Amazon Great Indian Festival Sale: எந்தெந்த போன்களுக்கு எவ்வளவு தள்ளுபடி.. முழு விவரம்!

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 24 செப்டம்பர் 2019 16:18 IST
ஹைலைட்ஸ்
  • iPhone XR and OnePlus 7 Pro will receive temporary price cuts
  • OnePlus 7 and Galaxy Note 9 will be available at discounted price
  • Deals on a wide range of accessories will be revealed on September 26

சியோமி போன்களுக்கான தள்ளுபடி குறித்து நாளை அமேசான் அறிவிக்கிறது.

அமேசான் கிரேட் இந்தியன் சேலுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், இந்த தள்ளுபடி விற்பனையில் எந்தெந்த போன்களுக்கு எவ்வளவு சலுகை என்பது குறித்த விவரங்களை அமேசான் தற்போது வெளியிட்டு வருகிறது.

அமேசானின் கிரேட் இந்தியன் சேலில், பட்ஜெட் போன் முதல் அனைத்து விலையிலான போன்களும் இந்த தள்ளுபடி விற்பனையில் இடம்பெறுகிறது. இதில், ஒன்பிளஸ்7 ப்ரோ, ஐபோன் XR, சாம்சங் கேலக்ஸி M30, சியோமி ரெட்மி 7 உள்ளிட்ட போன்கள் இடம்பெறுகின்றன. 

அமேசான் கிரேட் இந்தியன் சேலில், ஐபோன் XR, ஒன்பிளஸ்7 ப்ரோ, சாம்சங் கேலக்ஸி நோட் 9, ஓப்போ ரெனோ 2 உள்ளிட்ட போன்கள் அதன் சாதாரண விலையில் இருந்து குறைந்த விலையில் கிடைக்கின்றன. ஐபோன் XR 64ஜிபி மாடல் ரூ.49,990 லிருந்து தொடங்குகிறது.

ஒன்பிளஸ் 7 ரூ.32,999க்கும், 7 ப்ரோ பிளாக் 6ஜிபி +128ஜிபி மாடல் ரூ.48,999க்கும் கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி நோட் 9, 6ஜிபி +129ஜிபி வேரியண்ட் ரூ.57,990க்கு கிடைக்கிறது. ஹூவாய் மேட்20ப்ரோ ரூ.54,990க்கும் கிரேட் இந்தியன் சேலின் போது மேலும் குறைவாக கிடைக்கும் என தெரிகிறது. 

மத்திய தர ரக மாடல்களில், கேலக்ஸி M30, தற்போது ரூ.13,990க்கு அமேசானில் விற்பனையாகி வரும் இந்த போன் தள்ளுபடி விலை எவ்வளவு என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை, எனினும் தள்ளுபடியில் பங்கேற்கிறது.

இதேபோல், ஓப்போ K3, சியோமி Mi A3, உள்ளிட்ட போன்களும் குறைந்த விலையில் கிடைக்கின்றன. ரெட்மி 7 தற்போது ரூ.7,499க்கும் கிடைக்கும் அந்த போன் அமேசான் சேலில் மேலும் தள்ளுபடி விலையில் கிடைக்கும் என்று தெரிகிறது. 

அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேலில், சியோமி போன்களுக்கான சிறப்பு தள்ளுபடி இன்று அறிவிக்கப்படும் என தெரிகிறது. தொடர்ந்து, சாம்சங், ஓப்போ, விவோ உள்ளிட்ட போன்களுக்கான தள்ளுபடி குறித்த தகவல் நாளை அறிவிகப்பட உள்ளது. இதேபோல், ஒன்பிளஸ் மற்றும் ஹூவாய் போன்கள் மற்றும் செல்போன் உதிரி பாகங்களுக்கான தள்ளுபடி விவரமும் அடுத்தடுத்தது வர இருக்கிறது. 


 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. அமேசான் கிரேட் சம்மர் சேல்: ஒன்பிளஸ், ஐகூ, ரெட்மி மற்றும் பிற போன்கள் மீதான சிறந்த டீல்கள்
  2. அமேசான் கிரேட் சம்மர் சேல் 2026: முன்னணி பிராண்டுகளின் ஏர் கண்டிஷனர்கள் மீதான சிறந்த டீல்கள் இங்கே
  3. அமேசான் கிரேட் சம்மர் சேல்: ஸ்மார்ட்போன்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மீதான அதிரடி சலுகைகள் இப்போது நேரலையில்!
  4. கூகுள் ஹெல்த் கோச் இந்தியாவில் அறிமுகம்: ஃபிட்பிட் செயலி இனி 'கூகுள் ஹெல்த்' செயலியாக மாறுகிறது
  5. கூகுள் AI மோட் & AI ஓவர்வியூஸ்: நிபுணர் ஆலோசனை மற்றும் லிங்க் ப்ரிவியூ அம்சங்களுடன் மேம்பாடு
  6. சாம்சங் கேலக்ஸி வாட்ச் மயக்கம் வருவதை ஐந்து நிமிடங்களுக்கு முன்பே கணிக்கக்கூடும்: ஆய்வு முடிவுகள் தகவல்
  7. ஒப்போ ஃபைண்ட் X9 அல்ட்ரா மற்றும் X9s விற்பனை விவரம் உறுதி: அமேசான், பிளிப்கார்ட்டில் விரைவில் விற்பனை
  8. மோட்டோரோலா ரேஸர் ஃபோல்ட் இந்திய அறிமுகத் தேதி, வண்ணங்கள் மற்றும் மெமரி விவரங்கள் அறிவிப்பு
  9. ஒன்பிளஸ் நோர்ட் CE 6, CE 6 லைட் அறிமுகம்: 50MP கேமரா, அதிரடி விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  10. ஜான் டெர்னஸ் தலைமையில் ஆப்பிளின் ஃபோல்டபிள் ஐபேட், AI சாதனங்கள் மற்றும் டச்ஸ்கிரீன் மேக்புக் அறிமுகத் திட்டம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.