ஜேவிசி நிறுவனத்தின் '55 இஞ்ச் ஸ்மார்ட் தொலைக்காட்சி' இந்தியாவில் அறிமுகம்!

விளம்பரம்
Ali Pardiwala, மேம்படுத்தப்பட்டது: 8 ஏப்ரல் 2019 18:20 IST
ஹைலைட்ஸ்
  • ரூ.38,999க்கு விற்பனை செய்யப்படும் JVC 55N7105C தொலைக்காட்சி!
  • 4கே எல்இடி திரை மற்றும் ஹெச்டிஆர் வசதியை இந்த தொலைக்காட்சி பெற்றுள்ளது.
  • மேலும் இந்த தொலைக்காட்சியில் குவான்டம் டெக்னாலஜி இடம்பெற்றுள்ளது.

ரூ.38,999க்கு இந்த ஸ்மார்ட் தொலைக்காட்சி விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவில் பட்ஜெட் தொலைக்காட்சிகளின் தயாரிப்பு மற்றும் விற்பனை தொட்ர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஜப்பானை சேர்ந்த நிறுவனமான ஜேவிசி (JVC) இந்தியாவில் உள்ள ஓஇஎம் வீயிரா குழுமத்துடன் (OEM Viera) இணைந்து பெரிய திரைகொண்ட ஒரு பிரமாண்ட தொலைக்காட்சியை அறிமுகம் செய்துள்ளது.  

JVC 55N7105C எனப்படும் இந்த 4கே ஸ்மார்ட் எல்இடி தொலைக்காட்சி தயாரிப்பு ரூ.38,999க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்கப்படுகிறது. ஃபிளாப்கார்ட் தளத்தில் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட் தொலைக்காட்சி ரூ.39,999க்கு விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பை பெற்றுள்ளது.

3840x2160 பிக்சல் திரை, 60Hz ஸ்டான்டர்டு ரிஃப்ரஷ் ரேட், முகப்பில் 50W சவுண்ட் அவுட்புட் பெருவதற்கான ஸ்பீக்கர்ஸ் போன்ற பல சிறப்பு அமைப்புகளை இந்த தொலைகாட்சி பெற்றுள்ளது. மேலும் இந்த தொலைக்காட்சியில் 2ஜிபி ரேம், 16ஜிபி சேமிப்பு அமைப்பு மற்றும் ஒரு குவாட்-கோர் பிராசஸ்சர் இடம்பெற்றுள்ளது. சியுஐ மற்றும் சென்ஸ்சிவால் எனப்படும் இரண்டு இடைமுகங்களை பெற்றுள்ள இந்த தொலைக்காட்சி, ஹாட்ஸ்டார், யூடியுப் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் போன்ற செயலிகளுடன் வெளியாகிறது.

மூன்று HDMI போர்ட்கள் மற்றும் இரண்டு யுஎஸ்பி போர்டுகளை பெற்றுள்ள இந்த தொலைகாட்சி ஹெச்டிஆர் அமைப்பையும் பெற்றுள்ளது. மேலும் இந்த தொலைக்காட்சியில் வயர்ட் மற்றும் வயர்லெஸ் இணைய சேவைகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த தொலைக்காட்சிக்கு ஒரு சாதாரண ரிமோர்ட் கன்ட்ரோல் மற்றும் ஒரு QWERTY வகை ஸ்மார்ட் ரிமொர்ட்டும் இடம்பெற்றுள்ளது. இதற்கு முன்னர் இந்தியாவில் ரூ.16,999 முதல் தொலைக்காட்சிகளை அறிமுகம் செய்துவந்த ஜேவிசி நிறுவனம் தனது அதிகபட்ச தயாரிப்பு விலையில் இந்த JVC 55N7105C மாடல் தொலைக்காட்சியை அறிமுகம் செய்துள்ளது.

KEY SPECS
Display 55.00-inch
Screen Type LED
Smart TV Yes
Resolution Standard 4K
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: JVC, JVC Smart TV, TV
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. AI லேப்டாப் தேடுறீங்களா? Acer Swift Neo - சிறப்பம்சங்கள், விலை, எங்க கிடைக்கும்னு முழு விவரம்!
  2. iQOO Neo 10: Snapdragon 8s Gen 4 & 7000mAh பேட்டரியுடன் இந்தியாவில் வெளியானது
  3. மடக்கும் போன் பிரியர்களுக்கு குட் நியூஸ்! Motorola Razr 60 அடுத்த வாரமே இந்தியாவில்
  4. Vi-ன் அதிரடி: 'Nonstop Hero' திட்டம் டேட்டாவுக்கு இனி லிமிட் இல்லை
  5. Sony Bravia 2 II Series டிவி Google TV OS வசதியுடன் இந்தியாவில் அறிமுகமானது
  6. Alcatel V3 Pro 5G, V3 Classic 5G இந்திய செல்போன் சந்தையில் ஒரு புதிய அலை
  7. Google I/O 2025 விழா: Gemini 2.5 AI மற்றும் Deep Think Mode பல அம்சங்கள் அறிமுகம்
  8. Apple WWDC 2025 விழா ஜூன் 9ல் தொடங்கி அமர்க்களமாக ஆரம்பமாகிறது
  9. Vivo S30, S30 Pro Mini செல்போன்களின் வெளியீடு தேதி உறுதி செய்யப்பட்டது
  10. Realme GT 7T செல்போன் MediaTek Dimensity 8400 Max SoC சிப்செட் உடன் வருகிறது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.