வோடபோன் ஐடியாவின் ரூ.29 ரீசார்ஜ் ப்ளானில் எவ்வளவு நேரம் டாக்டைம்?

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 22 மே 2020 14:25 IST
ஹைலைட்ஸ்
  • ரூ.29 வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் பேக் ரூ.20 பேச்சு நேரத்துடன் வருகிறது
  • இந்த பேக் 100 எம்பி டேட்டா பலன்களையும் வழங்குகிறது
  • புதிய ப்ளான் தற்போது டெல்லி வட்டத்தில் மட்டுமே கிடைக்கிறது

வோடபோன் ஐடியா ரூ.29 ப்ரீபெய்ட் ப்ளான் குரல் அழைப்பு கட்டணத்திற்கு நிமிடத்திற்கு 30 பைசாவாக இருக்கும்

வோடபோன் ஐடியா ரூ.29 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளானை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளுடன் வருகிறது. இது 14 நாட்களுக்கு 100 எம்பி அதிவேக டேட்டா மற்றும் ரூ.20 பேச்சு நேரத்தை வழங்குகிறது. புதிய வோடபோன் ஐடியா ரீசார்ஜ் ப்ளான் வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு "ஆல்-ரவுண்டர்" ஆப்ஷனாக கிடைக்கும். அதே நேரத்தில் ஐடியா சந்தாதாரர்களுக்கு இது "ரேட்கட்டர்" பேக்காக கிடைக்கும்.


ப்ளானின் விவரங்கள்:

Vodafone தளத்தின் அதிகாரப்பூர்வ பட்டியலின்படி, ரூ.29 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளான் ரூ.20 பேச்சு நேரத்தை வழங்குகிறது, இது குரல் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் மட்டுமே பயன்படுத்த முடியும். அனைத்து உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகள் வினாடிக்கு 2.5 பைசா என்ற விகிதத்தில் இருக்கும். இந்த ரீசார்ஜ் பேக்கில் 100 எம்பி அதிவேக டேட்டாக்களும் கிடைக்கும். இந்த ப்ளான் 14 நாட்கள் செல்லுபடியாகும்.

வோடபோன் தளத்தில் ரூ.29 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளானின் விவரங்கள்.

வோடபோன் பயனர்களைத் தவிர, இந்த ரூ.29 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளான் Idea வாடிக்கையாளர்களுக்கும் இதே போன்ற ப்ளன்களை தருகிறது. நிறுவனத்தின் வலைத்தளத்தின்படி, வோடபோனைப் போலவே, வாடிக்கையாளர்களுக்கும் 100 எம்பி டேட்டா மற்றும் ரூ.20 பேசும் நேரம் கிடைக்கும். இதுவும் பயனர்கள் அழைப்பதற்கு வினாடிக்கு 2.5 பைசா செலுத்த வேண்டும்.

Vodafone Idea அறிமுகப்படுத்திய ரூ.29 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளான் தற்போது டெல்லி வட்டத்தில் மட்டுமே உள்ளது. இதன் பொருள் தற்போது மற்ற வட்டங்களில் இதைப் பயன்படுத்த முடியாது. வோடபோன் ஐடியா புதிய ப்ளானை மற்ற வட்டங்களில் வரும் நாட்களில் கிடைக்கச் செய்யும்.

தொலைத் தொடர்பு மையமான ஓன்லிடெக் குறிப்பிட்டுள்ளபடி, வோடபோன் முதலில் தேசிய, உள்ளூர் மற்றும் ரோமிங் அழைப்புகளை நிமிடத்திற்கு 30 பைசா என்ற அளவில் மாற்ற ரூ.29 ப்ளானை அறிமுகப்படுத்தியது. இது 7 நாட்கள் செல்லுபடியாகும். இருப்பினும், டிசம்பரில் கட்டண உயர்வுக்கு முன்னர் இந்த ப்ளான் கைவிடப்பட்டது.


Which is the bestselling Vivo smartphone in India? Why has Vivo not been making premium phones? We interviewed Vivo's director of brand strategy Nipun Marya to find out, and to talk about the company's strategy in India going forward. We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Rs 29 Vodafone prepaid recharge plan, Vodafone Idea, Vodafone, Idea
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Xiaomi 16: 50MP கேமரா, 7000mAh பேட்டரி, Snapdragon 8 Elite 2! செப் 24ல விற்பனை
  2. Realme P3 Lite 5G: 6000mAh பேட்டரி, 50MP கேமரா, ₹12,999! செப் 13-ல ரிலீஸ்!
  3. iPhone 17: ₹82,900-க்கு 120Hz ProMotion, A19 சிப், Apple Intelligence! ஆப்பிளின் புது மாஸ் போன்!
  4. iPhone 17 Pro & Pro Max: 48MP ட்ரிபிள் கேமரா, 8X ஜூம், A19 Pro! ₹1,34,900-ல மாஸ்
  5. iPhone Air: 5.6mm ஸ்லிம் டிசைன், ₹1,19,900-க்கு Apple Intelligence! iPhone 16 Plus-ஐ ரீப்ளேஸ் பண்ணுற புது ஹீரோ!
  6. Apple Watch Series 11, Ultra 3, SE 3: 5G, சாட்டிலைட் SOS, ஹைபர்டென்ஷன் அலர்ட்ஸ்! ₹25,900-லிருந்து! #AppleWatch #AweDropping
  7. iPhone 17 Air: 5.5mm மெல்லிய டிசைன், ₹80,000-க்கு 5G! ஆப்பிளின் புது ஸ்லிம் ஹீரோ!
  8. Apple Watch Series 11, Ultra 3, SE 3: 5G RedCap, S11 சிப், சாட்டிலைட் SOS! #AweDropping இவென்டில் அறிமுகம்! #AppleWatch
  9. iPhone 17 Pro-ல 8X ஜூம், 5,000mAh பேட்டரி, வேப்பர் கூலிங்! 'Awe Dropping' இவென்டுக்கு முன் பெரிய லீக்ஸ்
  10. iPhone 17 Air, Watch Series 11, AirPods Pro 3! ஆப்பிளின் 'Awe Dropping' இவென்ட் இன்று 10:30 PM IST-ல லைவ்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.