இனி ஸ்கைப்பில் ஜாலியாக வீடியோ கால் பேசலாம்!!

விளம்பரம்
Written by Ali Pardiwala மேம்படுத்தப்பட்டது: 8 ஏப்ரல் 2019 19:19 IST
ஹைலைட்ஸ்
  • தற்போது ஸ்கைப்பில் 50 பேர் வரை க்ரூப் கால் பேசலாம்.
  • இதற்கு முன்னர் 25 பேர் பேசும் வசதி மட்டுமே இருந்தது.
  • இனி க்ரூப் காலின் நோட்டிஃபிகேஷனை மாற்றிக் கொள்ளும் வசதியுண்டு.

உலக மக்கள் அனைவராலும் பொதுவாக பயன்படுத்தப்படும் வீடியோ கால் ஆப் தான் ஸ்கைப்.  மைக்ரோசாஃப்ட் வழங்கும் இந்த ஆப்பில் க்ரூப் கால் பேசும் வசதியுள்ளது.  குறிப்பாக இந்த வசதி கார்ப்ரேட் மற்றும் தொழில் செய்வோர்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது.  இந்த வசதி ஸ்மார்ட்ஃபோன், கம்ப்யூட்டர் ஆகியவற்றில் இருக்கிறது.  மேலும் மைக்ரோசாஃப்ட் எக்ஸ்பாக்ஸ் ஒன் சீரிஸிலும் இந்த வசதி செய்யப்பட்டிருக்கிறது.  தற்போது ஸ்கைப், அதன் முக்கியமான வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.  இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ஒரே க்ரூப் காலில் மொத்தம் 50 பேர் பேசும் வசதியை படைத்திருக்கிறது.  இதற்கு முன்னர் 25 பேர் பேசும் வசதியை கொண்டிருந்த ஸ்கைப் தற்போது ஒரு அடி முன்னே நகர்ந்துவிட்டதென்றே சொல்லலாம்.

கடந்த மாதம், ஸ்கைப்பில் இந்த வசதி குறித்து சோதனை நடத்தப்பட்டு அதன் வெற்றியாக தற்போது எல்லோரும் பயன்படுத்தும் விதத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  வீடியோ மற்றும் ஆடியோ காலிலும் கூட மொத்தம் 50 பேர் பேசும் வசதியை நடைமுறைக்கு கொண்டு வந்த ஸ்கைப் எல்லோருடைய வேலையையும் எளிமையாக்கி விட்டதென்றே சொல்லலாம். 

முன்பெல்லாம் க்ரூப் காலின் ரிங்டோன் டீஃபால்டாக இருக்கும்.  இப்போது அதன் நோட்டிஃபிகேஷன் அமைப்பை மாற்றி அமைக்கும் வசதி இருப்பதால், தற்போது க்ரூப் காலின் நோட்டிஃபிகேஷன் சிம்பிளாக வரும்படியாகவும், பயன்படுத்துவோருக்கு தொந்தரவு ஏற்படுத்தாத வகையிலும் அமைப்புகள் வந்துவிட்டது.   

ஃபேஸ்டைம் என்னும் செயலியில் ஒரு க்ரூப் காலில் மொத்தம் 32 பேர் பேசும் வசதி இருந்தது.  அதேபோல எண்டர்ப்ரைஸ்-ஃபோகஸ்டு சாஃப்ட்வேராகிய ஸூம் போன்றவற்றில் ஒரு க்ரூப் காலில் 100 பேர் வரை பேசும் வசதியுண்டு.  தற்போது ஸ்கைப் ஒரு க்ரூப் காலில் 50 பேர் பேசும் வசதியை ஏற்படுத்தியுள்ளது.  தொழில் ரீதியாக மட்டுமல்லாமல், இளைய சமூகத்தினர் அதிகம் பயன்படுத்தும் இந்த ஸ்கைப்பில் இனி உங்கள் தனிப்பட்ட தேவைகளுக்காகவும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஆடியோ அல்லது வீடியோ க்ரூப் கால் பேசி மகிழ்ந்திடலாம். 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Skype, Microsoft, group calling
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.