சுஷந்த் சிங் நடித்த கடைசிப்படமான 'தில் பெச்சாரா' ஹாட்ஸ்டாரில் அடுத்தமாதம் வெளியீடு!

விளம்பரம்
Written by Akhil Arora மேம்படுத்தப்பட்டது: 26 ஜூன் 2020 11:18 IST
ஹைலைட்ஸ்
  • சுஷந்த் சிங் தற்கொலை செய்துகொண்டது நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்தியது
  • சுஷந்த் சிங் கடைசியாக தில் பெச்சாரா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்
  • தில் பெச்சாரா படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

தில் பெச்சாரா படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

Photo Credit: Fox Star Studios

தற்கொலை  செய்து கொண்ட பிரபல பாலிவுட் நடிகர் சுஷந்த் சிங் நடித்த கடைசிப்படமான 'தில் பெச்சாரா' அடுத்தமாதம் 24ம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த திரைப்படத்தை சந்தாதாரர்கள் மட்டும் இல்லாமல், ஆப் வைத்திருக்கும் அனைவரும் பார்த்து மகிழலாம் என்று டிஸ்னி ஹாட்ஸ்டார் தெரிவித்துள்ளது.  சுஷந்த் சிங்கின் நினைவாக இந்த  சலுகை அறிவிக்கப்படுவதாக டிஸ்னி ஹாட்ஸ்டார் கூறியுள்ளது. 

கொரோனா பாதிப்பு காரணமாக திரையரங்குகள் முழுவதும் மூடப்பட்டுள்ளன.  இதனால் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரைப்படங்கள் ஆன்லைன் ப்ளாட்ஃபார்ம்களான அமேசான்  பிரைம், டிஸ்னி ஹாட்ஸ்டார், நெட்ஃப்ளிக்ஸ் உள்ளிட்டவற்றில் வெளியிடப்பட்டு வருகிறது. 

சமீபத்தில் தமிழில் அமேசான் பிரைமில் ஜோதிகா நடித்த பொன் மகள் வந்தாள் என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. முன்னதாக இந்த திரைப்படத்திற்கு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். 

கொரோனா பாதிப்பு தொடர்ந்து வருவதால், குறைந்தது அடுத்த 2 முதல் 3 மாதங்களுக்கு திரையரங்குகள் திறக்கப்பட வாய்ப்புகள்  குறைவு என தகவல்கள் தெரிவிக்கின்றன.  

இதற்கிடையேதான் வளர்ந்து வரும் இளம் நட்சத்திம் சுஷந்த் சிங் தனது மும்பை இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார்.  இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங்  தோனியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி M.S.Dhoni : The Untold Story  என்ற திரைப்படம் வெளியானது. இதில் நடித்த சுஷந்த் சிங்கிற்கு பெரும் புகழ் கிடைத்தது.

அவர் கடைசியாக தில் பெச்சாரா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.  அந்த திரைப்படம் திரையரங்கிற்கு வர முடியாத நிலையில் உள்ளதால், அதனை டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியிட தயாரிப்பாளர் தரப்பு முடிவு செய்துள்ளது.

அடுத்த மாதம் 24ம் தேதி தில் பெச்சாரா டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருப்பது கூடுதல் தகவல்.

Advertisement

இந்த திரைப்படத்தை டிஸ்னி ஹாட்ஸ்டார் சந்தாதாரர்கள் மட்டும் இல்லாமல்,  அந்த  ஆப்பை வைத்திருக்கும் அனைவரும் பார்த்து ரசிக்க முடியும்.

Can Netflix force Bollywood to reinvent itself? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS. You can also download the episode or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா: அறிமுக தேதி, வடிவமைப்பு, வண்ணங்கள் மற்றும் சிறப்பம்சங்கள்
  2. இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ தொகுப்பு: இந்தியாவில் அறிமுக தேதி, எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  3. பாஸ்கீ மூலம் வாட்ஸ்அப் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் பேக்கப்பை இயக்குவது எப்படி: ஒரு வழிகாட்டி.
  4. ஹானர் 600 சீரிஸ் விரைவில் அறிமுகமாகலாம்: புதிய போனின் டீசரை வெளியிட்டது நிறுவனம்
  5. இன்பினிக்ஸ் GT 50 ப்ரோ: வெளியீட்டிற்கு முன் கசிந்த போனின் கேமிங் அம்சங்கள் மற்றும் புதிய டிசைன் விவரங்கள்.
  6. ரியல்மி16 5ஜி vs நத்திங்போன்4ஏ vs போக்கோஎக்ஸ்8 ப்ரோ: இந்தியாவில் விலை, சிறப்பம்சங்கள் மற்றும் வசதிகள் ஒப்பீடு.
  7. அமேசானில் புதிய ரியல்மி நார்சோ போன் டீசர்: விரைவில் இந்தியாவில் வெளியாகும் என எதிர்பார்ப்பு.
  8. சாட்ஜிபிடியில் விரைவில் தனிப்பயன் ஷேர் ஷீட், ஃபைல் பிக்கர் உள்ளிட்ட பல UI மாற்றங்கள் அறிமுகம்
  9. ஆப்பிள் கார்பிளேயில் சாட்ஜிபிடி அறிமுகம்; ஆனால் நேவிகேஷன் மற்றும் நேரலை இருப்பிடத் தகவலை அணுக முடியாது.
  10. ஆப்பிள் 50வது ஆண்டு விற்பனை: ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ரூ. 1,02,900 விலையில்; ஐபேட், வாட்ச் மாடல்களுக்கும் சலுகைகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.