இந்த Jio ஆப் மூலம் வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கலாம் - எப்படினு தெரிஞ்சுக்கோங்க!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 9 ஏப்ரல் 2020 15:38 IST
ஹைலைட்ஸ்
  • JioPOS Lite செயலி கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது
  • செயலியை வருவாய் சரிபார்க்க அனுமதிக்க பாஸ்புக் அம்சம் உள்ளது
  • Jio Partner-ராக மாறுவதற்கு எந்த ஆவணமும் தேவையில்லை

JioPOS Lite செயலியில் கிடைக்கக்கூடிய அனைத்து ரீசார்ஜ்களையும் பயனர்களுக்கு தெரிவிக்கும் FAQ பிரிவும் உள்ளது. 

இந்தியாவில் புதிய JioPOS Lite ரீசார்ஜ் செயலியை ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது. JioPOS Lite செயலியை Google Play Store-ல் இருந்து ஆண்ட்ராய்டுக்கு இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். இப்போது iOS பதிப்பு எதுவும் இல்லை. 


JioPOS Lite செயலியின் விவரங்கள்: 

JioPOS Lite செயலியை பயன்படுத்தி, எந்தவொரு நபரும் Jio Partner-ராக மாறலாம். அதற்கு செயலியை இன்ஸ்டால் செய்து, ஜியோ எண் மூலம் பதிவு செய்தவுன், செயலி உங்கள் பணப்பையில் (wallet) பணத்தை ஏற்றுவதற்கு கேட்கும். Jio Partner ஆன பிறகு, எந்தவொரு பயனரும் மற்ற ஜியோ வாடிக்கையாளர்களின் கணக்குகளை ரீசார்ஜ் செய்து கமிஷனைப் பெறலாம். வழங்கப்படும் பிரிவுகள் (denominations) ரூ.500, ரூ.1,000, மற்றும் ரூ.2,000 ஆகும். JioPOS Lite செயலி மூலம் மற்ற எண்களை ரீசார்ஜ் செய்யும் Jio Partner-களுக்கு, அதாவது ஒவ்வொரு ரூ.100-க்கு ரீசார்ஜுக்கும், (ரூ.4.166) 4.16 சதவீத கமிஷனை வழங்குகிறது. செயலியில் வருவாய் சரிபார்க்க அனுமதிக்க பாஸ்புக் அம்சமும் உள்ளது.

கூடுதலாக, இந்த செயலியில், கிடைக்கக்கூடிய அனைத்து ரீசார்ஜ்களையும் பயனர்களுக்கு தெரிவிக்கும் FAQ பிரிவும் உள்ளது. 

குறிப்பு: மைஜியோ செயலி அல்லது ஜியோ வலைத்தளத்தைப் பயன்படுத்தியும் மற்றவர்களின் ஜியோ ப்ரீபெய்ட் கணக்குகளை ரீசார்ஜ் செய்யலாம். ஆனால், அந்த ரீசார்ஜ்களில் ஜியோ உங்களுக்கு எந்த கமிஷனை வழங்காது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: JioPOS LIte, Reliance Jio, Airtel Earn From Home
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஒப்போ ஃபைண்ட் X9s இந்தியாவில் அறிமுகம்: ஹாசல்பிளாட் 50MP கேமரா மற்றும் 7,025mAh பேட்டரி
  2. ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் விமர்சனம்: கிட்டத்தட்ட ‘ப்ரோ’ தரத்திலான ஒரு பிரீமியம் ஸ்மார்ட்போன்
  3. சியோமி ஸ்மார்ட் பேண்ட் 10 ப்ரோ அறிமுகம்: 1.74-இன்ச் AMOLED திரை, 21 நாட்கள் பேட்டரி ஆயுள்
  4. ஒப்போ ஃபைண்ட் X9s, விவோ X300 FE, ஒன்பிளஸ் 15: இந்திய விலை மற்றும் சிறப்பம்சங்கள் ஒப்பீடு
  5. புதிய அடோப் மற்றும் கான்வா கனெக்டர்கள் மூலம் ஏஜென்டிக் வடிவமைப்பு உருவாக்கத்தை வழங்குகிறது கூகுளின் ஜெமினி
  6. ஒப்போ ஃபைண்ட் X9 அல்ட்ரா மற்றும் விவோ X300 அல்ட்ரா: இதில் எது சிறந்தது?
  7. ஒப்போ ரெனோ 16 ,ரெனோ 16 கேமரா விவரம் டீஸ் செய்யப்பட்டது; இந்திய அறிமுக காலம் ஆன்லைனில் வெளியானது
  8. விவோ S தொடர் S2 மூலம் மீண்டும் இந்தியாவிற்கு: அறிமுக காலம், விலை விவரம் கசிந்தது
  9. HMD வைப் 2 5G இந்தியாவில் அறிமுகம்: 6,000mAh பேட்டரி, 128GB வரை சேமிப்பகம்: விலை, விவரக்குறிப்புகள்
  10. ஒப்போ ஃபைண்ட் X9s இந்தியாவில் அறிமுகம்: ஹாசல்பிளாட் 50MP கேமரா மற்றும் 7,025mAh பேட்டரி
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.