தள்ளுபடி பெரும் சியோமி ஸ்மார்ட் டிவி! புதிய விலை என்ன தெரியுமா?

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 13 மார்ச் 2019 20:22 IST
ஹைலைட்ஸ்
  • மேலும் இந்த தொலைக்காட்சி ஹெச்டிஆர் ஃபிரேம் வசதியை கொண்டுள்ளது.
  • இந்த தொலைக்காட்சி 4.9mm அடர்தியை கொண்டுள்ளது.
  • இந்த ஆண்டுராய்டு தொலைக்காட்சி 55 இஞ்ச் திரையை கொண்டுள்ளது.

எம்ஐ எல்இடி டிவி 4 ப்ரோ 55 இஞ்ச் தொலைக்காட்சி கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

சீன நிறுவனமான சியோமி தனது தயாரிப்பான எம்ஐ எல்இடி டிவி 4 ப்ரோ 55 இஞ்ச் தொலைக்காட்சிக்கு இன்று விலை குறைப்பை அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் ரூ.49,999க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது வழங்கப்பட்ட விலை குறைப்புக்குப் பின்னர் எம்ஐ எல்இடி டிவி 4 ப்ரோ 55 இஞ்ச் தொலைக்காட்சி ரூ.47,999க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

சாம்சங் தனது புதிய 4கே யுஹெச்டி ஸ்மார்ட் தொலைக்காட்சியை இந்தியாவில் ரூ.41,990க்கு அறிமுகம் செய்த பின்னர் இந்த விலை குறைப்பை சியோமி நிறுவனம் அறிவித்திருக்கலாம் என பரவலாக கருத்து கூறப்படுகிறது.

Advertisement

இந்த விலை குறைப்பு பற்றிய தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட சியோமி நிறுவனத்தின் இந்திய தலைமை அதிகாரி மனு குமார் ஜெயின், எம்ஐ எல்இடி டிவி 4 ப்ரோ 55 இஞ்ச் தொலைக்காட்சியின் சிறப்பம்சங்களைப் பற்றி விளக்கினார்.

அவர் 'எம்ஐ எல்இடி டிவி 4 ப்ரோ 55 இஞ்ச் தொலைக்காட்சிதான் உலகத்தின் மிக மெல்லிய ஆண்ட்ராய்டு தொலைக்காட்சி' என தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார். கூகுள் உதவியாளர் அமைப்பைக் கொண்ட இந்த ஸ்மார்ட் தொலைக்காட்சி கடந்த ஆண்டு அறிமுகமாகி விற்பனைக்கு வெளியானது.

முதல் முறையாக விலை குறைக்கப்பட்டுள்ள இந்த எம்ஐ எல்இடி டிவி 4 ப்ரோ 55 இஞ்ச் தொலைக்காட்சியை ஃபிளாப்கார்ட் மற்றும் எம்ஐ.காம் தளங்களில் வாங்கலாம்

Advertisement

ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல 55 இஞ்ச் திரைகொண்ட இந்த தொலைக்காட்சி வெறும் 4.9mm அடர்த்தியை கொண்டுள்ளது. மேலும் 20W ஸ்பீக்கர் கொண்ட இந்த ஸ்மார்ட் தொலைக்காட்சி பல முன்னணி  தொழில்நுட்பங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

2ஜிபி ரேம் 8ஜிபி சேமிப்பு வசதிகொண்ட இந்த ஸ்மார்ட் டிவி, ப்ளூடூத் 4.2 கனெக்டிவிட்டி போன்ற பல அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் இந்த சியோமி எம்ஐ எல்இடி டிவி 4 ப்ரோ 55 இஞ்ச் தொலைகாட்சி, கூகுள் உதவியாளர் மற்றும் குரோம்காஸ்ட் தொலிநுட்பத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

 
KEY SPECS
Display 55.00-inch
Screen Type LED
Dimensions 1232.1 mm x 730.6 mm x 48 mm
OS Android
Smart TV Yes
Resolution Standard 4K
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: , Xiaomi

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.