷிப் போன் பட்ஜெட் விலையில்! Samsung Galaxy S24 FE இப்போ Amazon-ல் செம சீப்.. மிஸ் பண்ணிடாதீங்க
  6. ஸ்மார்ட்போன் ஹிஸ்டரிலயே இப்படி ஒரு பேட்டரியா? 7,400mAh உடன் மிரட்டும் iQOO 15 Ultra! கேமர்களுக்கு இதுதான் இனி ஒரே சாய்ஸ்
  7. பிக்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்! Google Pixel 10a எப்போ வருது தெரியுமா? டிசைன் மற்றும் கலர் டீசர் ரிலீஸ்
  8. விவோவோட அடுத்த தரமான போன் ரெடி! Geekbench-ல் மிரட்டும் Vivo V70 Elite.. பட்ஜெட்ல ஒரு பிளாக்ஷிப் போனா?
  9. விலை குறைந்தது OnePlus 13! பிளிப்கார்ட்டில் ரூ.12,000 வரை சேமிக்க ஒரு சூப்பர் வாய்ப்பு. ஆஃபரை எப்படி பெறுவது?
  10. S26 Ultra-வோட புது கலர்ஸ் பார்த்தீங்களா? சாம்சங் ரசிகர்களுக்குப் பிடிச்ச அந்த ஒரு கலர் திரும்ப வருது! டிசைன்லயும் பெரிய மாற்றம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.