ஆப்பிளின் இரண்டாவது iOS 12 மற்றும் tvOS பப்ளிக் பீட்டா வெளியீடு

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 6 ஜூலை 2018 15:20 IST
ஹைலைட்ஸ்
  • iOS 12,tvOS ஆகியவற்றின் பப்ளிக் பீட்டாவை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது
  • ஜிபிஎஸ், கார் ப்ளே பிரச்னைகள் சரி செய்யப்பட்டுள்ளன
  • tvOS பப்ளிக் பீட்டா 2 மூலம் சில கோளாறுகளை சரி செய்ய முடியும்

ஐ ஃபோன், ஐபேட் மாடல்களுக்கு இரண்டாவது iOS 12 பீட்டாவை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதற்கு முன் வெளியிடப்பட்ட முதல் iOS 12 பப்ளிக் பீட்டாவில் ஏற்பட்ட ஜிபிஎஸ், கார் ப்ளே பிரச்னைகள் காரணமாக இந்த இரண்டாவது பீட்டா வெளிவந்துள்ளது.

புதுப்பிக்கப்பட்ட வாய்ஸ் மெமோ ஆப் வசதி, குறைந்த பேட்டரி பவர் மோட் இண்டிகேட்டர், நோட்டிபிகேஷனில் உள்ள சில மாற்றங்கள் உட்பட பல வசதிகள் இதில் உள்ளன.

iOS 12 பப்ளிக் பீட்டவை பதிவிறக்கம் செய்ய

அனைத்து iOS 11 ஐ ஃபோன், ஐபேட் ஐபோட் டச் மாடல் ஆகியவற்றில் இந்த வசதியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தவிர ஐ ஃபோன் 5S மற்றும் அதற்கு பிறகு வெளிவந்த ஐ ஃபோன்களில் இந்த வசதியை பெற்று கொள்ளலாம். மேலும், அனைத்து ஐபேட் ஏர், ஐபேட் ப்ரோ மாடல்களிலும், ஐபேட் ஐந்தாவது ஜெனரேஷன் மற்றும் அதற்கு பின் வந்த மாடல்களிலும், ஐபேட் மினி 2 மற்றும் பின் வந்த மாடல்களிலும், ஐபாட் டச் ஆறாவது ஜெனரேஷனிலும் இதனை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

 

முதல் முறையாக iOS 12 பப்ளிக் பீட்டா பதிவிறக்கம் செய்வதாக இருந்தால், ஆப்பிள் பீட்டா சாஃப்ட்வேர் ப்ரோகிராமில் பதிவிட வேண்டும். ஆப்பிள் பீட்டா சாஃப்ட்வேர் ப்ரோகிராம் குறித்த சந்தேகங்களுக்கு, ஆப்பிள் நிறுவனம் பதில் அளித்துள்ளது. மேலும், ஃபோனில் உள்ள டேட்டாவை பேக்-அப் எடுத்த பின், iOS 12 பப்ளிக் பீட்டாவை பதிவிறக்கம் செய்யும்படி அறிவுறுத்தப் பட்டுள்ளது.

கடந்த மாதம் வெளியான முதல் iOS 12 பப்ளிக் பீட்டாவை ஏற்கனவே பதிவிறக்கம் செய்தவர்கள், செட்டிங்ஸ் > ஜெனரல் > சாஃப்ட்வேர் அப்டேட் சென்று பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். பதிவிறக்கத்தின் போது, ஃபோனில் குறைந்தது 50% பேட்டரி இருப்பது அவசியம். அதன் பின்னர், ஆட்டோமாடிக் அப்டேட்ஸ் ஆப்ஷன் மூலம், இனி வரும் பீட்டா அப்டேட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Advertisement

 

tvOS பப்ளிக் பீட்டா 2 பதிவிறக்கம் செய்வது எப்படி?

Advertisement

iOS 12 பப்ளிக் பீட்டாவை தவிர, tvOS பப்ளிக் பீட்டா 2-ஐயும் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. செட்டிங்ஸ் > ஜெனரல் > சாஃப்ட்வேர் அப்டேட் சென்று பப்ளிக் பீட்டாவை செயல்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம், முதல் iOS 12 பப்ளிக் பீட்டாவில் ஏற்பட்ட பிரச்னைகளை தீர்க்க முடியும்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Apple, iOS 12, tvOS 12
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.