இந்தியாவில் 'ரோபோ வேக்யூம் கிளீனரை' அறிமுகப்படுத்தியது ஷாவ்மி! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 17 ஏப்ரல் 2020 15:52 IST
ஹைலைட்ஸ்
  • இது எம்ஐ ரோபோ வேக்யூம் கிளீனரின் இந்திய வேரியண்டாகும்
  • ரோபோ வேக்யூம் கிளீனர் 1,200Pa உறிஞ்சும் சக்தியுடன் வருகிறது
  • ஷாவ்மி, எம்ஐ ஹோம் செயலி ஒருங்கிணைப்பை வழங்கியுள்ளது

எம்ஐ ரோபோ வேக்யூம்-மோப் பி, டூ -இன்-ஒன் ஸ்வீப்பிங் மற்றும் மோப்பிங் செயல்பாட்டுடன் வருகிறது

இந்தியாவில் எம்ஐ ரோபோ வேக்யூம்-மோப் பி ரோபோடிக் வேக்யூம் கிளீனரை, Xiaomi அறிமுகப்படுத்தியுள்ளது. இது டூ-இன்-ஒன் ஸ்வீப்பிங் மற்றும் மோப்பிங் செயல்பாட்டுடன் வருகிறது. இதில், வழிசெலுத்தலுக்கான லேசர் கண்டறிதல் அமைப்பு (எல்.டி.எஸ்) உள்ளது. எம்ஐ ரோபோ வேக்யூம்-மோப் பி, 12 உயர் துல்லிய சென்சார்களைக் கொண்டுள்ளது. 


விலை நிலவரம்:

இந்தியாவில் எம்ஐ ரோபோ வேக்யூம்-மோப் பி-யின் விலை ரூ.29,999. இருப்பினும், அறிமுக விலையாக ரூ.17,999-க்கு தற்போது கிடைக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு மாதம் ரூ.2,999-க்கு no-cost EMI ஆப்ஷனும் கிடைக்கும். இதை, க்ரூட்ஃபண்டிங் இயங்குதளத்தின் மூலம் ஆர்டர் செய்யலாம்.

Advertisement


விவரங்கள்: 

எம்ஐ ரோபோ வேக்யூம்-மோப் பி, தூரிகை இல்லாத மோட்டருடன் 2,100Pa உறிஞ்சும் சக்தியைக் கொண்டுள்ளது. இந்த சாதனம் எட்டு மீட்டர் ஸ்கேனிங் வரம்பையும், ஒரு வினாடிக்கு 2,016 மடங்கு மாதிரி விகிதத்தையும் கொண்டுள்ளது. இதில் ஸ்வீப்பிங் + மோப்பிங் மோட் உள்ளது. தரையை உலர சுத்தம் செய்வதற்கு Sweeping Only மோட் உள்ளது. இதில் மின்னணு முறையில் கட்டுப்படுத்தப்பட்ட நீர் தொட்டியை உள்ளது. இது மூன்று கியர்கள் நீர் விநியோக முறைகள் மற்றும் நீர் அடைப்பு தடுப்பு இயந்திரநுட்பத்தைக் கொண்டுள்ளது. 

இந்த வேக்யூம் கிளீனர், உங்கள் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி எம்ஐ ஹோம் செயலி மூலம் இணைக்கலாம். இதன் மூலம் தொலைதூரத்திலும் கூட எளிமையாக சுத்தம் செய்யலாம். இந்த சாதனத்தை முதல் முறை இயக்கியவுடனேயே, செயலி மூலம் navigates, identifies அறையின் இருப்பிடம் ஆகியவற்றை சேமித்து வைக்கிறது. தரைவிரிப்புகள் அல்லது சலவை அறைகள் போன்ற பகுதிகளை சுத்தம் செய்வதைத் தவிர்க்க, செயலியை பயன்படுத்தி மெய்நிகர் சுவர்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட பகுதிகள் உருவாக்கலாம்.

எம்ஐ ரோபோ வேக்யூம்-மோப் பி, குவாட் கோர் கோர்டெக்ஸ்-ஏ 7 சிபியுவைக் கொண்டுள்ளது. இது டூயல் கோர் மாலி 400 ஜி.பீ.யுடன் இயக்கும். இது ஒரு தானியங்கி ரீசார்ஜ் மற்றும் மறுதொடக்கம் அம்சத்தையும் கொண்டுள்ளது. இதன் வன்பொருள் அதன் சார்ஜிங் புள்ளிக்குச் சென்று தானாக ரீசார்ஜ் செய்ய உதவுவதோடு, பிரேக் பாயிண்டிலிருந்து மீண்டும் சுத்தம் செய்ய தொடங்குகிறது. இது 3,200 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 2 மணி நேரம் வரை இயங்கும். சாதனம் இணைப்பு முன்பக்கத்தில் Wi-Fi 802.11 b/g/n மற்றும் நிலையான மோடில் 70 டிபி வரை சத்தத்தை உருவாக்குகிறது. இது, 350x94.5 மிமீ அளவு மற்றும் 3.6 கிலோகிராம் எடை கொண்டது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.