அமேசானில் அட்டகாச சலுகையில் போன்கள் விற்பனை..!

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 25 மார்ச் 2019 14:27 IST
ஹைலைட்ஸ்
  • பல முக்கிய தள்ளுபடிகளுடன் வெளியாகி ரியல்மி தயாரிப்பு!
  • வங்கிகள் சார்பிலும் தள்ளுபடிகள் இடம்பெற்றுள்ளனர்!
  • ஹூவாய் Y9 (2019) மற்றும் விவோY83 ப்ரோ போன்ற போன்களுக்கு தள்ளுபடி!

இந்த 'ஃபேப் போன்ஸ் ஃபெஸ்ட்' சேல் வரும் மார்ச் 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

அமேசான் நிறுவனம் சார்பில் பல வகை தள்ளுபடி சேல்கள் நடப்பது வழக்கம். அதுபோல் 'ஃபேப் போன்ஸ் ஃபெஸ்ட்' என்ற பெயரில் போன்களுக்கான தள்ளுபடியை கொண்ட ஒரு புதிய சேலை அறிமுகம் செய்துள்ளது அமேசான்.

மேலும் இந்த சேலில் போன்கள் மட்டுமின்றி ஹெட்போன்ஸ், பவர்பேங்க் மற்றும் மொபைல் கேஸ்கள் தள்ளுபடி சேலில் விற்பனை செய்யப்பட உள்ளன. இன்று துவங்கியுள்ள இந்த 'ஃபேப் போன்ஸ் ஃபெஸ்ட்' சேல் வரும் மார்ச் 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இத்துடன் வங்கிகளின் தள்ளுபடி மற்றும் கூடுதல் கட்டணமில்லா தவணைத் திட்டம் போன்ற பல வசதிகள் இந்த ஆஃபருடன் இடம் பெற்றுள்ளன. இந்த சேலில் ரியல்மி U1 ஸ்மார்ட்போன் ரூ.2,000 தள்ளுபடி பெற்று ரூ.9,999க்கு விற்பனை செய்யப்படுகறிது. 3ஜிபி ரேம் வகை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் கூடுதலாக எக்ஸ்சேஞ்ச் மற்றும் பல வசதிகளுடன் வெளியாகிறது.

இந்த ஆண்டு அறிமுகமான ஹூவாய் Y9 (2019) ஸ்மார்ட்போன் இந்த சேல் மூலம் ரூ.1000 தள்ளுபடி பெற்று தற்போது ரூ.14,990க்கு விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் வங்கிகளின் தள்ளுபடி மற்றும் கூடுதல் கட்டணமில்லா தவனைத் திட்டம் போன்ற பல வசதிகளையும் போன் வாங்குவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் ரூ.13,050 வரை இந்த போனுக்கு எக்ஸ்சேஞ்ச் விலை பெற முடிகிறது. அமேசான் வழங்கும் இந்த  'ஃபேப் போன்ஸ் ஃபெஸ்ட்' சேலில் விவோ Y83 ப்ரோ ஸ்மார்ட்போன் அதிகபடியான தள்ளுபடியைப் பெற்றுள்ளது. இந்த போனின் அசல் விலையான ரூ.15,990யில் இருந்து குறைந்து தற்போது ரூ.11,990க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலே குறிப்பிடப்பட்ட போன்கள் எல்லாம் பட்ஜெட் தயாரிப்புகளாக இருக்க, இந்த சேலில் ஓன்ப்ளஸ் 6T, சியோமி எம்ஐ A2 மற்றும் ஓப்போ எஃப் 11 ப்ரோ போன்ற பல தயாரிப்புகள் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களுடன் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Smooth app and gaming performance
  • Looks good
  • Bright and crisp display
  • Cameras do well in good light
  • Fast face unlock
  • Bad
  • No 4K recording and video stabilisation
  • Cameras struggle in low light
  • Body attracts smudges easily
 
KEY SPECS
Display 6.30-inch
Processor MediaTek Helio P70
Front Camera 25-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3500mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Amazon, Fab Phones Fest, Realme U1, Vivo Y83 Pro
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டைமன்சிட்டி 9500 சிப், 8,550mAh பேட்டரியுடன் ரெட்மி K90 மேக்ஸ் அறிமுகம்: விலை மற்றும் முழு விவரங்கள் இதோ
  2. 200MP கேமரா, 7025mAh பேட்டரியுடன் ஒப்போ ஃபைண்ட் X9s ப்ரோ அறிமுகம்: விலை மற்றும் முழு விவரங்கள்
  3. வாட்ஸ்அப் பிளஸ் சந்தா: இது என்ன, விலை, அம்சங்கள் மற்றும் நன்மைகள்
  4. விவோ X300 FE இந்திய அறிமுகத் தொகுப்பு: எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் விவரக்குறிப்புகள்
  5. ஓப்போ என்கோ கிளிப் 2 மற்றும் வாட்ச் X3 மினி அறிமுகம்: 40 மணிநேர பேட்டரி மற்றும் ஓப்பன்-இயர் வடிவமைப்பு
  6. ஒப்போ F33 ப்ரோ 5G விமர்சனம்: ரூ. 40,000-க்கு கீழ் உள்ள மிகச்சிறந்த வடிவமைப்பைக் கொண்ட ஸ்மார்ட்போன் இதுதானா?
  7. ரெட்மி பட்ஸ் 8 அறிமுகம்: 50dB ANC மற்றும் 44 மணிநேர பேட்டரி பேக்கப் - விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  8. இந்தியாவில் ரெட்மி A7 Pro 4G மற்றும் ரெட்மி A7 4G அறிமுகம்: Unisoc T7250 சிப்செட், விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  9. இந்தியாவில் விவோ போன்களின் விலை ரூ.4000 வரை உயர்வு: Vivo T5x, V70, Y31 5G ஆகியவற்றின் புதிய விலை விவரங்கள் இதோ
  10. மோட்டோரோலா ரேஸர் 2026, ரேஸர்+ 2026 அறிமுக தேதி, விலை மற்றும் சிறப்பம்சங்கள் கசிவு
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.