ஹவாயின் புதிய ஸ்மார்ட் டிவி பாப்-அப் கேமராவுடன் அறிமுகம்! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 10 ஏப்ரல் 2020 10:58 IST
ஹைலைட்ஸ்
  • ஹவாய் ஸ்மார்ட் ஸ்கிரீன் எக்ஸ் 65 சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
  • டிவியின் விலை சீன மதிப்பில் சிஎன்ஒய் 24,999 ஆகும்
  • ஹவாயின் இரண்டாவது பெரிய டிவி வெளியீடு 65 அங்குல ஸ்கிரீன் கொண்டுள்ளது

ஹவாய் புதிய 65 இன்ச் OLED டிவி, இப்போது சீனாவில் மட்டுமே கிடைக்கிறது

சீன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான ஹவாய், இப்போது Huawei Smart Screen X65-ஐ சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. Huawei Smart Screen V75-க்குப் பிறகு ஹவாய் நிறுவனத்தின் இரண்டாவது பெரிய டிவி இதுவாகும். மேலும், டிவி பற்றிய முழு விவரங்களையும் இங்கே படிக்கவும். 

    
டிவியின் விலை:

ஹவாய் ஸ்மார்ட் ஸ்கிரீன் எக்ஸ் 65-யின் விலை சிஎன்ஒய் 24,999 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,70,000)-யாகும்.

ஸ்மார்ட் ஸ்கிரீன் எக்ஸ் 65 எச்டிஆர் 10 தரத்தை ஆதரிக்கிறது

டிவியின் விவரங்கள்: 

ஹவாய் ஸ்மார்ட் ஸ்கிரீன் எக்ஸ் 65 என்பது, எச்டிஆர் 10 தரத்திற்கான ஆதரவுடன் 65 அங்குல ஓஎல்இடி டிவி ஆகும். டிவியின் அதிகபட்ச பிரகாசம் 1,000 நைட்ஸ், புதுப்பிப்பு வீதம் 120Hz மற்றும் கண் ஆரோக்கியத்திற்காக டி.யூ.வி ரைன்லேண்டால் காட்சி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. டிவியில், 14-ஸ்பீக்கர் அண்டர்-டிஸ்பிளே ஒலி அமைப்பு உள்ளது. இதில் ஆறு முழு-ரேஞ் இயக்கிகள், அதிகபட்சம் ஆறு ட்வீட்டர்கள் மற்றும் இரண்டு வூஃப்பர்கள் உள்ளன.

டிவி ஹவாய் நிறுவனத்தின் HarmonyOS-ல் இயங்குகிறது. இந்த டிவி ஓஎல்இடி டி.வி.களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட Honghu 898 பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது. ஹவாய் ஸ்மார்ட் ஸ்கிரீன் எக்ஸ் 65-யில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. இந்த டிவியில் 24 மெகாபிக்சல் பாப்-அப் கேமரா உள்ளது. இதன் மூலம் வீடியோ கால் மற்றும் பிற கேமரா செயலிகளை பயன்படுத்தலாம். 

 
KEY SPECS
Display 65.00-inch
Screen Type OLED
Resolution Standard 4K
Smart TV Yes
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Huawei, Huawei Smart Screen X65, Huawei Smart TV X65, Televisions
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. வாட்ஸ்அப்பின் ‘செடியூல்டு மெசேஜஸ்’ அம்சம் வெளியீட்டிற்கு முன்பே கசிந்தது, பல பயனுள்ள திறன்களை வழங்கக்கூடும்
  2. ஃபிஃபா உலகக் கோப்பைக்காக மெட்டா செயலிகளில் புதிய கால்பந்து அம்சங்கள் அறிமுகம்
  3. ஒப்போ ரெனோ 16 சீரிஸ் விலை, ஸ்டோரேஜ் வேரியண்ட்டுகள் ஐரோப்பிய சில்லறை விற்பனையாளர் பட்டியல் மூலம் கசிந்தது
  4. ரியல்மி நார்சோ டேஸ் விற்பனை: நார்சோ 100 லைட் 5G உட்பட பல போன்களுக்கு அதிரடி தள்ளுபடி
  5. ஒன்பிளஸ் N6 போனின் நிறங்கள் மற்றும் வடிவமைப்புடன் அதன் இந்திய அறிமுகத்தை டீஸ் செய்தது நிறுவனம்
  6. 8000mAh பேட்டரி, புதிய அலைவ் மேட்ரிக்ஸ் டிஸ்ப்ளேயுடன் டெக்னோ போவா 8 இந்தியாவில் அறிமுகம்: விலை விவரங்கள்
  7. 50MP டெலிஃபோட்டோ கேமராவுடன் மோட்டோ எட்ஜ் 70 ப்ரோ+ இந்தியாவில் விற்பனைக்கு வந்தது; விலை மற்றும் சலுகை விவரங்கள்
  8. ரியல்மி P4R 5G vs ஒன்பிளஸ் நார்டு CE6 லைட் 5G vs மோட்டோ G37 பவர் 5G: இந்தியாவில் விலை, சிறப்பம்சங்கள் ஒப்பீடு
  9. நெட்ஃபிக்ஸ் அப்டேட்: புதிய மொபைல் அனுபவம் மற்றும் கேமிங் திட்டங்கள் வெளியீடு!
  10. அமேஸ்ஃபிட் சீட்டா 2 ப்ரோ, சீட்டா 2 அல்ட்ரா அமேஸ்ஃபிட் பிப் மேக்ஸ் உடன் இந்தியாவில் அறிமுகம்: விலை, அம்சங்கள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.