இந்தியாவில் விற்பனைக்கு வெளியான அமேசான் எக்கோ ஷோ 'ஸ்மார்ட் டிஸ்பிளே'!

விளம்பரம்
Written by Ali Pardiwala மேம்படுத்தப்பட்டது: 2 ஏப்ரல் 2019 12:28 IST
ஹைலைட்ஸ்
  • அமேசான் எக்கோ ஷோ ரூ.22,999க்கு விற்பனை செய்யப்படுகறிது.
  • இதில் 10 இஞ்ச் ஹெச்டி திரையுள்ளது.
  • அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக இந்தியாவில் இது வெளியாகிறது.

அமேசான் மெதுவாக தனது தயாரிப்புகளை ஒன்றன் பின் ஒன்றாக வெளியிட்டு இந்தியாவின் முன்னணி  நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது. இதுவரை வெளியான எக்கோ ஸ்மார்ட் ஸ்பீக்கர் மற்றும் ஃப்யர் டிவி ஸ்டிக் விற்பனையில் அசத்திய நிலையில் தற்போது தனது தயாரிப்பான 'அமேசான் எக்கோ ஷோ' என்னும் ஸ்மார்ட் திரைகொண்ட10 இஞ்ச் டால்பி-ஸ்பீக்கர்களையும் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஸ்பீக்கர்கள் ரூ.22,999க்கு இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த இரண்டாம் தலைமுறை - அமேசான் எக்கோ ஷோ கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபரில் அறிமுகமானது. அங்கு வெளியாகிய சில மாதங்களிலேயே இந்தியாவிலும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ஸ்பீக்கர் அமேசான் எக்கோ ஸ்பாட் தயாரிப்பைப் போல வட்டமான 2.5 இஞ்ச் திரையைக் கொண்டுள்ளது.

Advertisement

அமேசான் எக்கோ ஷோ-வில் 10-இஞ்ச் ஹெச்டி திரை இருப்பதனால், ஆடியோ மற்றும் வீடியோ கன்டென்ட்களை நம்மால் ரசிக்க முடிகிறது. மேலும் இதில் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ட், வீடியோ போன் அழைப்புகள் மற்றும் வீட்டில் பயன்படுத்தும் பாதுகாப்பு கோமராக்களையும் இணைத்துப் பயன்படுத்திக் கொள்ள முடியும் .

இந்த தயாரிப்பில் டால்பி-ஸ்பீக்கர்கள், புளூடூத் கனெக்டிவிட்டி, வைஃ-ஃபை மற்றும் பல முக்கிய தொழில்நுட்பங்களை உள்ளன. இந்த கருவியில் பொருத்தப்பட்டுள்ள 8 மைக்ரோ போன்கள் துல்லியமாக நாம் கொடுக்கும் கட்டளைகளை ஏற்றுக் கொள்ளும். மேலும் இதில் இடம் பெற்றுள்ள 5 மெகா பிக்சல் கேமரா வீடியோ காலிங் அனுபவத்தை மேம்படுத்துகிறது.

அமேசான் எக்கோ ஷோ தயாரிப்பைப் பயன்படுத்தி தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் படங்களை பார்க்க முடிகிறது. மேலும் ஃபேஸ்புக், அமேசான் பிரைம் மியூசிக், ஜியோ சாவன் போன்ற பல தயாரிப்புகளை இந்த அமேசான் எக்கோ ஷோவில் நம்மால் பயன்படுத்த முடியும். வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்றவாரு இந்த அமேசான் எக்கோ ஷோ தயாரிப்பை நம்மால் மாற்றிக்கொள்ள முடியும். கேப் புக் செய்வது முதல் சமையல் குறிப்புகள் வரை எல்லாவற்றயையும் இதில் நம்மால் செய்ய முடியும்.

Advertisement

அமேசான் எக்கோ ஷோ இந்தியாவில் அறிமுகமாகிய நிலையில், இதை வாங்குபவர்களுக்கு பிலிப்ஸ் ஹூ ஸ்மார்ட் லைட் பல்பு இலவசமாக கிடைக்கிறது. மேலும் இதை கிரெடிட் மற்றும் டெபிட் கார்டை கொண்டு வாங்குபவர்களுக்கு கூடுதல் சலுகைகள் கிடைக்கும் என்பது கூடுதல் தகவல்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Amazon, Amazon Echo Show, Smart Display
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.