ஹேரி பாட்டர் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி, இந்தியாவில் 'ஹேரி பாட்டர்: விசார்ட்ஸ் யூனைட்' கேம்!

விளம்பரம்
Edited by Murali S, மேம்படுத்தப்பட்டது: 24 ஜூன் 2019 12:20 IST
ஹைலைட்ஸ்
  • கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்த கேம் அறிமுகமானது
  • ஜூன் 22 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது
  • 144 நாடுகளில் இந்த விளையாட்டு அறிமுகமாகியுள்ளது

'ஹேரி பாட்டர்: விசார்ட்ஸ் யூனைட்' (Harry Potter: Wizards Unite) கேமை இந்தியா உட்பட 143 நாடுகளில் அறிமுகமாகியுள்ளது. தற்போது விளையாட கிடைக்கும் 143 நாடுகள் பட்டியலில் இந்தியா உட்பட பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஹாங் காங், இயர்லாந்து, இத்தாலி, மெக்சிகோ, பாக்கிஸ்தான், சிங்கப்பூர், தென் ஆப்ரிக்கா, ஸ்பெயின் ஆகிய நாடுகள் அடங்கும். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகள் உட்பட உலகம் முழுவதும் இந்த 'ஹேரி பாட்டர்: விசார்ட்ஸ் யூனைட்' கடந்த வெள்ளிக்கிழமையன்று அறிமுகப்படுத்தப்பட்டது. முன்னதாக நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் முதலில் பீடா வெர்ஷனாக அறிமுகப்படுத்தப்பட்டு சோதித்த பிறகே இந்த கேம் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகியுள்ளது.

முன்னதாக 2016ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 'போகேமான் கோ' (Pokeman Go) என்ற வெற்றிகரமான விளையாட்டை அறிமுகப்படுத்திய நிறுவனம்தான் 'ஹேரி பாட்டர்: விசார்ட்ஸ் யூனைட்' விளையாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கேமை கூகுள் ப்லே ஸ்டோர், சாம்சங் கேலக்சி ஸ்டோர் மற்றும் ஆப்பின் ஆப் ஸ்டோர் என அனைத்திலும் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

144 நாடுகளில் கடந்த வாரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விளையாட்டு முன்னதாக சனிக்கிழமையான ஜூன் 22 அன்று இந்திய நேரப்படி இரவு 9:30 மணியளவில் இந்தியா உட்பட 25 நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின் 9 மணி நேரத்திற்குபின் மேலும் 119 நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுகுறித்து 'ஹேரி பாட்டர்: விசார்ட்ஸ் யூனைட்'-ன் அதிகாரப்பூர்வமான் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒரு பதிவில் 'இன்னும் அதிக நாடுகளில் இந்த விளையாட்டு அறிமுகமாகவுள்ளது' என கூறப்பட்டுள்ளது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Harry Potter, Harry Potter Wizards Unite, Niantic, WB Games
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. S25 Ultra: கேமரா, பேட்டரி, AI அம்சங்களுடன் மலிவான விலையில்! மிஸ் பண்ணிடாதீங்க!
  2. Dimensity 7060 சிப்செட்டுடன் Lava Storm Play 5G: கேமர்கள், பட்ஜெட் 5G-க்கு ரெடியா?
  3. கலக்கும் Realme C71: 50MP கேமரா, நீண்ட நேரம் தாங்கும் பேட்டரி - வேற லெவல் போன்
  4. Nothing-ன் புது அவதாரம்! Phone 3, Headphone 1: மாஸ் லான்ச்சுக்கு ரெடியாகுங்க
  5. பார்த்துட்டீங்களா! Vivo T4 Ultra-வோட பெரிய ஜூம் லென்ஸ் கேமரா அட்ராசிட்டி! இதோட அம்சங்கள் வேற லெவல்!
  6. iQOO Neo 10: விலை குறைவு, ஆனால் அசத்தலான அம்சங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!
  7. Realme GT 7, GT 7T: பவர்ஃபுல் சிப், 120W சார்ஜிங்குடன் இந்திய மார்க்கெட்ல - மிஸ் பண்ணாதீங்க!
  8. ஏர்டெல் புது பிளான்ஸ்: ஓடிடி பிரியர்களுக்கு ஜாக்பாட்! விலை, டேட்டா, முழு விவரம் இதோ!
  9. ஸ்டார்லிங்க் இந்தியாவில் அறிமுகம்: அன்லிமிடெட் டேட்டா, விலை மற்றும் ஸ்பெஷல் ஆஃபர்ஸ்
  10. Vivo T4 Ultra: Dimensity 9300 சிப், பெரிஸ்கோப் கேமரா - ரிலீஸ் தேதி கசிந்தது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.