8 மணி நேர பேட்டரியுடன் Mi ப்ளூடூத் நெக்பேண்ட், இந்தியாவில் அறிமுகம்!

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 18 ஜூலை 2019 11:37 IST
ஹைலைட்ஸ்
  • இந்த ஹெட்பபோன் ஜூலை 23 அன்று விற்பனையாகவுள்ளது
  • இந்த ஹெட்போன் வெறும் 13.6 கிராம் எடை மட்டுமே கொண்டுள்ளது
  • இதனுடன் Mi ரீ-சார்ஜபில் LED விலக்கும் அறிமுகமாகியுள்ளது

இந்த ஹெட்போன் மைக்ரோ-ஆர்க் காலர் வடிவமைப்பு கொண்டுள்ளது.

ரெட்மீ K20 ஸ்மார்ட்போன்களுடன் இந்தியாவில்  Mi ப்ளூடூத் நெக்பேண்ட் ஹெட்போனையும் அறிமுகம் செய்துள்ளது சியோமி நிறுவனம். மைக்ரோ-ஆர்க் காலர் வடிவமைப்பு கொண்ட இந்த ஹெட்போன்கள், ப்ளூடூத் v5.0 வசதியுடன் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 8 மணி நேரம் நீடிக்கும் பேட்டரி அளவை கொண்டுள்ளது. புது டெல்லியில் நடைபெற்ற அந்த நிகழ்வில் ஸ்மார்ட்போன்கள், ஹெட்போன் மட்டுமின்றி Mi ரீ-சார்ஜபில் LED விலக்கையும் சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 

நேற்று அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஹெட்போன், ஃப்ளிப்கார்ட் மற்றும் Mi ஆகிய தளங்களில் விற்பனையாகவுள்ளது. இந்த ஹெட்போனிற்கான விற்பனை ஜூலை 23-ல் துவங்கும் என அறிவித்துள்ளது சியோமி நிறுவனம். இந்த Mi ப்ளூடூத் நெக்பேண்ட் ஹெட்போன் 1,599 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. 

முன்பு கூறியதுபோலவே, இந்த ஹெட்போன் மைக்ரோ-ஆர்க் காலர் வடிவமைப்பு கொண்டுள்ளது. இந்த ஹெட்போன் வெறும் 13.6 கிராம் எடை மட்டுமே கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த ஹெட்போன் வாய்ஸ் அசிஸ்டன்ட் வசதி கொண்டுள்ளது. அதனால், தொலைப்பேசி அழைப்புகளை பேசிக்கொள்ளலாம். முன்பு கூறியதுபோல இந்த ஹெட்போன், ப்ளூடூத் v5.0 வசதி கொண்டு அறிமுகமாகியுள்ளது.

120mAh பேட்டரி அளவு கொண்ட இந்த ஹெட்போன், ஒருமுறை சார்ஜ் செய்தால் 8 மணி நேரம் நீடிக்கும் பேட்டரி திறனை கொண்டுள்ளது.

இந்த ஹெட்போனுடன் அறிமுகமான Mi ரீ-சார்ஜபில் LED விலக்கு, 1,499 ரூபாய் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. ஆனால், ஜூலை 18 அன்று நடைபெறவுள்ள இதன் விற்பனையில், 1,299 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. இந்த விலக்கு 5 நாட்கள் நீடிக்கும் பேட்டரி அளவை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.