சீனாவில் அறிமுகமான சியோமியின் நோட்புக்கள்! தெரிந்துகொள்ள வேண்டியவை!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 29 மார்ச் 2019 20:37 IST
ஹைலைட்ஸ்
  • எம்ஐ நோட்புக் ஏர் 13.3 இஞ்ச் 2019, ரூ.55,600க்கு விற்பனை செய்யபடுகிறது.
  • எம்ஐ நோட்புக் ஏர் 15.6 இஞ்ச் 2019 ரூ.44,300க்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • எம்ஐ நோட்புக் ஏர் 15.6 இஞ்ச் 2019, ஏப்ரல் 26 முதல் விற்பனை!

எம்ஐ நோட்புக் ப்ரோ 13.3 இஞ்ச் (2019) தயாரிப்பு இன்று விற்பனைக்கு வெளியாகியுள்ளது.

Photo Credit: Weibo

எம்ஐ நோட்புக் ஏர் 12.5 இஞ்ச் 2019 பற்றிய தகவல் வெளியான நிலையில் சியோமி தற்போது இரண்டு புதிய நோட்புக் தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ளது. எம்ஐ நோட்புக் ஏர் 13.3 இஞ்ச் 2019 மற்றும் எம்ஐ நோட்புக் ஏர் 15.6 இஞ்ச் 2019 என இரண்டு தயாரிப்புகளை வெளியிட்டுள்ளது. 

இன்டெல் கோர் ஐ5 சிபியு மற்றும் 8 ஜிபி ரேம் வசதியை இந்த மாடல் நோட்புக் தயாரிப்புகள் கொண்டுள்ளது. சீனாவில் வரும் ஏப்ரல் 9 முதல் எம்ஐ நோட்புக் ஏர் 15.6 இஞ்ச் 2019 தயாரிப்பு வெளியாகும் நிலையில், இன்று முதல் எம்ஐ நோட்புக் ஏர் 13.3 இஞ்ச் 2019 விற்பனைக்கு வெளியாகிறது. 

விலை பட்டியலை பொருத்தவரை எம்ஐ நோட்புக் ஏர் 13.3 இஞ்ச் 2019 மாடல் ரூ.55,600 -க்கு விற்பனை செய்யபடுகிறது. 13.3 இஞ்ச் திரை, 8வது தலைமுறை இன்டெல் கோர் ஐ5 குவாட்கோர் பிராசஸ்சர் மற்றும் நீவிடியா ஜீஃவோர்ஸ் MX250 கிராபிக்ஸ் கார்டு இடம்பெற்றுள்ளது. 

1.3 கிலோ எடையுள்ள இந்த மடிக்கணினி மிகவும் எளிய டிசைனை கொண்டுள்ளது. மேலும் இந்த மடிக்கணினியில் ஒரு மெட்டல் ஃபேன் பொருத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் இந்த தயாரிப்பு வெப்பமடைவதை தவிர்க்க முடியும் என சியோமி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

எம்ஐ நோட்புக் ஏர் 15.6 இஞ்ச் 2019 பொருத்தவரை சீனாவில் இந்த மடிக்கணினிக்கு ரூ.44,300 வரைக்கும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 15.6 இஞ்ச் ஹெச்டி திரை கொண்டுள்ள இந்த தயாரிப்பில் இன்டெல் கோர் ஐ5 குவாட்கோர் பிராசஸ்சர் மற்றும் நீவிடியா ஜீஃவோர்ஸ் MX110 GPU, 8ஜிபி ரேம் மற்றும் 256/512 ஜிபி SSD சேமிப்பு வசதிகளை பெற்றுள்ளது. எம்எஸ் ஆஃப்பிஸ் முன்கூட்டியே இடம்பெற்று வெளியாகுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் டிஜிடல் விசைப்பலகையும் இடம்பெற்றுள்ளது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Xiaomi
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. சியோமி 17T, ரெட்மி நோட் 15 & 15 சீரிஸ் போன்களின் விலை இந்தியாவில் உயர்வு: திருத்தப்பட்ட விலைகளைப் பார்க்கவும்
  2. விவோ S2 மொபைலின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியானது: இந்தியாவில் விரைவில் அறிமுகம் உறுதியானது!
  3. ரெட்மி நோட் 17 இந்திய அறிமுகம் குறித்த அறிவிப்பு; இந்தியாவில் இதன் விலை இணையத்தில் கசிந்தது
  4. [பிரத்தியேகச் செய்தி]புதிய மீடியாடெக் சிப்செட், 3D வளைந்த திரையுடன் iQOOZ11 விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது
  5. Vi ரூ.200 ப்ரீபெய்ட் பிளான்: 20 OTT தளங்கள், லைவ் TV, வரம்பற்ற 5G டேட்டா மற்றும் பல சலுகைகள் அறிமுகம் !
  6. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல்: தொடக்க தேதி, HDFC வங்கி தள்ளுபடி மற்றும் சலுகைகள்!
  7. ஃபிளிப்கார்ட் சுதந்திர தின விற்பனை ஆகஸ்ட் 8 அன்று தொடங்குகிறது: வங்கிச் சலுகைகள் மற்றும் டீல்கள் அறிவிப்பு
  8. X பிரீமியம் vs இலவசம்: 2026-ல் இந்தியாவில் X பிரீமியம் வாங்குவது மதிப்புள்ளதா?
  9. இந்தியாவில் உங்கள் இன்ஸ்டாகிராம் பயோவில் பல இணைப்புகளைச் சேர்ப்பது எப்படி: ஒரு படிப்படியான வழிகாட்டி
  10. ஒவ்வொரு இந்தியப் பயனரும் உடனடியாக இயக்க வேண்டிய முதல் 5 வாட்ஸ்அப் தனியுரிமை அமைப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.