வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் ப்ளான் இப்போது இரட்டிப்பு டேட்டாவை வழங்குகிறது!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 23 மே 2020 11:32 IST
ஹைலைட்ஸ்
  • இந்த வோடபோன் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளான் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்
  • ரூ.98 ப்ளானில் பேச்சு நேரம் கிடைக்கவில்லை
  • இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டத்தில் இரட்டிப்பு டேட்டா கிடைக்கும்

வோடபோன் ஐடியா ரூ. 98 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளானில் 12 ஜிபி அதிவேக டேட்டா பலன்களை வழங்குகிறது

Vodafone Idea தனது ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளானை ரூ.98 ஆக மாற்றியுள்ளது. இந்த ப்ளானில், வாடிக்கையாளர்களுக்கு 12 ஜிபி அதிவேக டேட்டா வழங்கப்படும். இதன் பொருள் நிறுவனம் இப்போது இந்த ப்ளானுடன் இரட்டிப்பு டேட்டாவை வழங்கும். முன்னதாக, ரூ.98 ப்ளானில் 6 ஜிபி அதிவேக டேட்டா கிடைத்தது.

சில நாட்களுக்கு முன்பு, ஏர்டெல் தனது ரூ.98 ரீசார்ஜ் ப்ளானில் 12 ஜிபி டேட்டா கொடுக்க முடிவு செய்தது. இன்றைய நிலவரப்படி, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா அவர்களின் ரூ.98 ப்ரீபெய்ட் ப்ளானில் 28 நாட்கள் செல்லுபடியை வழங்கிறது. ஆனால், குரல் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் வசதி இல்லை.

Vodafone தளத்தின் அதிகாரப்பூர்வ பட்டியலின்படி, ரூ.98 வோடபோன் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளானில் 12 ஜிபி டேட்டாவுடன் 28 நாட்கள் செல்லுபடியாகும். Idea-வின் வலைத்தளத்திலும் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இங்கேயும், பயனர்கள் ரூ.98 பேக்கிலிருந்து ரீசார்ஜ் செய்வதில் இரு மடங்கு டேட்டாவைப் பெறுவார்கள்.

வோடபோன் ஐடியா இதுவரை தனது ரூ.98 ரீசார்ஜ் ப்ளானுடன் அதிவேக டேட்டாவை மட்டுமே வழங்கியுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், பேச்சு நேரத்தை எதிர்பார்ப்பது தவறு.

ஓன்லிடெக் படி, ரூ.98 ரீசார்ஜ் பேக்கில் 12 ஜிபி டேட்டாக்களின் பலன் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் பொருள் உங்கள் வட்டத்தில் இந்த சலுகை நேரலையில் இல்லை என்றால், நீங்கள் 6 ஜிபி டேட்டாவை மட்டுமே பெறுவீர்கள்.

இன்றைய நிலவரப்படி, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, கேரளா, மும்பை மற்றும் கிழக்கு உத்தரப்பிரதேச வட்டாரங்களில் 12 ஜிபி டேட்டா கிடைக்கிறது. எதிர்வரும் நாட்களில், மற்ற வட்டங்களிலும் இரட்டிப்பு டேட்டா கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, Airtel 6 ஜிபிக்கு பதிலாக 12 ஜிபி டேட்டாவை ரூ.98 ப்ரீபெய்ட் பேக்கில் கொடுக்க முடிவு செய்திருந்தது.


Which is the bestselling Vivo smartphone in India? Why has Vivo not been making premium phones? We interviewed Vivo's director of brand strategy Nipun Marya to find out, and to talk about the company's strategy in India going forward. We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Rs 98 Vodafone prepaid recharge plan, Vodafone Idea, Idea, Vodafone
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டிசைனிங் கத்துக்கணுமா? அடோப் டூல்ஸ் இப்போ ஃப்ரீ! இந்திய மாணவர்களுக்கு 'அடோப்' தந்த செம்ம கிப்ட்
  2. WhatsApp குரூப்ல இப்போதான் சேர்ந்தீங்களா? கவலைப்படாதீங்க! பழைய 100 மெசேஜ்களை இனி நீங்க படிக்கலாம்
  3. ஜியோ ஹாட்ஸ்டார் சாட்ஜிபிடி வேற லெவல் என்டர்டைன்மென்ட்! இனி நம்ம ஊர் மொழியிலேயே பேசி படங்களைத் தேடலாம்
  4. சாட்ஜிபிடி இப்போ நம்ம காலேஜுக்குள்ளயே வந்துடுச்சு! 1 லட்சம் மாணவர்களுக்கு ஸ்பெஷல் கோர்ஸ்.. ஓபன் ஏஐ-யின் அதிரடி பிளான்
  5. டெல்லியில் 1,100-க்கும் மேற்பட்ட போலி நதிங், CMF பொருட்கள் பறிமுதல்! கூகுள் போல நதிங் நிறுவனமும் எச்சரிக்கை - முழு விவரம்
  6. இனி இன்டர்நெட் வேகம் வேற லெவல்ல இருக்கும்! கடலுக்கு அடியில் கூகுள் போடும் புதிய கேபிள் ரூட்கள்
  7. கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஜியோவின் மெகா கிப்ட்! ரூ.1457 பெனிபிட்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே
  8. Pixel 10a வந்தாச்சு மக்களே! தரமான கேமரா, வேற லெவல் பேட்டரி.. ஐபோனுக்கு செம்ம டஃப் கொடுக்கும் போலயே
  9. இனி டேட்டா கேபிள் தேவையில்லை! Pixel 9 போன் வச்சிருக்கீங்களா? ஐபோனுக்கு அசால்ட்டா ஃபைல் அனுப்பலாம்
  10. மே 19-ல் கூகுள் போடப்போகும் மெகா பிளான்! Android 17 முதல் Gemini AI வரை - முழு விபரம் இதோ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.