கூகுள் பே, பேடிஎம் ஆகியவற்றுக்குப் போட்டியாக வரும் வாட்ஸ்அப் பேமெண்ட்..!!

விளம்பரம்
Written by Reuters மேம்படுத்தப்பட்டது: 24 ஜூலை 2020 11:38 IST
ஹைலைட்ஸ்
  • இந்தியாவில் 400 மில்லியன் வாட்ஸ்அப் பயனர்கள் உள்ளனர்
  • ICICI வங்கி, HDFC வங்கியுடன் வாட்ஸ்அப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
  • லோன், இன்சூரன்ஸ் போன்றவை வாட்ஸ்அப்பிலேயே பரிவர்த்தனை செய்ய முடியும்

இந்தியாவில் வாட்ஸ்அப் பேமெண்ட் சேவையை அறிமுகம் செய்ய உள்ளது.

வாட்ஸ்அப் வாடிக்கையாளர்கள் இனி வாட்ஸ்அப் மூலமாகவே கடன், சிறு ஓய்வூதியம், காப்பீட்டுத்தொகை, கடன்தொகை போன்றவற்றைப் பெற முடியும் என்று வாட்ஸ்அப்இந்தியாவின் தலைவர் அபிஜித் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக்கின் ஒரு அங்கமாக வாட்ஸ்அப் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் கிட்டத்தட்ட 400 மில்லியன் வாட்ஸஅப் பயனர்கள் உள்ளனர். இந்தநிலையில் வாட்ஸ்அப் குளோபல் பின்டெக் விழா நடைபெற்றது. விழாவில் வாட்ஸ்அப் இந்தியாவின் தலைவர் அபிஜித் பேசுகையில், வாட்ஸ்அப் டிஜிட்டல் பேமெண்ட் சேவைக்காக ஐசிஐசிஐ வங்கி, கோட்டாக் மஹிந்திரா, ஹெச்டிஎஃப்சி உள்ளிட்ட வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார்.

Advertisement

மேலும், அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் குறைந்த ஊதிய தொழிலாளர்களுக்கு உதவுவதே தங்களது நோக்கம் என்றும், அமைப்புசாரா, முறைசாரா பொருளாதாரம் காப்பீடு, மைக்ரோ கிரெடிட் மற்றும் ஓய்வூதியம் ஆகிய மூன்று தயாரிப்புகளை எளிதில் அணுக முடியும் என்றும்  அவர் தெரிவித்தார். 

வங்கிகளுடனான கூட்டாண்மை தவிர, அமெரிக்க நிறுவனமும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் தனது பயனர்களுடன் சொந்த பேமெண்ட் சேவைகளைச் செய்து வருவதாகவும் அபிஜித் தெரிவித்தார். 

இந்தியாவில் வாட்ஸ்அப் பேமெண்ட் வரும்பட்சத்தில் மற்ற நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக வாட்ஸ்அப் இருக்கும். இந்தியாவைப் பொறுத்தவரையில் சுமார் 400 மில்லியன் பயனர்கள் வாட்ஸ்அப்பில் உள்ளனர். அவர்களில் பாதி பேர் டிஜிட்டல் பேமெண்ட் வசதிகளைப் பயன்படுத்தினால் கூட சுமார் 200 மில்லின் வாடிக்கையாளர்கள் மற்ற டிஜிட்டல் தளங்களில் இருந்து வாட்ஸ்அப்பிற்கு வந்து விடுவார்கள்.

© Thomson Reuters 2020


Why are smartphone prices rising in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: WhatsApp Pay, WhatsApp Payment, Facebook
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.