SpO2 சென்சாருடன் வருகிறது Huawei Band 4 Pro! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 7 டிசம்பர் 2019 11:07 IST
ஹைலைட்ஸ்
  • தூக்க கண்காணிப்பு மற்றும் செயல்பாட்டு எச்சரிக்கை அம்சத்துடன் வருகிறது
  • Huawei Band 4 Pro 0.95-inch AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது
  • Huawei Band 4 Pro-வின் SpO2 சென்சார் இரத்த ஆக்ஸிஜன் செறிவை அளவிடுகிறது

Huawei Band 4 Pro என்பது Huawei Band 4-ன் சூப்-அப் பதிப்பாகும்

ஹவாய் தனது wearables portfolio-வில் ஒரு புதிய உடற்பயிற்சி பேண்டை சேர்த்தது - Huawei Band 4 Pro. ஹூவாய் சமீபத்திய பேண்ட் இதய துடிப்பு சென்சார் மற்றும் இரத்த ஆக்ஸிஜன் செறிவு அளவை அளவிடுவதற்கான SpO2 சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. Huawei Band 4 Pro, 0.95-inch AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. மேலும், தொடர்பு இல்லாத கட்டணங்களைச் செய்வதற்கான NFC ஆதரவையும் வழங்குகிறது. கூடுதலாக, Huawei Enjoy 10S போனின் புதிய வேரியண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.


Huawei Band 4 Pro-வின் விலை:

Huawei Band 4 Pro-வின் விலை CNY 399 (சுமார் ரூ. 4,000) ஆகும். இது Black, Pink மற்றும் Red ஆகிய மூன்று வண்ணங்களில் வருகிறது. இது இப்போது சீனாவில் முன்கூட்டிய ஆர்டர்களுக்கு தயாராக உள்ளது மற்றும் டிசம்பர் 12 முதல் வாங்கலாம். Huawei Band 4 Pro இந்தியா உள்ளிட்ட சர்வதேச சந்தைகளில் கிடைப்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை.


Huawei Band 4 Pro-வின் சிறப்பம்சங்கள்: 

Huawei Band 4 Pro, 240x120 pixels தெளிவுத்திறன் உடன் 0.65-inch AMOLED டிஸ்பிளேவைக் கொண்டது. இது ஒரே நேரத்தில் 40 சீன எழுத்துக்களைக் காண்பிக்கும் திறன் கொண்டது. தனிப்பயனாக்கலுக்கு, பயனர்கள் முன்பே ஏற்றப்பட்ட 100 வாட்ச் முகங்களுக்கு இடையே தேர்வு செய்யலாம். அம்சங்களைப் பற்றி பேசுகையில், Huawei Band 4 Pro வழிசெலுத்தலுக்கான உள்ளமைக்கப்பட்ட GPS-ஐ வழங்குகிறது, மேலும் தொடர்பு இல்லாத கட்டணங்களை அனுமதிக்க NFC ஆதரவையும் கொண்டுள்ளது.

Huawei Band 4 Pro இதய துடிப்பு டிராக்கர் மற்றும் இரத்தத்தில் ஆக்ஸிஜன் கொண்டு செல்லும் மூலக்கூறுகளின் செறிவை அளவிடக்கூடிய ஒரு SpO2 மானிட்டருடன் பொருத்தப்பட்டுள்ளது. இது பொதுவாக இரத்த ஆக்ஸிஜன் செறிவு நிலை என குறிப்பிடப்படுகிறது. புதிய பேண்டானது, அடிப்படையில் Huawei Band 4ன் சூப்-அப் பதிப்பாகும், இது தூக்க கண்காணிப்புக்கான Huawei TruSleep 2.0 தொழில்நுட்பத்துடன் வருகிறது. ஓடுதல், நீச்சல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் போன்ற 11 வகையான பயிற்சிகளையும் இது கண்காணிக்க முடியும்.


புது வேரியண்ட் பெறும் Huawei Enjoy 10S:

கூடுதலாக, Huawei Enjoy 10S-ன் புதிய மாடலையும் Huawei அறிமுகப்படுத்தியுள்ளது. இது அக்டோபரில் அதிகாரப்பூர்வமாக வெளியானது. புதிய Huawei Enjoy 10S வேரியண்ட் ரேம் அளவை 8 ஜிபி வரை உயர்த்துகிறது, அதே நேரத்தில் உள் சேமிப்பு திறன் 128 ஜிபியாக உயர்த்தப்பட்டுள்ளது. பழைய வேரியண்டில் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் சேமிப்பு உள்ளது. Huawei Enjoy 10S-ன் புதிய 6 ஜிபி 128 ஜிபி வேரியண்ட்டின் விலை CNY 1,999 ஆக உள்ளது. இது ஏற்கனவே சீனாவில் Vmall வழியாக விற்பனைக்கு வந்துள்ளது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ChatGPT-இல் Chats-ஐ Delete மற்றும் Archive செய்வது எப்படி? – படிப்படியாக நீக்கும் முறைகள் இங்கே
  2. Realme 16T 5G, P4R 5G இந்தியாவில் விரைவில் அறிமுகம் – நிறங்கள், ஸ்டோரேஜ் தகவல் வெளியீடு
  3. இந்த வாரத்தின் சிறந்த OTT வெளியீடுகள் (மார்ச் 9 - மார்ச் 15): என்னென்ன படங்கள்ன்னு பாருங்கள்
  4. Samsung Galaxy M17e 5G இந்திய விலை லீக் – மார்ச் 17 அறிமுகத்திற்கு முன் தகவல்
  5. Motorola அறிமுகப்படுத்திய Motorola Edge 70 Fusion+ – Triple Camera, 5,200mAh பேட்டரி
  6. iPhone Fold-ல் iPad போன்ற UI, Split-Screen Apps ஆதரவு வரலாம்
  7. James Webb Space Telescope-ன் புதிய கண்டுபிடிப்பு: Jupiter ஆரோராவில் Io, Ganymede தடயங்கள்
  8. Meta Platforms மோசடி தடுப்பு கருவிகளை விரிவுபடுத்துகிறது – WhatsApp-ல் புதிய Device Link எச்சரிக்கை
  9. Xiaomi 17 Ultra இந்தியாவில் அறிமுகம் – 200 மெகாபிக்சல் Leica கேமரா, தொடர்ச்சியான Optical Zoom: விலை மற்றும் அம்சங்கள்
  10. Vivo Y51 Pro 5G இந்தியாவில் அறிமுகம் – 7,200mAh பேட்டரி, 50 மெகாபிக்சல் கேமரா: விலை மற்றும் விவரங்கள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.