விதியை மீறிய விளம்பரங்களுக்கு கூகுள் வைத்த செக்!

விளம்பரம்
Written by Indo-Asian News Service மேம்படுத்தப்பட்டது: 14 மார்ச் 2019 20:21 IST

தங்களது பயனாளிகளுக்கு ஒரு நல்ல இணைய அனுபவம் கிடைக்கும் வகையில் கூகுள் நிறுவனம் தொடர்ந்து இணையத்தில் காணப்படும் தவறுதலான விளம்பரங்களை நீக்கி வருகிறது.

இந்நிலையில் கூகுள் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் 2018-ம் ஆண்டில் மட்டும் சுமார் 230 கோடி விளம்பரங்களை தடை செய்துள்ளதாகவும் மேலும் இதுபோன்ற தவறுகள் இனி வரமால் இருக்க 31 புதிய கொள்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.  

ஒரு நாளைக்கு சுமார் 60 லட்சம் தவறான விளம்பரங்கள் தடை செய்யப்படுவதாகவும் இப்படி தடை விதிக்கப்படுகின்ற விளம்பரங்கள் மீண்டும் தோன்றாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் கூகுள் நிறுவனம் சார்பாக வெளியான தகவலின் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூகுள் விளம்பர குழு தலைவர் ஸ்காட் ஸ்பென்சர் கூறுகையில், ''கூகுள் நிறுவனத்தை பொருத்தவரை இதுபோன்ற தவறான விளம்பரங்களை நீக்கி எல்லோரும் பயன்படுத்தும் இணைய சூழலை உருவாக்க செயல்படுகிறோம். எங்களது விளம்பரங்கள் வணிகர்கள் மற்றும் பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகவே இருக்கிறது.

எனினும் இதுபோன்ற தவறான விளம்பரங்கள் எங்களது நல்ல நோக்கத்தை வீண் செய்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் கூகுள் நிறுவனம் இதுவரை சுமார் 10 லட்ச தவறான விளம்பரதாரர்களை கண்டுபிடித்து அவர்களை நீக்கியுள்ளதாகவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

இது 2017-ல் நாங்கள் நீக்கியதை விட சுமார் இரண்டு மடங்காகும். மேலும் சுமார் 734,000 பப்ளிஷர்ஸ் மற்றும் ஆப் உற்பத்தியாளர்களை நீக்கியுள்ளதாகவும் சுமார் 1.5 பில்லியன் ஆஃப்களை நீக்கியுள்ளதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Google, Google Ads
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஒன் யுஐ 9 மூலம் சாம்சங் எஸ்25 போன்களில் கேலக்ஸி எஸ்26-இன் ஹாரிசாண்டல் லாக் கேமரா அம்சம் வர வாய்ப்பு
  2. கூகுள் பிக்சல் 11ஏ (Google Pixel 11a) குறியீட்டுப் பெயர் போன் செயலியில் கண்டறியப்பட்டதாகத் தகவல்
  3. மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ போனுக்கு ரூ. 2,450 தள்ளுபடி: 6,000mAh பேட்டரி கொண்ட போன் குறைந்த விலையில் கிடைக்கிறது
  4. ரியல்மி 16டி 5ஜி போனுக்கு ரூ. 3,500 தள்ளுபடி: 8,000mAh பேட்டரி கொண்ட போனை குறைந்த விலையில் வாங்குங்கள்
  5. மேப்பிள் விற்பனை: ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ், 16 ப்ரோ, 15 மாடல்கள் ரூ.40,999 முதல் சலுகைகளுடன் கிடைக்கின்றன
  6. உலகின் முதல் ட்ரை-போல்ட் ஸ்மார்ட்போன் மேம்படுத்தப்படுகிறது: ஹவாய் மேட் எக்ஸ்டி 2 டிசைன் கசிந்தது
  7. ஏர்டெல் ரூ.549 போஸ்ட்பெய்ட் திட்டத்தை நீக்கியது; அடுத்த மேம்படுத்தலாக ரூ.699 திட்டம் மாறுகிறது
  8. குரோம்புக் vs விண்டோஸ் லேப்டாப்: இந்தியாவில் நீங்கள் எதை வாங்க வேண்டும்?
  9. ஏர்டெல் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை ஹாட்ஸ்பாட் மூலம் பகிர முடியாது எனத் தகவல்: இதுவரை தெரிந்தவை
  10. இந்தியாவில் ஃபிஃபா உலகக் கோப்பை 2026 இறுதிப் போட்டியை நேரலையாக (Live Stream) பார்ப்பது எப்படி
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.