காதுகேளாதவர்களுக்கான இரண்டு புதிய கூகுள் செயலிகள் அறிமுகம்!

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 8 பிப்ரவரி 2019 15:21 IST
ஹைலைட்ஸ்
  • லைவ் டிரான்ஸ்கிரைப் என்கின்ற செயலி இன்னும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
  • லைவ் டிரான்ஸ்கிரைப் செயலி கூகுள் பிக்சல் 3 மொபைல் போனில் வெளியாகுகிறது.
  • பிளே ஸ்டோரில் தற்போது பதிவிறக்கம் செய்யப்படும் சவுண்டு ஆம்பிலிஃவையர்.

காதுகேளாதவர்களுக்கான பல தொழில்நுட்பங்கள் மார்கெட்டில் இல்லை என்ற நிதர்சன உண்மையை மாற்றும் வகையில் கூகுள் நிறுவனம் இரண்டு புதிய உதவும் செயலிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த உதவும் செயலி மூலம் காதுகள் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் ஸ்மார்ட்போன்களை வைத்து தங்களது கருத்துகளை கூறும் வசதியை உறுவாக்கியுள்ளது.

இந்த புதிய செயலிகளின் அறிமுகத்தால் கேட்கும் திறனை அதிகரிக்கும் உபகரணங்களின் பயன்பாட்டை குறைக்க முடிகிறது. லைவ் டிரான்ஸ்கிரைப் (Live Transcribe) மற்றும் சவுண்டு ஆம்பிலிஃவையர் (Sound Amplifier) என அழைக்கப்படும் இந்த இரண்டு புதிய உதவும் செயலிகள் அண்ட்ராய்டு போன்களில் வெளியாகியுள்ளது.

லைவ் டிரான்ஸ்கிரைப் என்னும் செயலியை பொருத்தவரை காதுகேளாதவர்களுக்கு செய்திகளை டிரான்ஸ்கிரிப்ஷன் முறையில் அளிக்கும். அதேசமயத்தில் சவுண்டு ஆம்பிலிஃவையர் என்னும் செயலி மூலம் சிறிதளவு காதுகேளாத நபர்களுக்கு சப்தத்தை அதிகரிக்கவும் கேட்கும் சப்தத்தை தெளிவுபடுத்த உதவுகிறது.

கூகுள் பிளே ஸ்டோரில் வெளியாகியிருக்கும் இந்த புதிய செயலியை நம்மால் பதிவிறக்கம் செய்துகொண்டு பயன்படுத்த முடியும். ஆனால் லைவ் டிரான்ஸ்கிரைப் செயலி இன்னும் கட்டமைப்பில் உள்ளதால் பதிவிறக்கம் செய்து சோதனை செய்ய உதவும் நபர்களால் மட்டுமே இந்த செயலியின் முழு பயனை அனுபவிக்க முடிகிறது.

இதன் இயக்கத்தை குறித்து கேட்டபோது இந்த செயலி முன்னணி ஸ்பிச் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பேச்சை எழுத்து வடிவாக மாற்ற உதவுகிறது. சுமார் 70 பிரதான மொழிகள் மற்றும் வட்டார மொழிகளில் பயன்படுத்த முடிகிறது. அப்படி மாற்றபடும் வாக்கியங்கள் மற்றும் பேச்சுக்கள் கூகுள் நிறுவனம் சேமிக்காமல் நமது ஸ்மார்ட்போன்களில் சேமித்துவைக்க உதவும்.

மேலும் இரண்டு மொழிகள் கலந்து பேசினாலும் அதை பயனாளிகளுக்கு உணர்த்த இந்த செயலி உதவுகிறது. ‘லைவ் டிரான்ஸ்கிரைப்' செயலி கூகுள் பிக்சல் 3 (ரூ.62,540) பொருத்தப்பட்டே வெளியாகிறது. மேலும் இரண்டாவது செயலியான சவுண்டு ஆம்பிலிஃவையர் சப்தத்தை கேட்காதவர்களுக்கு மிகைப்படுத்தி கேட்கும் திரணை அதிகரிக்கும்.

சுமார் 3.1 எம்.பி அளவு கொண்டுள்ள இந்த செயலி பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்ய முடிகிறது.  அதை ஆக்டிவேட் செய்ய செட்டிங்ஸ் > அக்சஸ்பிளிட்டி > சவுண்ட ஆம்பிலிஃவையர் > சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்.    

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.