AppleCare+: Theft and Loss Protection உடன் புதிய சலுகைகள் இந்தியாவில் அறிமுகம்

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 19 நவம்பர் 2025 23:12 IST
ஹைலைட்ஸ்
  • AppleCare+ with Theft and Loss திட்டத்தில், ஆண்டுக்கு இரண்டு முறை iPhone
  • இந்தியாவில் Annual மற்றும் Monthly Plans அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
  • Accidental Damage-க்கு Unlimited Repairs மற்றும் 80%க்கு கீழ் குறையும்

AppleCare+ இந்தியாவில் திருட்டு மற்றும் இழப்புப் பாதுகாப்புடன் வருகிறது

Photo Credit: Apple

உங்க iPhone-ஐ பத்திரமா வச்சிருக்கீங்களா? இப்போ Apple நிறுவனம், இந்தியால அவங்களுடைய AppleCare+ திட்டத்துல ஒரு பெரிய அப்டேட்டைக் கொண்டு வந்திருக்காங்க. இது iPhone யூஸர்களுக்கு ரொம்பவே முக்கியமான செய்தி. முக்கியமான அப்டேட் என்னன்னா, AppleCare+ with Theft and Loss என்ற புதிய திட்டம் அறிமுகமாகியிருக்கு. இதன் மூலம், உங்க iPhone திருடு போனாலோ அல்லது தொலைந்து போனாலோ, அதுக்கு பாதுகாப்பு (Coverage) கிடைக்கும். ஆண்டுக்கு இரண்டு முறை திருட்டு அல்லது இழப்பு ஏற்பட்டால், ஒரு சர்வீஸ் கட்டணம் செலுத்தி, நீங்க புதிய போனைப் பெறலாம். இதுதான் இந்த திட்டத்தின் பெரிய ஹைலைட். இப்போ வரைக்கும் AppleCare+-ல வருடாந்திர (Annual) திட்டங்கள் மட்டும்தான் இருந்தது. ஆனா, இப்போ Apple, Monthly Plan மற்றும் Annual Plan என ரெண்டு ஆப்ஷன்களையும் அறிமுகப்படுத்தியிருக்காங்க.

மாதாந்திரத் திட்டம்: இதன் விலை ரூ.799/மாதம் முதல் தொடங்குகிறது.

வருடாந்திரத் திட்டம்: இதை ஒரு வருஷத்துக்கு மொத்தமா வாங்கிக்கலாம்.

இந்த மாதாந்திர பிளான் மூலமா, iPhone பயனர்கள் தங்களுடைய வசதிக்கு ஏத்த மாதிரி, பிளானை எவ்வளவு நாள் வேணாலும் தொடரலாம்.

AppleCare+ மூலம் கிடைக்கும் மற்ற சலுகைகள்:

  1. Unlimited Accidental Damage Protection: உங்க iPhone தற்செயலா சேதமடைஞ்சா, ஸ்கிரீன் அல்லது பின் கண்ணாடி உடைஞ்சா, அல்லது லிக்விட் டேமேஜ் ஏற்பட்டா, Unlimited Repairs (எத்தனை தடவை வேணாலும் பழுதுபார்க்கலாம்) கிடைக்கும். ஒவ்வொரு முறை ஸ்கிரீன்/கண்ணாடி ரிப்பேருக்கு ரூ.2,500-ம், மற்ற விபத்து சேதங்களுக்கு ரூ.8,900-ம் சர்வீஸ் கட்டணமாக இருக்கும்.
  2. Battery Replacement: உங்க iPhone-ன் பேட்டரி ஹெல்த் (Battery Health) 80 சதவீதத்துக்குக் கீழே குறைஞ்சா, இலவசமா பேட்டரியை மாத்தித் தருவாங்க.
  3. Priority Support: 24/7 Priority Support மற்றும் அங்கீகரிக்கப்பட்ட Apple ஸ்டோர்ல Genuine Apple Parts-ஐ வச்சு ரிப்பேர் பண்ணி தருவாங்க.

இந்த AppleCare+ திட்டத்தை நீங்க புது iPhone வாங்கும்போதே வாங்கலாம். இல்லன்னா, போன் வாங்கிய 60 நாட்களுக்குள்ள உங்க iPhone Settings ஆப் மூலமா இந்த பிளானை ஆக்டிவேட் பண்ணிக்கலாம்.மொத்தத்துல, AppleCare+ மூலம் Theft and Loss Protection போன்ற கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் Monthly Plan போன்ற வசதிகள் வந்திருப்பது iPhone யூஸர்களுக்கு ரொம்பவே சந்தோஷமான செய்தி. இந்த Theft and Loss Protection மற்றும் ரூ.799/மாதம் என்ற Monthly Plan உங்களுக்கு பிடிச்சிருக்கா? உங்க iPhone-க்காக இந்த பிளானை வாங்குவீங்களா? கமெண்ட்ல சொல்லுங்க.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: IPhone, AppleCare, AppleCare Plus, APPLe

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. இன்ஸ்டாகிராம் இன்ஸ்டன்ட்ஸ் (Instagram Instants)விளக்கம்:இது என்ன, எப்படி வேலை செய்கிறது, அம்சங்கள் மற்றும் பல
  2. ரூ.5,000-க்குள் இந்தியாவின் சிறந்த இயர்பட்ஸ்: ஒப்போ என்கோ பட்ஸ் 3 ப்ரோ+, ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 4 ப்ரோ
  3. ரூ.30,000-க்குள் இந்தியாவின் சிறந்த போன்கள்: ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6, மோட்டோரோலா எட்ஜ் 70 மற்றும் சில
  4. யூடியூபின் லைக்னஸ் டிடெக்ஷன் டூல் இப்போது அனைத்து வயதுவந்த கிரியேட்டர்களுக்கும் கிடைக்கிறது
  5. முதலாளி ஒப்புதல் இன்றி ஆன்லைனில் பிஎஃப் தொகையைக் கோருவது எப்படி: ஒரு படிப்படியான புதிய இபிஎஃப்ஓ வழிகாட்டி
  6. ஏஐ அடிப்படையிலான மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக பணியாளர்களில் 10 சதவீதத்தை பணிநீக்கம் செய்ய மெட்டா திட்டம்
  7. மே 22 இந்திய அறிமுகத்திற்கு முன்னதாக ரியல்மி 16T 5ஜி கேமரா சிறப்பம்சங்கள் உறுதி செய்யப்பட்டன
  8. ரியல்மி 16 சீரிஸ் போன்களின் விலை இந்தியாவில் உயர்வு; ஒன்பிளஸ், போகோ மற்றும் லாவா விலைகளும் அதிகரிப்பு
  9. சேட்ஜிபிடி இமேஜஸ் 2.0 மூலம் இந்தியர்கள் 100 கோடிக்கும் அதிக படங்களை உருவாக்கியுள்ளனர்: சாம் ஆல்ட்மேன்
  10. மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ+ விரைவில் இந்தியாவில் அறிமுகம்; வடிவமைப்பு விவரங்கள் கசிவு
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.