Zoom ஆப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள்! - ஆசிரியர்களுக்கு சிங்கப்பூர் அரசு எச்சரிக்கை!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 11 ஏப்ரல் 2020 11:05 IST
ஹைலைட்ஸ்
  • ஆசிரியர்கள் ஜூம் செயலி பயன்படுத்துவதை சிங்கப்பூர் நிறுத்தியுள்ளது
  • ஒரு சம்பவத்தில், திரைகளில் ஆபாச படங்கள் தோன்றின
  • தைவானும், ஜெர்மனியும் ஏற்கனவே ஜூம் செயலிக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன

ஜூம் சந்திப்பு அமர்வுகளின் end-to-end encryption இல்லாததால் கவலைகள் அதிகரித்துள்ளன

ஆசிரியர்கள் ஜூம் செயலி பயன்படுத்துவதை சிங்கப்பூர் நிறுத்தியுள்ளது. பள்ளி சிறுமிகளுடன் புவியியல் பாடத்தை ஸ்ட்ரீமிங் செய்யும் போது திரைகளில் ஆபாச படங்கள் தோன்றியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

முன்னதாக, கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக, ஆசிரியர்கள் வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

Zoom செயலியில், ப்ரைவசி மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகள் இருக்கிறது என்று பாதுகப்பு ஆய்வாளர்கள் ஏற்கனவே கூறினர். MOE (கல்வி அமைச்சகம்) தற்போது இரு மீறல்களையும் விசாரித்து வருகிறது, உத்தரவாதம் அளிக்கப்பட்டால் காவல் அறிக்கையை அளிக்கும்" என்று கல்வி தொழில்நுட்ப பிரிவின் அமைச்சர் ஆரோன் லோ கூறினார்.

"முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதுகாப்பு சிக்கல்கள் முடியும் வரை எங்கள் ஆசிரியர்கள் ஜூம் பயன்படுத்துவதை நிறுத்துவார்கள்". பாதுகாப்பான log-ins தேவை, வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு meeting link-ஐ ஷேர் செய்ய கூடாது என்ற பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்குவதாக லோ கூறினார்.

"முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதுகாப்பு சிக்கல்கள் முடியும் வரை எங்கள் ஆசிரியர்கள் ஜூம் பயன்படுத்துவதை நிறுத்துவார்கள்".

தைவானும், ஜெர்மனியும் ஏற்கனவே ஜூம் செயலிக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அதே நேரத்தில், ஆல்பாபெட்டின் Google ஜூம், டெஸ்க்டாப் பதிப்பை கார்ப்பரேட் மடிக்கணினிகளில் இருந்து தடை செய்தது.

ஜூம் செயலி பாதுகாப்பானது என்று பள்ளி கூறிய பின்னர், "ஆபாசமான ஆண்" ஊடுருவிய பிறகு, செயலியின் பயன்பாட்டை நிறுத்தியதாக கலிஃபோர்னியாவில் உள்ள பெர்க்லி உயர்நிலைப்பள்ளியின் அதிகாரிகள் தெரிவித்தனர். 

ஜூம் சந்திப்பு அமர்வுகளின் end-to-end encryption இல்லாததால் கவலைகள் அதிகரித்துள்ளன.

ஜூம், ப்ரைவசி மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகளை மேம்படுத்துவதற்கான 90 நாள் திட்டத்தை மேற்கொண்டுள்ளது. இதற்கு, ஆலோசகராக முன்னாள் பேஸ்புக் பாதுகாப்புத் தலைவர் Alex Stamos-ஐ நாடியுள்ளது.

Advertisement

© Thomson Reuters 2020

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Singapore, Zoom, Zoombombing
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. இந்தியாவில் ரூ. 10,000-க்குள் சோனி, JBL மற்றும் சவுண்ட்கோர் பிராண்டுகளின் சிறந்த நாய்ஸ்-கேன்சலிங் ஹெட்போன்கள்
  2. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026: விவோ மற்றும் ஐகூ ஸ்மார்ட்போன்களில் சிறந்த சலுகைகள்
  3. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026: ரூ. 50,000-க்கும் குறைவான விலையில் ஸ்மார்ட் டிவிகளுக்கான சிறந்த சலுகைகள்
  4. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026: ரூ. 50,000-க்குக் குறைவான ஸ்மார்ட்போன்களில் சிறந்த சலுகைகள்
  5. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026: ANC உடன் கூடிய இயர்பட்ஸ்களில் சிறந்த சலுகைகள்
  6. கூகுள் பிக்சல் 11 சீரிஸ்: வெளியீட்டுத் தேதி, எதிர்பார்க்கப்படும் விலை, அம்சங்கள், விவரக்குறிப்புகள் மற்றும் பல
  7. iQOO Neo 11 Ultra அறிமுக தேதி அறிவிக்கப்பட்டது; முக்கிய சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாயின
  8. Redmi K100 அறிமுகத்திற்கு முன் K110-க்கு பதிலாக K200 சீரிஸ் வரக்கூடும்: Redmi அதிகாரி தகவல்
  9. ஜேபிஎல் லைவ் 780என்சி விமர்சனம்: ஒரு முழுமையான தொகுப்பா?
  10. ஆகஸ்ட் 11 வெளியீட்டிற்கு முன்னதாக ரெட்மி K100 ப்ரோ மேக்ஸின் முக்கிய விவரக்குறிப்புகள், அம்சங்கள் கசிந்துள்ளன
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.