5 நாட்களில் பில்லியன் டாலரை தாண்டும் ஸ்மார்ட்போன்களின் ஆன்லைன் விற்பனை!

விளம்பரம்
Written by Indo-Asian News Service மேம்படுத்தப்பட்டது: 11 அக்டோபர் 2018 16:36 IST
ஹைலைட்ஸ்
  • விற்பனையளவில் அக்டோபர் மாதமானது சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
  • முதன்முறையாக ஆன்லைன் நிறுவனங்களின் பங்குகள் 42 சதவீதத்தை தொடவுள்ளது.
  • ஆன்லைன் விற்பனையானது நேரடி விற்பனையை விட வேகமாக வளர வாய்ப்புள்ளது.

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களின் ஃபெஸ்டிவல் ஆஃபர் சேல் மூலம் இந்தியாவில் ஸ்மார்ட்போனின்ன விற்பனையானது அடுத்த 5 நாட்களில் ஒரு பில்லியன் டாலரை (தோராயமாக ரூ.7,400 கோடி) தாண்டும் என கவுண்டர் பாய்ண்ட் தொழில்நுட்ப சந்தை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வு தெரிவித்துள்ளது.

இந்த அக்டோபர் மாதமானது ஸ்மார்ட்போனின் விற்பனை அளவில் சாதனை படைக்க உள்ளது. மேலும், இதுவரையில்லாத வகையில், ஆன்லைன் நிறுவனங்களின் பங்குகளானது 42 சதவீதத்தை தொட வாய்ப்புள்ளது என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் மிகப்பெரிய பங்களிப்பாக ஆன்லைன் ஸ்மார்ட்போன் சந்தையில் 90 சதவீத பங்குகளை இரண்டு முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்கள் கைப்பற்றுகின்றன.

இந்த ஆண்டின் மொத்த ஸ்மார்ட்போன் விற்பனையில், ஆன்லைன் நிறுவனங்களின் பங்களிப்பானது 36 சதவீதத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகிலே வேறெங்கும் இல்லாத வகையில் ஃபெஸ்டிவல் சேலில் 42 சதவீதத்தை எட்டுவது இதுவே முதன்முறை என கவுண்டர் பாய்ண்ட் தொழில்நுட்ப சந்தை ஆராய்ச்சி நிறுவனத்தின் இணை இயக்குனர் தருண் பதாக் தெரிவித்துள்ளார்.

இதில் மொத்த ஆன்லைன் சந்தையில், பாதிக்கும் மேலான இடத்தில் ஜியோமி நிறுவனமே முதன்மை வகுக்கிறது. எனினும் இந்த முறை ஜியோமி நிறுவனத்திற்கு போட்டியாக ரியல்மி, ஹானர், அசூஸ், நோக்கியா எச்எம்டி உள்ளிட்ட பிராண்டுகளும் இடம்பெறுகின்றன என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆன்லைன் விற்பனையில் சாம்சங் நிறுவனமும் தனது பிராண்டில் சிறந்து விற்பனையான இரண்டு மாடல்களை அறிவித்துள்ளது. அதில் ரூ.62,500 விலையில் விற்பனையான கேலக்ஸி s9 போனை ரூ.42,990 க்கு அமேசானில் விற்பனை செய்கிறது.

இந்தமுறை மொத்த ஆன்லைன் விற்பனையில், சீன நிறுவனங்களின் பங்களிப்பானது மட்டும் 70 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Amazon, Flipkart, Counterpoint, India
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. மோட்டோரோலா ரேஸர் ஃபோல்டு மதிப்பாய்வு:இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே மிகச்சிறந்த முதல் தலைமுறை மடிக்கக்கூடிய போனா?
  2. வாட்ஸ்அப் ஐஓஎஸ் செயலியில் வியூ-ஒன்ஸ் உரைச் செய்தி அம்சத்தை உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது
  3. சாம்சங் கேலக்ஸி புக்6 எட்ஜ் ஸ்னாப்டிராகன் X2 எலைட் சிப்,கேலக்ஸி AI அம்சங்களுடன் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
  4. ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 4 இந்தியாவின் அறிமுக தேதி, முக்கிய சிறப்பம்சங்கள் மற்றும் அம்சங்களுடன் வெளிவந்துள்ளது
  5. இந்தியாவில் ரெட்மி டர்போ 5 அறிமுகம்: 7,540mAh பேட்டரி, மீடியாடெக் சிப்செட், விலை மற்றும் முழு சிறப்பம்சங்கள்
  6. இந்தியாவில் ரெட்மி டர்போ 5 இன்று அறிமுகம்: இதன் விலை, தனித்துவமான வசதிகள் மற்றும் முழு விபரங்கள்
  7. ஹவாய் ஃப்ரீபட்ஸ் 7i, SE 4 இயர்போன்களின் இந்திய அறிமுக விபரம் வெளியானது
  8. ஐபோனில் வாட்ஸ்அப்பில் பல கணக்குகளை உருவாக்குவது மற்றும் நீக்குவது எப்படி: ஒரு படிப்படியான வழிகாட்டி
  9. வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கான குரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால்களை வாட்ஸ்அப் சோதிக்கத் தொடங்கியுள்ளதாகத் தகவல்
  10. விவோ V70 மற்றும் Y சீரிஸ் போன்களின் விலை இந்தியாவில் உயர்வு
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.