ஐபோனில் ரீலிசான 'வாட்ஸ் அப் பிஸ்னஸ்' அப்டேட்!

விளம்பரம்
Written by Gagan Gupta மேம்படுத்தப்பட்டது: 22 மார்ச் 2019 12:32 IST
ஹைலைட்ஸ்
  • மெக்சிக்கோ நாட்டில் முதலில் களமிங்கும் வாட்ஸ் ஆப் பிஸ்னஸ்!
  • பிரேசில், ஃபிரான்ஸ் போன்ற நாடுகளில் இந்த அப்டேட் வெளியானது!
  • இந்தியாவில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்பு!

மெக்சிக்கோ, பிரேசில், அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் இந்த அப்டேட் அறிமுகமாகியுள்ளது எனக் கூறப்படுகிறது.

ஆண்ட்ராய்டு போன்களில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 'வாட்ஸ் ஆப் பிஸ்னஸ்' அறிமுகமாகிய நிலையில் ஐபோன் வாடிக்கையாளர்கள் இந்த அப்டேட்டிற்காக வெகு நாள் காத்திருந்தனர். இந்நிலையில்,  ஐபோனுக்கான வாட்ஸ் ஆப் பிஸ்னஸ் சில நாடுகளில் அறிமுகமாகியுள்ளதாக தகவல் கசிதுள்ளது.

மெக்சிக்கோ, பிரேசில், அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் இந்த அப்டேட் பரவலாக வெளியாகியுள்ளதாகவும் உடனடியாக பதிவிறக்கம் செய்ய முடியவில்லை என்றாலும் இன்னும் சில நாட்களில் இந்த அப்டேட்டை பயன்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த புதிய அப்டேட் இந்தியாவில் எப்போது வெளிவரும் என்று தெரியவில்லை. ஆனால் வாட்ஸ் ஆப் நிறுவனம் சார்பில் இந்த புதிய வாட்ஸ் ஆப் பிஸ்னஸ் பற்றி எந்தத் தகவலும் சொல்லப்படவில்லை.

இந்த வாட்ஸ் ஆப் பிஸ்னஸ் ஆப் மூலம் வணிகம் செய்பவர்கள் தங்களது வாடிக்கையாளர்களுடன் தங்களது தயாரிப்புகள் மற்றும் இதர தகவல்களைப் பகிர முடியும் எனப்படுகிறது. இதுவரை சுமார் 5 மில்லியன் மக்கள் இதைப் பயன்படுத்தி வருவதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் வாட்ஸ் ஆப், சில முக்கிய அப்டேட்களான வேகமாக பதில் அளிக்கும் வசதி உள்ளிட்டவையை அறிமுகம் செய்தது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: WhatsApp, WhatsApp Business, iOS, App Store
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. வோடஃபோன் ஐடியா (Vi) ரூ. 230 முதல் புதிய ப்ரீபெய்ட் பிளான்களுடன் ஸ்பாட்டிஃபை ப்ரீமியத்தை வழங்குகிறது
  2. இன்டெல் N50, கூகுள் AI அம்சங்களுடன் அசுஸ் குரோம்புக் CX15 இந்தியாவில் அறிமுகம்: விலை, அம்சங்கள்
  3. iQOO Z11 இந்தியாவில் ஆகஸ்ட் 20 அன்று அறிமுகம்: எதிர்பார்க்கப்படும் விவரக்குறிப்புகள், அம்சங்கள்
  4. 10,000mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் 4 Gen 5 சிப்செட்டுடன் ஒப்போ F35 புரோ இந்த மாதம் இந்தியாவில் அறிமுகமாகிறது!
  5. அமேசான் மாபெரும் சுதந்திர தின விற்பனை: வங்கி மற்றும் கூப்பன் சலுகைகளுடன் iQOO 15 தள்ளுபடி விலையில் கிடைக்கும்
  6. ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 சிப்செட், 6,000mAh பேட்டரியுடன் சாம்சங் கேலக்ஸி F70 புரோ 5G இந்தியாவில் அறிமுகம்!
  7. ஸ்கல்கேண்டி ஏவியேட்டர் 900 ஏஎன்சி இந்தியாவில் 60 மணிநேர பேட்டரி ஆயுளுடன் அறிமுகப்படுத்தப்பட்டது
  8. OnePlus 16 விலை மற்றும் ரேம் விவரங்கள் லீக்; 8GB RAM வேரியண்ட் மீண்டும் வர வாய்ப்பு!
  9. போல்ட் ஸ்மார்ட்போன் இந்தியா வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது; Flipkart Microsite நேரலையில் வருகிறது
  10. Redmi 17 5G குளோபல் மாடலின் விலை, டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள் அறிமுகத்திற்கு முன்பே கசிந்தன!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.