'இந்தியன் ஏர் ஃபோர்ஸ்' மொபைல் விளையாட்டு, அபிநந்தன் பாத்திரத்துடன் டெல்லியில் அறிமுகம்!

விளம்பரம்
Written by ANI மேம்படுத்தப்பட்டது: 31 ஜூலை 2019 19:18 IST
ஹைலைட்ஸ்
  • மார்ஷல் பி.எஸ்.தனோவா இந்த விளையாட்டை அறிமுகம் செய்தார்
  • அபிநந்தனை போன்ற ஒரு பாத்திரம் இடம்பெற்றுள்ளது
  • ஜூலை 20 அன்று, ஐ.ஏ.எஃப் விளையாட்டின் டீஸர் வெளியிடப்பட்டது

Photo Credit: YouTube/ Indian Air Force

இந்திய விமானப்படை குறித்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், படைகளில் சேர அவர்களை ஊக்குவிப்பதற்கும், விமானப்படைத் தலைவர் மார்ஷல் பி.எஸ்.தனோவா (Marshal BS Dhanoa), கடந்த புதன்கிழமை போர் அடிப்படையிலான 'இந்தியன் ஏர் ஃபோர்ஸ்' ('Indian Air Force: A cut above') மொபைல் விளையாட்டை புதுடில்லியில் தொடங்கிவைத்தார்.

முன்னதாக ஜூலை 20 அன்று, ஐ.ஏ.எஃப் விளையாட்டின் டீஸர் வெளியிடப்பட்டது.

இந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்ட டீஸர், இந்த விளையாட்டு ஒற்றை வீரர் விளையாடக்கூடிய விளையாட்டு மற்றும் பல போர் விமானங்களுடன் வான்வழிப் போர், வெவ்வேறு நிலக் கட்டமைப்புகள் ஆகியவற்றை காட்டியது.

"நான் ஒரு விமான வீரன், பெருமைமிக்க, நம்பகமான மற்றும் அச்சமற்றவன். ஒவ்வொரு செயலிலும், எனது தாய்நாட்டின் மரியாதையையும் பாதுகாப்பையும் முதன்மையில் வைக்கிறேன்," என்ற அந்த டீஸர் இந்த விளையாட்டிற்கான கதைக்களத்தை கூறியுள்ளது.

இந்த விளையாட்டில் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தாமனை போன்று ஒரு துப்பாக்கி ஏந்திய மீசையுடன் கூடிய ஒரு பாத்திரம் இடம்பெற்றுள்ளது. அவர் பாலாகோட் வான்வழித் தாக்குதலின் போது நடைபெற்ற சண்டையில் அவரது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சிறைபிடிக்கப்பட்டு பின்னர் பாகிஸ்தானால் விடுவிக்கப்பட்டார்.

பிப்ரவரி 27 அன்று பாகிஸ்தானுடனான வான்வழி மோதலின் போது தனது விண்டேஜ் மிக் -21 பைசன் விமானத்திலிருந்து எஃப் -16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய உலகின் ஒரே விமானி என்ற தனித்துவமான பெருமையை இந்த விங் கமாண்டர் பெற்றுள்ளார்.

பாக்கிஸ்தானிய ஜெட் விமானங்களுடனான போரின் போது அவரது மிக் 21 பைசன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு கீழே சென்றபின் பிப்ரவரி 27 அன்று அவரை பாகிஸ்தான் அதிகாரிகள் சிறைபிடித்தனர். அவரது பாராசூட் சறுக்கி பாக்கிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரின் உள்ளே விழுந்தபோது பாகிஸ்தான் ராணுவத்தால் அவர் கைது செய்யப்பட்டார்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: IAF, Indian Air Force A Cut Above
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. மெட்டா வழங்கும் பேஸ்புக், இன்ஸ்டா, வாட்ஸ்அப் பிளஸ் திட்டங்கள்: விலை, அம்சங்கள்!
  2. மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ+ கீக்பெஞ்ச் தளத்தில் வெளியானது: எதிர்பார்ப்புகள்!
  3. சியோமி 17T, சியோமி 17T ப்ரோ 1.5K AMOLED திரைகள், லைக்கா கேமராக்களுடன் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
  4. ஆசஸ் ROG செஃபிரல் டூயோ லேப்டாப்பின் இந்திய அறிமுகம் மற்றும் விலை விவரங்கள் கசிந்தன!
  5. ஏர்டெல் பிரையாரிட்டி 5G நெட்வொர்க் ஸ்லைசிங் மூலம் போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு அதிவேக இணைப்பை வழங்குகிறது!
  6. இந்தியாவின் சிறந்த காம்பாக்ட் ஸ்மார்ட்போன்கள்: ஐபோன் 17, பிக்சல் 9a மற்றும் பல
  7. சியோமி 17T டைமென்சிட்டி 8500 சிப்புடன் இந்தியாவில் அறிமுகம்; அம்சங்கள் உறுதி!
  8. ஜியோ OTT பாஸ் 12+ OTTகள், லைவ் டிவி மற்றும் 30GB டேட்டாவுடன் இந்தியாவில் அறிமுகம்: விலை, பலன்கள்!
  9. அமேசான் எக்கோ டாட் மேக்ஸ் மற்றும் எக்கோ ஸ்டுடியோ இந்தியாவில் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்!
  10. ரெட்மி டர்போ 5 இந்திய அறிமுக தேதி கசிந்தது; ரெட்மி 17 5G போனுடன் வரக்கூடும்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.