இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ளது 'வாட்ஸ்அப் பே'! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 6 மே 2020 12:21 IST
ஹைலைட்ஸ்
  • வாட்ஸ்அப் பே, ஆக்சிஸ் வங்கி, HDFC வங்கி & ICICI வங்கியுடன் இணைந்துள்ளது
  • வாட்ஸ்அப் பே சேவையை மே மாத இறுதிக்குள் முழுமையாக தொடங்க முடியும்
  • வாட்ஸ்அப் பே ஆரம்பத்தில் 10 மில்லியன் பயனர்களை சென்றடையவுள்ளது

Amazon Pay UPI, Google Pay, PhonePe மற்றும் Paytm போன்றவற்றுக்கு WhatsApp Pay கடும் போட்டியாளாரக வரவுள்ளது

WhatsApp பே இம்மாத இறுதிக்குள் தொடங்க தயாராக உள்ளது. ஒரு அறிக்கையின்படி, தற்போது பீட்டா சோதனையின் கீழ் உள்ள உடனடி செய்தி செயலியின் கட்டண சேவை விரைவில், Axis Bank, HDFC Bank, ICICI Bank ஆகிய மூன்று தனியார் வங்கிகளுடன் இணைந்து தொடங்கப்படும். அதன் பின்னர் பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவும் (SBI) சேர்க்கப்படும்.

தற்போது பீட்டா சோதனை கட்டத்தில், வாட்ஸ்அப் பே ஐசிஐசிஐ வங்கி மூலம் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகத்தின் (UPI) அடிப்படையிலான பரிவர்த்தனைகளை அனுமதிக்கிறது.

இந்த செய்தியை அறிந்த சில ஆதாரங்களை மேற்கோள் காட்டி, ஆக்ஸிஸ் வங்கி, எச்.டி.எஃப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி மற்றும் எஸ்.பி.ஐ ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் செயல்முறை வாட்ஸ்அப்பில் செய்யப்படுவதாக மனிகண்ட்ரோல் (Moneycontrol.com) அறிக்கை கூறுகிறது.

இருப்பினும், ஆரம்பத்தில் WhatsApp Pay சேவை மேற்கூறிய வங்கிகளில் மூன்று தனியார் வங்கிகளுடன் தொடங்கப்படும் என்றும், பின்னர் எஸ்பிஐ அதில் சேர்க்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

யுபிஐ அடிப்படையிலான கட்டண சேவைகளை வழங்கும் பெரிய டிஜிட்டல் தளங்களுக்கான பரிவர்த்தனைகளில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக National Payments Corporation of India (NPCI) சமீபத்தில் பல வங்கி மாதிரியின் விருப்பத்தை கட்டாயப்படுத்தியது.

பேமெண்டுகளை அனுமதிப்பதில் ஒரு வங்கி ஏதேனும் சிக்கலை எதிர்கொண்டால், இந்த பல வங்கி மாதிரி உதவியாக இருக்கும் என்பதை நிரூபிக்கிறது. ஒற்றை வங்கி மாதிரியைப் பயன்படுத்துவதில் உள்ள குறைபாடுகள், இந்த ஆண்டின் தொடக்கத்தில் Yes Bank தடைக்காலத்தில் வெளிப்பட்டன. இது PhonePe மற்றும் Swiggy போன்ற தளங்களின் செயல்பாடுகளை அந்தக் காலகட்டத்தில் சிறிது நேரம் நிறுத்தியது.

Google Pay மற்றும் Truecaller ஆகியவை தற்போது பல வங்கிகள் மூலம் பரிவர்த்தனைகளை அனுமதிக்கும் முக்கிய தளங்களில் ஒன்றாகும். சுவாரஸ்யமாக, கூகுள் பே ஏற்கனவே ஆக்சிஸ் வங்கி, எச்.டி.எஃப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ மற்றும் எஸ்பிஐ ஆகியவற்றை கையகப்படுத்தும் வங்கிகளாகக் கொண்டுள்ளது. இது யுபிஐ அடிப்படையிலான பரிவர்த்தனைகளை செயல்படுத்துகிறது.


In 2020, will WhatsApp get the killer feature that every Indian is waiting for? Samsung Galaxy S20 in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: WhatsApp Pay, WhatsApp Payments, WhatsApp, SBI, ICICI Bank, Axis Bank, HDFC Bank
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. சாம்சங் 'பேக் டூ ஸ்கூல்' விற்பனை: கேலக்ஸி S26, டேப் S11 அல்ட்ரா உள்ளிட்ட சாதனங்களுக்கு தள்ளுபடி!
  2. கூகுளின் ஃபிட்பிட் ஏர் (Fitbit Air) அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக அமேசான் இந்தியாவில் கண்டறியப்பட்டது
  3. ரெட்மி நோட் 17 இந்திய அறிமுக தேதி கசிந்தது; முக்கிய அம்சங்களை டிப்ஸ்டர் உறுதிப்படுத்தியுள்ளார்!
  4. பெரிய பேட்டரியுடன் விரைவில் ஷியோமி பேட் 9 அறிமுகமாகலாம்; கசிந்த முக்கிய அம்சங்கள்!
  5. சாம்சங் கேலக்ஸி A55, A35 மாடல்களில் ஆண்ட்ராய்டு 17 சார்ந்த ஒன் UI 9 சோதனை பதிப்புகள் கண்டறியப்பட்டன!
  6. OnePlus 16 மற்றும் Oppo Find X10 அல்ட்ரா போன்கள் இந்திய அறிமுகத்தைத் தவிர்க்கலாம்: கசிவு சுட்டிக்காட்டுகிறது
  7. இந்த சாம்சங் ஸ்மார்ட்போனுக்கு பிரம்மாண்ட தள்ளுபடி; இப்போது ₹22,000 குறைவான விலையில்: ஆஃபர் விவரங்கள் இதோ!
  8. Poco M8 Power இந்திய அறிமுகம் டீஸ் செய்யப்பட்டது; பிளிப்கார்ட் விற்பனை உறுதி: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
  9. இந்தியாவில் Oppo K14, K14x மற்றும் A6s போன்களின் விலை உயர்வு: புதிய விலைப் பட்டியல்
  10. Oppo A7 Pro Max-ல் 10,000mAh பேட்டரி, Snapdragon 4 Gen 5 SoC மற்றும் பல அம்சங்கள் இடம்பெற வாய்ப்பு
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.