அமேசான் சார்பில் இந்தியாவில் மிகப்பெரிய 'ஆப்பிள் சேல்' துவக்கம்!

விளம்பரம்
Written by Harpreet Singh மேம்படுத்தப்பட்டது: 22 மார்ச் 2019 15:09 IST
ஹைலைட்ஸ்
  • அமேசான் ஆப்பிள் சேல் இன்று முதல் மார்ச் 28 ஆம் தேதி வரை நடைபெறுகின்றது.
  • ஐபோன் X, ஐபோன் XR மற்றும் ஐபேட் தயாரிப்புகள் தள்ளுபடி பெறுகின்றனர்.
  • கிரெடிட்,டெபிட் கார்டு கொண்டு வாங்குபவர்களுக்கு கூடுதல் தள்ளுபடி!

மேலும் இந்த சேலில் பீட்ஸ் சோலோ 3 வயர்லெஸ் ஆன்-இயர் ஹெட்போன்ஸ் தள்ளுபடி பெற்று ரூ.5,300க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

அமேசான் மற்றும் ஆப்பிள் நிறுவனம் இணைந்து நடத்தும் 'ஆப்பிள் ஃபீஸ்ட்' சேலில் ஐபோன், மேக்புக் மடிக்கணினி, ஆப்பிள் வாட்ச்கள், ஐபேட் மாடல்கள் போன்றவை தள்ளுபடி விற்பனையில் வாங்கக் கிடைக்கிறது. அமேசான் இந்தியாவின் சேல் இன்று (மார்ச் 22) முதல் மார்ச் 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

ஆப்பிள் தயாரிப்புகள் இடம்பெறும் இந்த 7 நாட்கள் சேலில் ஆமேசான் சார்பிலும் தள்ளுபடி வழங்கப்படுகின்றது. அதில் கட்டணமில்லா தவணைத் திட்டம் மற்றும் ஐசிஐசிஐ மற்றும் ஸ்டேட் வங்கியுடன் இணைந்து வழங்கும் திட்டங்களும் இடம் பெற்றுள்ளன.

இந்த சேலில்  ஐபோன்X, ஐபேட் 6வது தலைமுறை மற்றும் ஆப்பிள் வாட்ச் 3 தயாரிப்புகள் அதிக தள்ளுபடியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஐபோன் X போன் தனது அசல் விலையான ரூ.91,900யில் இருந்து தள்ளுபடி பெற்று ரூ.73,999க்கு விற்பனை செய்யப்படுகறிது.

அதேபோல் ஐபோன் 6S தயாரிப்பு தனது தற்போதைய விலையான 29,000யில் இருந்து குறைந்து 27,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.மேலும் ஐபோன் XS மேக்ஸ்,  ஐபோன் XS, ஐபோன் 8 பிளஸ், ஐபோன் 8 மற்றும் ஐபோன் 7 போன்களுக்கு கூடுதல் கட்டனமில்லா தவணைத் திட்ட வசதிகளை இந்த சேலில் பெற முடியும்.

ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பான ஐபோன் XR போன்கள் இந்த சேலில் ரூ.67,999 முதல் விற்பனை செய்யப்படுகின்றன.

Advertisement

ஆப்பிளின் மேக்புக் வகை மடிக்கணினிகள் இந்த சேலில் ரூ.15,000 வரை தள்ளுபடி பெற்றுள்ளது. மேலும் குறிப்பிட்ட கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு கொண்டு வாங்குபவர்களுக்கு 3 மாதங்களுக்கு கட்டணமில்லா தவணைத் திட்ட வசதிகளையும் கூடுதலாக பெற முடியும்.

நெடு நாட்களாக ஆப்பிளின் ஸ்மார்ட்வாட்ச் வாங்க திட்டமிட்டவர்களுக்கு இந்த சேலின் சரியான நேரமாக இருக்கும். ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 தனது ஓரிஜினல் விலையான ரூ.28,900யில் இருந்து குறைந்து ரூ.23,990க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இந்த முக்கிய தயாரிப்புகளுடன் அமேசான் சார்பில் ஐபேடுக்குகத் தேவையான ஸ்மார்ட் கேஸ் போன்ற இதர பொருட்களும் தள்ளுபிடயில் வழங்கப்படுகின்றன.

Advertisement

மேலும் இந்த சேலில் பீட்ஸ் சோலோ 3 வயர்லெஸ் ஆன்-இயர் ஹெட்போன்ஸ் தள்ளுபடி பெற்று ரூ.5,300க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Amazon, Apple Fest
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.