கூகுள் சான்றிதழ் பெற்ற மைக்ரோமேக்ஸின் முதல் ஆண்ட்ராய்டு டிவி!

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 3 நவம்பர் 2018 18:48 IST

 

மைக்ரோமேக்ஸ் இன்ஃபர்மேடிக்ஸ் நிறுவனம் வெள்ளியன்று கூகுள் சான்றிதழ் பெற்ற அதன் முதல் ஆண்ட்ராய்டு டிவியை இரு வேரியண்ட்களில் அறிமுகம் செய்துள்ளது. ஆனால், அதற்கு பெயரிடவில்லை. முறையே, 49 இன்ச் மற்றும் 59இன்ச் 4கே ஹெச்.டி.ஆர் 10 டிவியின் விலை ரூ.51,990 மற்றும் ரூ.61,990 ஆகும்.

தங்கள் நிறுவனத்தின் முதல் ஆண்ட்ராய்டு டிவி குறித்து, அந்நிறுவனத்தின் இயக்குனர் ரோகன் அகர்வால் பேசுகையில், கூகுள் சான்றிதழ் பெற்ற முதல் ஆண்ட்ராய்டு டிவியை அறிமுகம் செய்திருக்கிறோம். அதன் மூலம் எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு என்றும் நினைவில் நிற்கக்கூடிய பட தரத்தையும், அனுபவத்தையும் கூகுள் பிளேயுடன் இணைந்து எண்ணற்ற ஆப்ஷன்களை கொடுக்கிறோம். புதிய அறிமுகமான இந்த டிவி மூலம் பெரிய, தெளிவான, மிகத் துல்லியமான திரையில் படம் பார்த்ததற்கான அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்க விரும்புகிறோம். டிவி தயாரிப்பில் இந்தியாவில் எங்களின் நிலையை ஆணித்தரமாக நிலை நாட்ட முயற்சித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

கூகுள் சான்றிதழ் பெற்ற மைக்ரோமேக்ஸ் நிறுவனம் கூறுகையில், ஹெச்.டி.ஆர் தொழில்நுட்பம் அசரவைக்கும் பட தரத்தை வழங்கும் என்று உறுதியளித்தது. இந்த டிவி அதிகாரப்பூர்வமான கூகுள் பிளே அப்,கேம்ஸ்,மூவிஸ் மற்றும் மியூசிக்கை சப்போர்ட் செய்கிறது. இந்த டிவி ஆண்ட்ராய்டு ஓரியோவில் இயங்குகிறது. டால்பை மற்றும் DTS ஒலியமைப்பு. கோர்டெக்ஸ் ஏ-53 ப்ராசஸர், 2.5ஜிபி டி.டி.ஆர்3 மற்றும் 16ஜிபி இ.எம்.எம்.சி சேமிப்பு திறன் கொண்டது.

உள்கட்டமைக்கப்பட்ட குரோம்காஸ்ட் மற்றும் MHL இணைப்பு, வாய்ஸ் சர்ச்சுடன் கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் ஒயர்லெஸ் ஸ்மார்ட்போன் கண்ட்ரோலைக் கொண்டுள்ளது. மைக்ரோமேக்ஸ் தங்களுடைய தனித்துவமான ஒலியமைப்பை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த டிவியில் 2*12w ஸ்பீக்கர்ஸ் உள்ளன. மின் திறன் எக்கோ எனர்ஜி சான்றிதழை பெற்றிருப்பதாக மைக்ரோமேக்ஸ் கூறியுள்ளது.

மைக்ரோமேக்ஸின் ஆண்ட்ராய்டு டிவி இந்த மாதம் முதல் கடைகளில் கிடைக்கும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வார தொடக்கத்தில் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவில் இயங்கும் இரு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. குறைந்த விலை போன்களான, பாரத் 5 இன்ஃபினிட்டி எடிஷன் மற்றும் பாரத் 4 தீபாவளி எடிஷனின் விலை ரூ. 5,899 மற்றும் ரூ. 4,249 ஆகும். பாரத் 5 ஏற்கனவே விற்பனைக்கு வந்துவிட்டது. பாரத் 4 இன்று முதல் விற்பனை செய்யப்படும்.

 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Micromax, Android TV

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. இந்த வாரத்தின் சிறந்த OTT வெளியீடுகள் (மார்ச் 9 - மார்ச் 15): என்னென்ன படங்கள்ன்னு பாருங்கள்
  2. Samsung Galaxy M17e 5G இந்திய விலை லீக் – மார்ச் 17 அறிமுகத்திற்கு முன் தகவல்
  3. Motorola அறிமுகப்படுத்திய Motorola Edge 70 Fusion+ – Triple Camera, 5,200mAh பேட்டரி
  4. iPhone Fold-ல் iPad போன்ற UI, Split-Screen Apps ஆதரவு வரலாம்
  5. James Webb Space Telescope-ன் புதிய கண்டுபிடிப்பு: Jupiter ஆரோராவில் Io, Ganymede தடயங்கள்
  6. Meta Platforms மோசடி தடுப்பு கருவிகளை விரிவுபடுத்துகிறது – WhatsApp-ல் புதிய Device Link எச்சரிக்கை
  7. Xiaomi 17 Ultra இந்தியாவில் அறிமுகம் – 200 மெகாபிக்சல் Leica கேமரா, தொடர்ச்சியான Optical Zoom: விலை மற்றும் அம்சங்கள்
  8. Vivo Y51 Pro 5G இந்தியாவில் அறிமுகம் – 7,200mAh பேட்டரி, 50 மெகாபிக்சல் கேமரா: விலை மற்றும் விவரங்கள்
  9. iPhone 17 Pro கேமரா சோதனையில் Samsung Galaxy S26 Ultra-வை முந்தியது: DxOMark மதிப்பீடு
  10. OnePlus 15T வெள்ளை நிற மாடல் மற்றும் டிஸ்ப்ளே அம்சங்கள் வெளியீடு; சீனாவில் Pre-Order தொடக்கம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.