சொன்னதை செய்யும் சமத்துக்குட்டி Amazon Echo Spot 2024

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 30 ஜூலை 2024 16:37 IST
ஹைலைட்ஸ்
  • Amazon Echo Spot தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் கிடைக்கும்
  • 1.73-இன்ச் முன்-ஃபயர் ஸ்பீக்கர் கீழ் பாதியில் உள்ளது
  • 240x320 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 2.83-இன்ச் தொடுதிரை காட்சி தனிப்பயனாக்

அமேசான் நிறுவனம் தனது Echo Spot ஸ்மார்ட் ஸ்பீக்கர்களில் புதிய சாதனத்தை சேர்த்துள்ளது. எக்கோ ஸ்பாட்டின் சமீபத்திய அப்டேட் வானிலை விவரங்கள், பாடல் தலைப்புகள் மற்றும் பிற ஸ்மார்ட் சாதனங்களைக் கட்டுப்படுத்த உதவும். மேல் பகுதியில் வண்ணத் தொடுதிரையுடன் கூடிய அலெக்சா மூலம் இயங்கும் ஸ்மார்ட் ஸ்பீக்கர் உள்ளது. Echo Spot மூலம் ஸ்மார்ட் ஹோம் சாதனங்களைக் கட்டுப்படுத்தவும் முடியும். 

நைட் ஸ்டாண்டுடன் சிறப்பாக நிற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, பயனர்களுக்கு அலாரத்தை அமைக்க, நிர்வகிக்க, நேரத்தைப் பார்க்க மற்றும் உடனடி வானிலை அறிவிப்புகளைப் பெற எளிதான ஆப்ஷன்களை வழங்குகிறது. சிறந்த காட்சிகள் மற்றும் மேம்பட்ட ஆடியோ தரத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு, வயலட், மெஜந்தா, சுண்ணாம்பு கலர் மற்றும் நீலம் போன்ற ஆறு வெவ்வேறு வண்ணங்ளில் கிடைக்கிறது.  1.73-இன்ச் முன்பக்க ஸ்பீக்கரைக் கொண்டுள்ளது. இசையை இயக்கும்போது, வண்ணமயமான காட்சி அனிமேஷனைக் காண்பிக்கும். எக்கோ ஸ்பாட் மாடலில் கேமரா இல்லாததால் ஆடியோ அழைப்புகளை மட்டும் செய்யலாம்.

மிகச் சமீபத்திய எக்கோ சாதனங்களைப் போலவே, மைக்ரோஃபோனை ஆப் செய்து வைக்க ஒரு பட்டன் உள்ளது. பயனர்கள் அனைத்து குரல் பதிவுகளையும் ஒரே நேரத்தில் நீக்குவதற்கான ஆப்ஷன் உள்ளது. புதிய எக்கோ ஸ்பாட் இந்தியாவில் எப்போது கிடைக்கும் என்பது குறித்து தற்போது எந்த தகவலும் இல்லை.

Amazon Echo Spot 2024 விலை தோராயமாக ரூ. 6,680 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பிரைம் டே விற்பனையின் போது, அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு  ரூ. 3,750 விலையில் கிடைத்தது. இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் மட்டும் கிடைக்கிறது. இந்தியாவில் அறிமுகப்படுத்தும் எந்த திட்டத்தையும் அமேசான் நிறுவனம் பகிர்ந்து கொள்ளவில்லை.
 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Amazon Echo Spot, amazon echo spot 2024
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. அறிமுகமானது Redmi Pad 2: Google AI அம்சங்களுடன் வந்த இந்தியாவின் முதல் டேப்லெட் - மிஸ் பண்ணாதீங்க
  2. அறிமுகமானது iQOO Z10 Lite 5G: பட்ஜெட் 5G-யின் புதிய ராஜா! சிறப்பம்சங்கள் வெளியானது
  3. கேலக்ஸி S25 அல்ட்ரா சலுகை: ₹75,000 வரை தள்ளுபடி! Samsung ரசிகர்கள் மிஸ் பண்ணக்கூடாத ஆஃபர்
  4. அறிமுகமாகிறது Vivo X200 FE: Zeiss கேமராவுடன் அசத்தல் டிசைன்! இந்த கலர்ல வாங்க ஆசையா இருக்கா
  5. அறிமுகமாகிறது Vivo T4 Lite 5G: "மேட் இன் இந்தியா" சிறப்பு - இந்த மாதம் வெளியீடு உறுதி! மிஸ் பண்ணாதீங்க!
  6. அவசரம்! WhatsApp வணிகங்களுக்குப் புதிய அம்சங்கள்: பணமாக்கும் வழி, பிரமோஷன் வாய்ப்புகள் - முழு விபரம் இதோ!
  7. அறிமுகமாகிறது Vivo Y400 Pro 5G: AI அம்சங்கள், 5500mAh பேட்டரி - விலை என்ன? முழு விபரம் வெளியானது
  8. அறிமுகமானது Realme Narzo 80 Lite 5G: பட்ஜெட் 5G-யின் ராஜா! ஜூலை 23 முதல் விற்பனை!
  9. அறிமுகமாகிறது Oppo K13x 5G: கீழே விழுந்தாலும் உடையாதா? முழு பாதுகாப்பு அம்சங்கள் வெளியானது!
  10. Nothing Phone 3 இந்தியாவில் உருவாகிறது - மாடல் நம்பர் A024 உடன் கிளிஃப் இன்டர்பேஸ் மாற்றம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.