பேஸ்புக் யூசர்களின் பாஸ்வேர்டு திருட்டு! 25 ஆப்களை அதிரடியாக நீக்கியது கூகுள் ப்ளே ஸ்டோர்

விளம்பரம்
மேம்படுத்தப்பட்டது: 2 ஜூலை 2020 09:59 IST
ஹைலைட்ஸ்
  • Most of the malicious apps offered wallpapers, video editing tools
  • Google removed these apps earlier in June
  • It is unclear how the apps avoided Google Play Protect detection

பெரும்பாலான ஆப்கள் வால்பேப்பர், வீடியோ எடிட்டிங் தொடர்புடையவை.

Photo Credit: Evina

பேஸ்புக் யூசர்களின் பாஸ்வேர்டுகளை திருடிய புகாரின்பேரில், 25 ஆப்களை கூகுள் ப்ளே ஸ்டோர் அதிரடியாக நீக்கியுள்ளது. இந்த தகவலை பிரான்ஸ் நாட்டின் சைபர் செக்யூரிட்டி நிறுவனமான ஈவினா வெளியிட்டுள்ளது.

இந்த 25 ஆப்களும் சுமார் 25 லட்சம் முறை டவுன்லோடு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆப்களில் சில கடந்த 2 ஆண்டுகளாக கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்ததாக  ஈவினா தெரிவித்துள்ளது.

முன்னதாக, 25 ஆப்கள் பயனர்களின் தகவல்களை திருடும் என ஈவினா கூகுள் ப்ளே ஸ்டோருக்கு மே மாதம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன் அடிப்படையில் தீங்கு விளைவிக்கும் ஆப்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான ஆப்கள் வால்பேப்பர், வீடியோ எடிட்டிங் தொடர்புடையவை.

இந்த ஆபத்தான ஆப்களை யூசர்கள் டவுன்லோடு செய்து மொபைலில் பயன்படுத்துகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் பேஸ்புக் ஆப்பை பயன்படுத்தும்போது, அதேநேரத்தில் மால்வேர் வைரஸ் மற்றொரு பிரவுசரை ஓப்பன் செய்துவிடும். ஆனால் அது பேஸ்புக்காக இருக்காது. அதில் தகவல் அளிக்கும்போது பாஸ்வேர்டு உள்ளிட்ட விஷயங்கள் திருடப்பட்டு விடும்.

குறிப்பாக பேஸ்புக்கின் தீம் நீல வண்ணத்தில் இருக்கும். ஆனால் வைரஸ் ஓப்பன் செய்யும் பிரவுசரில் உள்ள பேஸ்புக் பக்கம் கருப்பு நிறத்தில் இருந்தால் நமது தகவல்கள் திருடப்படுகின்றன என்பதை புரிந்து கொள்ளலாம்.


In 2020, will WhatsApp get the killer feature that every Indian is waiting for? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Google, Google Play, Malicious Apps, Play Store, Fraudulent Apps, Android Malware, Malware
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. கலக்கும் Realme C71: 50MP கேமரா, நீண்ட நேரம் தாங்கும் பேட்டரி - வேற லெவல் போன்
  2. Nothing-ன் புது அவதாரம்! Phone 3, Headphone 1: மாஸ் லான்ச்சுக்கு ரெடியாகுங்க
  3. பார்த்துட்டீங்களா! Vivo T4 Ultra-வோட பெரிய ஜூம் லென்ஸ் கேமரா அட்ராசிட்டி! இதோட அம்சங்கள் வேற லெவல்!
  4. iQOO Neo 10: விலை குறைவு, ஆனால் அசத்தலான அம்சங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!
  5. Realme GT 7, GT 7T: பவர்ஃபுல் சிப், 120W சார்ஜிங்குடன் இந்திய மார்க்கெட்ல - மிஸ் பண்ணாதீங்க!
  6. ஏர்டெல் புது பிளான்ஸ்: ஓடிடி பிரியர்களுக்கு ஜாக்பாட்! விலை, டேட்டா, முழு விவரம் இதோ!
  7. ஸ்டார்லிங்க் இந்தியாவில் அறிமுகம்: அன்லிமிடெட் டேட்டா, விலை மற்றும் ஸ்பெஷல் ஆஃபர்ஸ்
  8. Vivo T4 Ultra: Dimensity 9300 சிப், பெரிஸ்கோப் கேமரா - ரிலீஸ் தேதி கசிந்தது
  9. AI லேப்டாப் தேடுறீங்களா? Acer Swift Neo - சிறப்பம்சங்கள், விலை, எங்க கிடைக்கும்னு முழு விவரம்!
  10. iQOO Neo 10: Snapdragon 8s Gen 4 & 7000mAh பேட்டரியுடன் இந்தியாவில் வெளியானது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.