வருகிறது ரியல்மியின் புத்தம் புதிய ஸ்மார்ட்கேம், ஸ்மார்ட் பல்பு!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 7 செப்டம்பர் 2020 13:06 IST
ஹைலைட்ஸ்
  • IFA 2020 நிகழ்வில் ரியல்மியின் புதிய தயாரிப்புகள் அறிமுகமாகின
  • ரியல்மி ஸ்மார்ட் கேம் 360 இல் 1080P வீடியோ ரெக்கார்டிங் உள்ளது
  • விலை குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்

ரியல்மி ஸ்மார்ட் கேம் 360 இல் 128ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது

ரியல்மி நிறுவனம் புதிதாக ஸ்மார்ட் கேம் 360, ஸ்மார்ட் பல்ப் அறிமுகம் செய்ய உள்ளது, இந்த இரண்டு தயாரிப்புகளும்  IFA 2020 இல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

ரெட்மி, சாம்சங் நிறுவனங்களுக்குப் போட்டியாக ரியல்மி நிறுவனமும் பல எலெக்ட்ரானிக் கேட்ஜெட்ஸ்களை தயாரிக்கும் முனைப்பில் உள்ளது. அந்த வகையில், தற்போது புதிதாக ஸ்மார்ட் கேமரா மற்றும் ஸ்மார்ட் பல்பு என இரண்டு அட்டகாசமான தயாரிப்புகளை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த இரண்டும் IFA 2020 இல் வெளிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன. 

ரியல்மி ஸ்மார்ட் கேம் 360 சிறப்பம்சங்கள்:

ரியல்மி நிறுவனம் முதன்முதலாக வீடு பாதுகாப்புக்காக ஸ்மார்ட் கேம் 360 கேமராவை உருவாக்கியுள்ளது. இது 1080P ஃபுல் ஹெச்டி வீடியோ ரெக்கார்டிங் கேமரா ஆகும். மேலும், வைட் ஆங்கிள், நாய்ஸ் கேன்சலேசன் உள்ளிட்ட அம்சங்களும் உள்ளது. 360 டிகிரி கோணத்த்தில் இயங்குவதற்காக கிம்பள் மெக்கானிசம் உள்ளது. மனிதர்கள், நகரரும் மற்ற பொருட்கள் ஆகியவற்றை துல்லியமாக கணிக்கிறது. 

128 ஜிபி ஸ்டோரேஜ், இரு வழியில் பேசுவதற்கான அம்சம்,அகச்சிவப்பு கதிர் எனப்படும் இன்ஃப்ரா ரெட் தொழில்நுட்பம் உள்ளது. இதனால், சூரியன் மறையும் போது, தானாகவே இன்ஃப்ரா ரெட் ஆன் செய்து, இரவு நேரத்தில் வீட்டை கண்காணிக்கிறது.
 

ரியல்மி ஸ்மார்ட் பல்பு

ரியல்மி ஸ்மார்ட் பல்பு 13 வருடங்களுக்கு நீடித்து உழைக்கும் என்று கூறப்படுகிறது

IFA 2020 நிகழ்வில் ரியல்மியின் ஸ்மார்ட் பல்பும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய தயாரிப்பில் சுமார் 16 மில்லியன் நிறங்கள் உள்ளது. பல்பு வெட்டும் தன்மை அதாவது பிளிக்கரிங் குறைபாடு இதில் இருக்காது. ஃபிளேம் ரெசிஸடெண்ட்  மெட்டிரியலால் இந்த பல்பு உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 13 வருடங்களுக்கு நீடித்து உழைக்கும் என்று கூறப்படுகிறது. வாய்ஸ் கமெண்ட் கன்ட்ரோல் உள்ளதால், சாதாரணமாக நாம் பேசுவதன் மூலமாகவே பல்பை இயக்க முடியும்.


Is Realme TV the best TV under Rs. 15,000 in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டிசைனிங் கத்துக்கணுமா? அடோப் டூல்ஸ் இப்போ ஃப்ரீ! இந்திய மாணவர்களுக்கு 'அடோப்' தந்த செம்ம கிப்ட்
  2. WhatsApp குரூப்ல இப்போதான் சேர்ந்தீங்களா? கவலைப்படாதீங்க! பழைய 100 மெசேஜ்களை இனி நீங்க படிக்கலாம்
  3. ஜியோ ஹாட்ஸ்டார் சாட்ஜிபிடி வேற லெவல் என்டர்டைன்மென்ட்! இனி நம்ம ஊர் மொழியிலேயே பேசி படங்களைத் தேடலாம்
  4. சாட்ஜிபிடி இப்போ நம்ம காலேஜுக்குள்ளயே வந்துடுச்சு! 1 லட்சம் மாணவர்களுக்கு ஸ்பெஷல் கோர்ஸ்.. ஓபன் ஏஐ-யின் அதிரடி பிளான்
  5. டெல்லியில் 1,100-க்கும் மேற்பட்ட போலி நதிங், CMF பொருட்கள் பறிமுதல்! கூகுள் போல நதிங் நிறுவனமும் எச்சரிக்கை - முழு விவரம்
  6. இனி இன்டர்நெட் வேகம் வேற லெவல்ல இருக்கும்! கடலுக்கு அடியில் கூகுள் போடும் புதிய கேபிள் ரூட்கள்
  7. கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஜியோவின் மெகா கிப்ட்! ரூ.1457 பெனிபிட்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே
  8. Pixel 10a வந்தாச்சு மக்களே! தரமான கேமரா, வேற லெவல் பேட்டரி.. ஐபோனுக்கு செம்ம டஃப் கொடுக்கும் போலயே
  9. இனி டேட்டா கேபிள் தேவையில்லை! Pixel 9 போன் வச்சிருக்கீங்களா? ஐபோனுக்கு அசால்ட்டா ஃபைல் அனுப்பலாம்
  10. மே 19-ல் கூகுள் போடப்போகும் மெகா பிளான்! Android 17 முதல் Gemini AI வரை - முழு விபரம் இதோ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.